CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, February 28, 2008

பிப்ரவரி 17 அறிமுகமானாள் என் கனவு தேவதை..

பிப்ரவரி 17 அட இன்னிக்கு ஞாயிற்றுகிழமை..எப்பவும் போல 10 மணிக்கு எந்திருச்சு காலைகடன் முடிச்சு காலையில சிக்கனோட இட்லி..நல்லா தான் இருந்துச்சு ..சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன்.
திடீர்னு ஒரு யோசனை ..3 கிலோ மீட்டர் தாண்டினா பிரண்டு வீடு.அவன கூட்டிகிட்டு கோவளம் பீச்சுக்கு போலாம்.அங்க நிறைய கலர் கலரா பிகர்ஸ் வரும்.அப்படியே சைட் அடிச்சமா ன்னு நம்ம பிரம்மா மூணு நாளுக்கு முன்னாடி வந்து சொல்லிட்டு போன அந்த தேவதை மாட்ட மாட்டாளான்னு மனசு மூலையில
சின்னதா ஒரு ஏக்கம்.னு பொய் சொல்ல மாட்டேன் மனசு முழுக்க அவள பத்தி மட்டும் தான் நினைச்சிருந்தேன்..

ஏக்கத்தோடயே வழக்கமா நான் போடற கேஷிவல்ல இருந்து பார்மல் ட்ரஸ்க்கு மாறி கிளம்பலாம்னு முனியம்மாவை ஒரு உதை உதைச்சேன்..

"டேய் அண்ணா, எங்க போற" தங்கச்சிங்க எப்பவுமே இவ்ளோ மரியாதையா தான் கூப்பிடுவாங்க..

"( போவும் போதேவா) என்ன இப்ப"
" அம்மா அப்பாலாம் கிளம்பறாங்க வெளிய போகணுமாம்,அவங்க கூட உன்னையும் வரசொல்றாங்க"

"எதுக்கு எங்க போறாங்களாம்.இருக்கரதே ஒரு நாள் லீவு.அதைக்கூட" அப்படின்னு வண்டிய ஆப் பண்ணிட்டு வீட்டுக்குள்ள போய்

" என்ன எங்க போறீங்க நான் எதுக்கு வரணும்.எப்ப பாரு"

"கீதா அந்த போட்டோவ அண்ணா கிட்ட காட்டு.அதை பார்" அம்மா முடித்தாள்

" என்ன போட்டோ,எதுக்கு நான் பார்க்கணும் தெளிவா எதாச்சும் சொல்லுங்களேன்" டென்சனா முறைச்சேன் தங்கச்சிய

" இந்தாடா எவ்ளோ அழகா இருக்கு பாரு அண்ணி.உனக்கு பொண்ணு பார்க்க தான் போறீங்க எல்லாரும்"
ரகசிய மூட்டை அவிழ்த்தாள் தங்கை.

" எனக்கென்ன அவசரம் கல்யாணத்துக்கு.என்ன வயசாச்சி இப்ப.அதெல்லாம் முடியாது,என்னை விட்ருங்கோ"
வெறுப்பாய் பேசினேன்.

" டேய் எவ்ளோ அழகா இருக்காங்கடா அண்ணி, மிஸ்பண்ணிடாதே போட்டோ மட்டும் பாரு, உனக்கே பிடிச்சுடும்"

" இங்க பாருப்பா உனக்கு இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிவெக்க ஆசையா என்ன? நல்ல பொண்ணுடா.ரொம்ப அழகா இருக்கா..விசாரிச்சதில் எல்லாம் நல்லவிதமா தான் சொல்றாங்க.அதான் விடமுடியலை.எங்களுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு.என்ன வயசாகலை உனக்கு..அதெல்லாம் கல்யாணம் பண்ர வயசுதான்" அப்பா வழக்கம் போல நீண்ட வகுப்பெடுத்தார்..

எனக்கும் ஒரு சின்ன ஆசை என்னோட தேவதையா இவளே இருந்துட்டா..சட்டென்று.

"போட்டோவ காட்டு பாத்துட்டு அப்புறமா முடிவு பண்ணலாம்.ஆனா எங்கிட்ட இவ்ளோ நாள் மறைச்சிவெச்சீங்க" மெதுவா சொல்ல

"திடீர்னு அமைஞ்சது.உன் போட்டொ எல்லாம் குடுத்தனுப்பிச்சு பொண்ணும் சரின்னு சொன்னதுக்கப்புறம் சொல்லிக்கலாம்னு தான்" அம்மா

அவர்கள் அதன் பின் பேசிகொண்டதெதையும் காதில் வாங்காமல் ரசித்துகொண்டிருந்தேன்..பின்ன என்னங்க இவ்ளோ அழகா முகத்திலே தெரியுதுங்க எனக்கு ஏத்த மனைவியா இவ இருப்பாள் என்று..

மூன்றாம் பிறை யளவு நெற்றி.சின்னதாய் ஒரு பொட்டு.அதன் இருபுறங்களும் ஆண்மையை தாக்கும் அம்புகளை எய்தும் வில்லாய் இரு புருவங்கள்.கருப்பு வண்ணமீன் கொண்ட அழகிய குளம் இரண்டு வில்லுக்கு ஏதுவாய் வளைந்து கொண்டீருக்க..

ரொம்பவே மெனகெட்டு பலமாதங்களாய் செதுக்கப்பட்ட சிற்பத்தின் வேலை பாடுகளுக்கு ஈடான ஒரு மூக்கு. பலாச்சுளையின் இதழ்களையும் ரோஜாவின் வண்ணத்தையும் குழைந்தெடுத்த உதடுகள் அழகாய் எனக்கென காதல் சொல்ல ததும்புவது போல் புகைப்படத்திலே உணர்ந்த அந்த நொடிகள். ஹப்பா சந்தனக்கட்டையை குழைத்தெடுத்த வண்ணம் கொண்ட தோல்.இப்படி ஏகத்துக்கும் என்னால் என் மனதுக்குள் வர்ணிக்கபட்டு கொண்டிருந்தாள் என் தேவதை..ஏனோ இன்னும் சிறப்பாய் வர்ணிக்க வார்த்தைகளை தேடி தமிழ் கடலுக்குள் குதிக்கிறேன்..வார்த்தை அலைகள் என்னை அடித்துவிட்டு போகிறதே தவிர அவளுக்கான வார்த்தைகளை என்னால் தான் தேர்ந்தெடுக்கமுடியாமல் சிக்குகிறேன்..

"என்னடா அண்ணா பகல்லயே கனவா' போய் முதல்ல பாத்து பேசி முடிச்சுட்டு வாங்க.அப்புறம் பாத்துக்கலாம்.அம்மா அப்பாலாம் எப்பவோ பாலண்ணா கார்ல போய் உக்காந்தாச்சு ..போடா" இவ்ளோ மரியாதை யும் கிண்டலும் வேற யாரு கீதா தான்.

வேக வேகமா போய் காரில் அமர்கிறேன்.முப்பது கிலோமீட்டர் பயணம் என் பொறுமையை சோதித்து கொண்டிருக்க ஏனோ வாகன நெரிசல்களை வெறித்துகொண்டிருக்கிறேன் கண்ணாடி வழியே..

ஒரு யுகம் கடந்ததை உணர்கிறேன்.தேவதை மாளிகையின் வாயிலை அடைந்ததும்..மனதிற்குள் ஒரு சின்னதாய் வலி ..பரிட்சையின் முடிவை எதிர்பார்க்கும் மாணவன் போல..

வழக்கம் போல இனிப்பு காரம் காபி என முடிகிறது.தேவதையின் அம்மா கையாலே..

என் ஏமாற்ற முகம் கண்ட என் அம்மா " பொண்ணை வரசொல்லுங்க,சம்பிரதாயத்துக்காக பாத்துடலாம்.எங்களுக்கு ஏற்கனவே பிடிச்சுடுச்சு..இருந்தாலும் பையனுக்காக"

(அம்மான்னா அம்மா தான்) மெலிதாய் ஒரு வழிச்சலோடு தலையை குனிகிறேன்.

"பொண்ணை பார்க்கறது என்ன .பேசவே சொல்லுங்க.அவ ரொம்ப வெட்க பட்டுகிட்டு மேலயே இருக்கா" கையை மேலெ காட்டியபடி பொறிந்து தள்ளுகிறார் கம்பீரகுரலில் மாமனார்.

குரலைகேட்ட படி கையின் திசைநோக்கி வேகமாக பயணிக்கிறேன்..மேலே

"ரொம்ப அவசரம் போல மாப்பிள்ளைக்கு" மாமியார் சொல்லி சிரிக்க அறையே சிரிப்பு சத்தத்துடன் ..ஏனோ மெதுவாக கூட போக தோணவில்லை..

வேகவேகமாக மாடியேறி கதவின் அருகே நின்றுவிட்டேன்.மரமண்டை இவ்ளோ தூரம் ரசிச்சு வர்ணிச்ச ..பேர கேக்கலியே என்ன சொல்லி கூப்பிடுறது என்னையே திட்டிகொண்டேன்..

சரி என்ன கெட்டுபோச்சு.தேவதை மாதிரி இருக்கா தேவதான்னு கூப்பிடலாம் தோண

" ஹாய் தேவதா நான் தணிகை வந்திருக்கேன்.உள்ள வரலாமா" வார்த்தைகள் பாம்பின் வாயிலிருக்கும் தவளையின் துடிப்பை போல கொஞ்ச கொஞ்சமாய் காற்றோடு கலந்து பயணிக்கிறது அவளது வளைவுநெளிவுகள் கொண்ட காதுக்கு..

வேக வேகமாய் ஒரு திறவல்.சொர்கத்தின் உள்ளே நின்று தேவதை என்னை அழைப்பதற்காய் மௌனம் மட்டுமே அல்லாது காற்றோடு சேர்ந்த மெல்லிய சத்தம் சைகைகளோடு சேர்ந்து அபிநயங்கள் கொண்டாடும் நாட்டிய பேரொளியாய் அவள் 'வாங்க " என்றாள்.

நானும் மெதுவான ஆனால் மனம் மட்டும் ஒரு புது உத்வேகத்துடனே உள்ளே சென்று கட்டிலில் உட்கார்ந்து நேருக்கு நேராய் அவளை பார்க்கமுடியாத என் கண்களை திட்டிக்கொண்டு சுழலவிடுகிறேன் பார்வையை.அறையின் அவளல்லாத பக்கங்களை..

சுழலும் இடமெங்கும் ரசனைகளின் அரசியென தெரிகிறது என்னவளின் அறையில் மாட்டபட்ட இயற்கை ஓவியங்களின் கண்ணாடி பூட்டப்பட்ட புகைப்படங்கள்.

மெதுவாய் என் அருகில் வந்து என்னை பார்த்தவள் என் கண்களை நோக்க அடுத்த நிமிடம் என்னையறியாமல் ஆடும் என் காலிலை தூக்கி இன்னொரு காலின் மேல் போட்டுகொண்டு "தப்பா எடுத்துகலைன்னா" என்று திக்கினேன்.

"இதையெல்லாம் ஆணாதிக்க போர்வைக்குள் செலுத்தி பார்க்கும் அளவுக்கு நான் இல்லை தாராளமாக" என்று சரளமாக நாட்டியமாடும் இதழ்களை பார்த்துகொண்டிருந்தேன்..

அட என்னடா இது நம்ம குழுமத்தில் இருக்கும் ஏதாச்சும் சைலண்ட் ரீடரா இந்த பொண்ணு ன்னு மனசுக்குள் தோணி "உங்க" முடிக்கிறேன்.

"ஆமா நான் கேக்கணும் உள்ள வரும் போது என்ன பேர் சொல்லி கூப்பிட்டீங்க" என்றாள்.

என்னடா இது நாம நினைச்சா இவ சொல்லிடறாளே.இவ தான் நமக்கு சரியான துணை என்று நினைத்துக்கொண்டே

"தேவதான்னு சொன்னேன்" நான்.

" யார் சொன்னது என் பேர் தேவதா ன்னு ,நான் யார்கிட்டயும் பேர் சொல்லகூடாதுன்னு தானே சொல்லிவெச்சேன்" அவள் மெதுவாய் கதவின் வழி பார்வை செலுத்த.

"இல்லை யாரும் சொல்லலை.நானே தான் பேர் தெரியாம தேவதை மாதிரி யிருக்கரதாலே தேவதான்னு கூப்பிட்டேன்.அதான் உங்க பேரா?" கேள்வியோடு மிகபெரிய சந்தோசகடலில் நீச்சலடிக்கிறேன் நீண்ட வசனம் ஒன்றை பேசியதற்காய்..

"பரவாயில்லையே.நல்ல ரசனையாளர் தான் போல நீங்க,கெஸ்ஸிங் ல யே பேரை கண்டுபிடிச்சிட்டீங்க" இன்னும் நெருக்கமான பார்வையோடு .

"உங்களை பத்தி சொல்லுங்களேன்" ன்னு நான் முடிப்பதற்குள்

"ரெண்டு பேரும் கீழ வரீங்களா.எல்லாம் கல்யாணத்துக்கப்புறம் பேசிக்கலாம்.இப்ப நாள் குறிக்க போறாங்களாம் கல்யாணத்துக்கு"
அவளின் தங்கை..

" நாங்க இன்னும் பேசவே ஆரம்பிக்கலை.நாளெல்லாம் அவங்களே குறிச்சிக்க சொல்லும்மா.நாங்க வரலை" அப்படின்னு அதட்டலும் கெஞ்சலும் சேர்ந்து நான் வழிய.

" எல்லாம் பேசிக்கலாம் காலம் முழுக்க நீங்க ரெண்டுபேரும் தானே பேசப்போறீங்கன்னு" கோரஸா கீழ இருந்து வர

" வாங்க நாம எங்கயாச்சும் வெளிய போய் பேசிக்கலாம்னு" அவ

" இல்ல பார்க் பீச்சுன்னு எங்க போய் பேசினாலும் சாந்தி அக்கா திட்டுவாங்க வேணாம்.நாம உள்ளேயே பேசலாம்" நான் முடிப்பதற்குள்

திரும்பவும் அதே கோரஸ் போடவே நானும் அவளும் ஒன்னா போய் நாங்க பேசணும் எங்களை விட்டுடுங்க ன்னு கோரஸா கத்தலாம்னு முடிவு பண்ணி போய்ட்டு

நாங்க பேசணும் எங்களை விட்டுடுங்க ன்னு கத்துறோம்.

"டேய் அண்ணா என்னடா எப்பவுமே பத்துமணிக்கு எழுந்திருக்கரவன் இன்னிக்கு 12 மணிக்கு வரையும் தூங்கறானேன்னு பார்த்தா கனவு கண்டுட்டு இருக்கியா" ன்னு என் தங்கச்சி சொல்லிட்டு இருந்தா..

ச்சீ இதுவும் கனவா ன்னு எழுந்து நொந்துகிட்டே போக என் அம்மா பாத்த பார்வையிருக்கே அப்படியே தலைய குனிஞ்சுண்டு பிரஷ் எடுத்துட்டு வெளிய வந்துட்டேன்...


என்ன மக்கா எல்லாரும் எதோ இருக்குன்னு தானே உள்ள வந்தீங்க..எனக்கு கனவுல மட்டும் தான் லே இந்த மாதிரி எல்லாம் நடக்கும்..நிஜமா நடக்கும் போது சொல்லவே மாட்டேன் உங்ககிட்ட..வர்ட்டா

Wednesday, February 27, 2008

காதலை நான் துரத்திய பொழுதுகள் பாகம் -2

அடடே என்னாங்க இந்த தொடர் எழுத ஆரம்பிச்சு ரொம்ப காய்ச்சல்ல படுத்துட்டேன்..இன்னிக்கு தான் கொஞ்சம் பரவாயில்லை..வந்து பாத்தா சபா செம கலை கட்டுது..ம்ம்ம் நான் இல்லைனாலே எல்லாரும் ஜாலியா தான்இருக்கீங்க போல,....

இருந்தாலும் நான் சும்மா இருப்பேனா??அன்னிக்கு நடந்த கதைய உங்க கிட்ட சொல்லாம விடமாட்டேன்னு முடிவோடவே ஆபிஸ் வந்துட்டேன் இன்னிக்கு....

ம்ம்ம் எங்க விட்டேன் அன்னிக்கு.............ஆம் ஞாபகம் வந்துடுச்சு..அந்த எஞ்ஜினியரிங் காலேஜ் பஸ் ஸ்டாப்...

இந்த இடத்தில் முக்கியமா நான் ஒரு ஆளை உங்கமுன்னாடி காட்டணும்.யார்ன்னு பாக்கறீங்களா..நானும் அவரை பார்த்ததில்லை..பெருசுங்கன்னு சொன்னா சண்டைக்கு வரமாட்டீங்களே
அக்காஸ்& அண்ணாஸ்.....[நம்ம பெருசுங்க சொல்லி தான் நான் அந்த ஆள் பற்றி கேள்வி பட்டிருக்கேன்....அதாங்க பிரம்மன்...படைத்தல் வேலை செய்வாராம் மேலுலகத்தில்...

என்ன ஆளுங்க அவரு ...எப்பா இன்னாமா ரசிச்சு ரசிச்சு படைக்கிறான் பெண்களை...அய்யோ அப்படியே கண்ல ஒத்திக்கலாம்னு போல கீதுங்க..
அதனால அவருக்கு ஒருதபா பெரிய தாங்க்ஸ் னு சொல்லிகினு இப்ப

அந்த பொண்ணோட அழகபத்தி வர்ணிக்கிறேன்..தூரத்தில் இருந்தே மெதுவா வண்டிய ஓட்ட ஆரம்பிச்சேன்..இன்னா அழகுப்பா ..அப்படியே செதுக்கி இருக்கானுக ..ஒவ்வொன்னையும் அவ்ளோ தான் இதுக்கு மேல
இன்னா வார்த்தை சொன்னாலும் அந்த புள்ளையோட அழக வெளிசொல்லமுடியும்னு எனக்கு தோணலைங்க...

அப்படியே கிட்ட போறேன் நான்..அட அந்த புள்ள லிப்ட் கேக்குது..
நம்ம புள்ளாண்டானுங்களும் நிக்கானுக...எங்கடா வண்டிய நிறுத்தினா
பொண்ணுங்களுக்கு மட்டும் நிறுத்தறானுக ன்னு கேவலமா லுக் வுடுவானுகளேன்னு போயிடலாம்னு நிறுத்தாம பொறுமையா வே போனேன்..

'சார் ரொம்ப அர்ஜண்ட்டா போகணும் பஸ்ஸே வரமாட்டேங்குது,பிளீஸ் தாம்பரம் வரைக்கும் விட்டுடுங்க '"அப்படீன்னு அவதாங்க...

அழகு கொஞ்சபடலாம் ,கெஞ்சவிடலாமாடா தணின்னு என் மனசாட்சி சொல்ல சக் சக்னு ரெண்டு ஜர்க் வழக்கமா நாம் பிரேக் போடுற ஸ்டைலே இதான்

"ஹையோ சாரிங்க,நான் தாம்பரம் போலியே,மறைமலைநகர் தான் போறேன்" என்ன பண்ண "அப்படியே வழிஞ்சுட்டு நிண்றேன்.

"பரவாயில்ல சார் ,வண்டலூர்ல விட்டுடுங்க அங்கயிருந்து நிறைய பஸ் போகும்,நான் போயிக்கறேன்" அவ மீண்டும்

அடேய் தணிகா அழகா பொறந்துட்டாளே இதாண்டா உனக்கு பிரச்சினை..இப்பா பாரு என்ன சொன்னாலும் இந்த பிகரு உன்னை விடமாட்டேங்குதுன்னு மனசு சொல்ல அப்படியே வழிஞ்சுகிட்டு .

'ஓகேங்க உக்காருங்க விட்டுடறேன் ன்னு முடிச்சேன்..

"ரொம்ப நன்றி சார்..நீங்க தப்பா எடுத்துக்கலன்னா என் பிரண்டும் கூப்பிட்டுக்கறேன்..என்ன சார்" என்றாள்

எனக்கு ஒரே குஷி,மச்சக்காரண்டா நீயி..ஒன்னு தெரிஞ்சி இப்ப ரெண்டா ..எதடா கரெக்ட் பண்றதுன்னு யோசிச்சு சரி எவ அழகா இருக்காளோஅ வ தான்..ஒரு நொடியில யோசிச்சு ம்ம் வரச்சொல்லுங்கன்னு பதிலும் போட்டாச்சு..

மனசுகுள்ள குஷி..ரெண்டு பிகரு..இன்னா பின்னா கன்னா பின்னான்னு
சந்தோசம் தாங்கல ...அப்படியே கம்பீரமா ஒரு லுக்கு விட்டேன் அங்க நின்ன
நம்ம புள்ளாண்டாங்களை..

நம்ம பிகரு கூப்பிட்டா அவ பிரண்டை..

"டேய் ராஜேஷ் சீக்கிரம் வாடா, பிரதரை பேசி கரெட் பன்றதுகுள்ள போதும் போதும்
னு ஆயிடுச்சு..நீ வேற லேட்டா வர "ன்னு முடித்தாள்

நான் என்ன பாவம் பண்ண சொல்லுங்க..இனிமே இங்க நான் சைலண்ட் தான்.
இதுக்கப்புறம் நடந்தது இன்னும் கொடுமை

"சாரிடி லேட்டாயிடுச்சு..நாம இப்ப எங்க போறோம்னு சொல்லவே இல்ல,ம்ம் "அவன்

"ஷாப்பிங்டா முண்டம் ..எனக்கு ஐ புரோ லிப்ஸ்டிக் லாம் வாங்கணும் ,எப்பவுமே மெட்ஸிங் கா ட்ரெஸ் பண்ணு மேக்கப் பண்ணுன்னு சொல்ல்றியள்ளே வா வந்து வாங்கி கொடு" அவள்

"வேணும்டி எனக்கு ..லிப்ட் கொடுத்தா என்னைய வயிறெரிய வெச்சு
போயும் போயும் இந்த வேலை பாக்கவெச்சுட்டியடி என்னைய " அது..

எனக்கும் விஜி அக்கா மாதிரி ஒரு பதிவு போடணும்னு ரொம்ப நாள் ஆசையா ..அதான் முடிக்கும் போது அவன் அவள் அதுன்னு முடிச்சுட்டேன்.

அவன் ராஜேஷ், அவள் பேரே சொல்லலை கடைசி வரைக்கும்,அது என் மனசாட்சி./...

என்னவோங்க ஆனா அன்னிக்கு சொதப்புச்சு..அடுத்த நாள் நான் டேரக்டா
கிரசண்ட் காலேஜ் வந்துட்டேன் இல்ல...இன்னிக்கு ஓகே தான் ..

கதை நாளைக்கு என்ன ...

காதலை நான் துரத்திய பொழுதுகள்-ஒரு தொடர்

காதல் இது வார்த்தை தானா ? இல்லை வாழ்க்கையா? என்ற கேள்விகுறியுடன் ஆரம்பித்தது என் வாழ்க்கை.என்னவோ காதல் என்ற வார்த்தையே ஒரு கெட்டபழக்கமாய் தான் தோன்றியது.பின்பு எனக்குள்
ஒரு பூகம்பம் வெடித்து காதல் பூ பூத்தது.இன்பமான அந்த காலங்களோடு நான் உலா வந்த பொழுதுகள்
எல்லாமே என் வாழ்க்கையின் ஒரு மைல் கல்லாய் பாதியிலே கடந்தது.

மைல்கல்லை தாண்டிய பின் அங்கு செல்லவே கூடாது என்று தான் எண்ணிகொண்டு காலம் நகர்த்திய பொழுதுகள் போய் சில நாளில் மைல் கல்லான காதலியின் நினைவுகள் வடுவாய் மாறி வலி குறைந்தது.
வலியில்லாமல் வடுவோடு நான் திரிந்தாலும் மனதில் மீண்டும் ஓர் ஆசை..எனக்கென ஒருத்தி எங்காவது
பிறந்திருப்பாள்.அவளோடு காதல் கதை பேசி மனம் முழுக்க அவளோடு வாழ்ந்து திருமணபந்தத்துக்குள் நுழைய வேண்டுமென்று..

இருந்தாலும் பாருங்க..கருமம் எந்த பொண்ண பாத்தாலும் ஜோடி போட்டுகிட்டு தான் சுத்திட்டு இருக்குங்க.
எனக்கு ஒரு யோசனை'

என்னடா இது நாமளும் தான் மூக்கு வரைக்கும் முடிய வச்சுகிட்டு அப்பப்ப ரஜினிகாந்த் மாதிரி தலைய கையால கோதிவிட்டுகிட்டு விக்டர் ஜி எக்ஸ் ல பறந்துட்டு இருக்கோம்.ஒரு பொண்ணுங்க கூட விளையாட்டுக்கு கூட பார்க்க மாட்டறாங்களே;ன்னு யோசிச்சு இருக்கும் போது தான் ஒரு பக்கா ஐடியா

நல்லா சவரம் பண்ணிகிட்டு காதல் கொண்டேன் தனுஷ் ரெண்டாவது பாதியில வரமாதிரி அழகா முடிவெட்டிகிட்டு ஆயுத எழுத்து சூர்யா மாதிரி ஜெர்கின் மாட்டிகிட்டு ஆபிஸுக்கு கிளம்பிட்டேனுங்க..
இன்னைக்கு எவ மாட்டினாலும் மடங்கிடுவான்னு நினப்போட...

போயிட்டே இருக்கும் போது அடடே நம்ம ஐடியா வேலை செய்ய ஆரம்பிடுச்சுடா சுள்ளான்னு எனக்குள்ள சொல்லிட்டு பொறுமையா ஓட்ட ஆரம்பிச்சேன் வண்டிய..

என்னன்னு பார்க்கறீங்களா.சும்மா சொல்லகூடாதுங்க மன்மதராசா சாயாசிங் மாதிரி சுடிதார் போட்டுகிட்டு.
ரெண்டு வீணைய தலைகீழா நடக்கவெச்சா எப்படி இருக்கும்..சும்மா போய்ட்டு பேக் சூப்பர்ன்னு சொல்லனும்னு தோனுச்சு..அப்பாடா அவ திரும்பி திரும்பி பார்க்கிறா ..நடந்து போறாளே லிப்ட் கேக்கணும் கேக்கணும்னு வேண்டிகிட்டே கிட்ட போணேங்க.

அப்பாடா இப்படி ஒரு அழகா ..சும்மா சொல்லகூடாதுங்க ..இப்பலாம் பொண்ணுங்க ரொம்ப அழகாவே தெரியறாங்க..கை மட்டும் போட்டாங்க ..பட்டுன்னு நிறுத்திட்டு எங்க போகணும்னு கேட்டேங்க..
அப்படியே ஒரு அதிர்ச்சி..வாய் முழுக்க சூப்பர் பாக்கை போட்டுகிட்டு இருக்கா.நான் கேட்டதும் அதை அப்படியே துப்பிட்டு கொஞ்சம் என்ன அடுத்த பஸ்ஸ்டாண்ட்ல இறக்கிவிட்டுடு மாமா ன்னு

ஆம்பளை குரலில் கேட்டானா(ளா) ..தணிகா இப்படி சொதப்பலா மாட்டிகிட்டியே ...ஹேய் நீங்க அதுவான்னு
கேட்டேனுங்க..ஏன் எங்களுக்கு லிப்ட் கொடுக்க மாட்டீங்களான்னு திரும்பவும்...

சரிடா சொதப்பனா என்ன மனிதாபி மானத்தின் அடிப்படையில் சரி வாங்க விடுறேன்னு சொன்னா.
பைக்ல ஏறி உக்கார்ந்தா எப்பா ட்ரிபிள்கிரவுன் ரம் நாத்தம் தாங்க முடியலை....
.
ஹோய் இறங்கு குடிச்சிருக்கியா.? முதல்ல இறங்கு ன்னு திட்டினேனுங்க..ஒயின்ஷாப் பக்கத்தில் இருந்து வரனே குடிக்காமயா வருவேன்..போடா .....................மாமா ன்னு திட்டிட்டா(ள்+ன்)

என்ன பண்ண சொல்லுங்க ..நான் இவ பின்னாடியே பாத்துட்டு வந்தேன் அவ வந்த ஒயின் ஷாப்ப பாக்காதது என் தப்பா..

பக்காவா கிளம்பி வந்து படு சொதப்பலாயிடுச்சே..என்னடா பண்ணலாம்னு யோசிச்சுட்டே போற வழியில
அட நம்ம இராமனுஜம் இஞ்ஜினியரிங்க் காலேஜ் பஸ் ஸ்டாண்ட்.

பஸ் ஸ்டாண்ட்ல என்ன நடந்துச்சு..உண்மையிலே இது அமைஞ்சுடும் போலிருக்கு.

பொழுதுகள் தொடரும்................

காதலர் தின வாழ்த்து

எங்கள் சிறகள்ளி தருகிறோம் நீவீர் விண்ணில்
பறக்கவென்று வானத்து பறவைகளும் கூச்சலிட்டனவே !

வியப்பில் கதிரவன் சட்டென்று விலகினவே தன்
உஷ்ணம் இவர் மேனியை தாக்கும் என எண்ணியே !

வண்ண மலர்சோலையது வாசம் கொண்டே சில்லென
தென்றலது இவர் மேனித்தொட்டு தழுவினவே !

கானக்குயில் பாடிட தோகைமயில் விரித்தாடி மகிழும்
மாலைப்பொழுதே இவர்கள் இன்புற்று மகிழவே
மனமுவந்து இந்த மண்ணிலே ஜொலித்ததுவே !

தாமரை தடாகத்து மலர்களும் மாலைப்பொழுதில்
பூத்து இவர்களை பார்த்து சிரித்து நின்றனவே!

மாற்றான் கண்பட்டு இவர்கள் மனமும் சட்டென்று
சலனம் கொள்ளும் என்றே இமைப்பொழுதில் இருளும் வந்ததுவே !

இருளைப்போக்கும் நோக்கு கொண்டே மின்மினிப்பூச்சிகள்
ஆனந்தத்தில் இவர்களையே சுற்றி இன்ப மயமாக்கினவே !

இருள்பூமி வேண்டா காதலரே நீவீர் என்னிடத்து
வாரும் என்றே விண்ணில் ஜொலித்த வெண்ணிலவும் வேண்டி நின்றதுவே !

இவர்கள் வரவைக் கண்ட விண்மீன்களும் வானப்போர்வையில்
வைரக்கல் பொதித்தாற் போல் காட்சி கொண்டே
இவர்களின் மண்ணுலக வாழ்வை மறக்க செய்தனவே !

தேனாறு பெருக்கெடுத்து ஓடியே எம் காதலர் அதில்
வண்ணமீன்கள் போல் துள்ளி குதித்து மகிழ்ந்தனரே !

உமக்காய் இயற்கை அளித்த பரிசே இமயமாய் கொட்டிக்கிடக்க
இச்சிறுகவிஞனின் பங்காய் இக்கவிதையை உங்கள்
பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் !!!

காவியம் போற்றும் காதலர்களே நீவீர் என்றும் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

Tuesday, February 26, 2008

என் கனவு தேவதை

எல்லாரும் கவிதை கதைகளை படிச்சுட்டு அழுவாச்சி அழுவாச்சியா வருதுன்னு ரொம்ப சோகத்தில மூழ்கிட்டதால இந்த கனவு தேவதையை பற்றி எழுதிடாலம்னு முடிவு பண்ணிட்டேன்..படிக்க நேரமிருக்கரவங்க படிச்சிக்கோங்க..


நான் முதலில் இரு அணுக்களாய் தான் இருந்தேன்..பின்பொருநாள் இரண்டும் ஒன்றாய் சேர்ந்து எனக்குள் சில இரசாயனமாற்றம் நிகழ்ந்து ஆனால் உணர்வுகளின்றி ஒரு புள்ளியாய் இருந்தேன்..சிலநாட்கள் நகர்ந்து நானும் கொஞ்சம் பெரியதாக ஆரம்பித்தேன்..சரியா மூனு மாசம் இருக்கும்..நான் இருந்த அந்த இருட்டறை சட்டென சாய்கிறது..எனக்குள் மிதமான ஒரு அதிர்வு..அப்போது தான் எனக்கு சிலவற்றை உணர முடிகிறது..நான் இருக்கும் அறை சாய்ந்த வுடன் ஒரு சின்னதாய் ஒரு குரல் "அப்பா அம்மா கீழ விழுந்துட்டாங்க " என்று..

" அய்யோ என்னா ஆச்சு " என்று கணீரென்ற அந்த ஆண்குரல்.எனக்கு ஒன்னுமே புரியலை..
" தண்ணிர் கொண்டு வாடா சீக்கிரம் " பயத்தோடு அந்த குரல்..சிலநேரத்திற்கு பின் என்னம்மா ஆச்சு.ஹாஸ்பிடலுக்கு போலாம் வா என்றது..

ஒன்றுமே புரியவில்லை எனக்கு..என்ன இது இத்தனை நாளில்லாமல் ஏதேதோ குரல்கள் என்னை சுற்றி எனக்கு கேட்கிறது என்று.

கொஞ்சநேரத்தில் மீண்டும் அந்த குரல்" டாக்டர் இவங்க என் மனைவி.திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.என்னன்னு தெரியலை."
நான் இருக்கும் அறையை யாரோ அழுத்துகிறார்.எனக்கு ஒரே பயம்..புரியாமால் விழிக்க ஒரு மெல்லிய குரல் "சந்தோசமான விசயம் தான் .உங்க மனைவி பிரகனண்ட் ஆக இருக்காங்க" என்றது..

ஹய்யா என்று சந்தோசம் தொணித்த அந்த ஆணின் குரலுக்கு பின்னால் நான் இருக்கும் அறை சற்று மேலே சென்று சுழல ஆரம்பிக்க

விடுங்க ..ஹாஸ்பிடல்ல போய் இப்படி எல்லாரும் பார்க்கிறாங்க இல்ல..என்றது ஒரு அழகான பெண்குரல்..எனக்கு இதுவரை இல்லாத ஒரு ஈர்ப்பு இந்த குரலை கேட்டதும் தான்..யோசிக்கிறேன் இவர் யாராயிருக்குமென்று...ஆனால் விளங்க வில்லை..

அதன் பின் அறை நகர்ந்து சிலநேரங்களுக்கு பின்னால் நான் முதன் முதலில் கேட்ட அந்த சின்ன குரல் மீண்டும் அப்பா அப்பா அம்மாவுக்கு என்னப்பா ஆச்சு.ஏம்பா அம்மா கீழவிழுந்துட்டாங்க..என்றது.

ஆண்குரல்" உனக்கு தங்கச்சி பாப்பா வேணுமின்னு கேட்ட இல்ல..அம்மா வயிற்றில் தான் இருக்கா..நீ அண்ணாவாயிட்ட..." என்றது

ஹையா ஜாலி..அம்மா அம்மா தங்கச்சி எங்கம்மா இருக்கா காட்டு..என்று யாரோ என் அறையை தொட்டு பார்த்தார்.

அப்போது தான் புரிந்தது..இவங்க தான் என்னுறவுகள் என்று..ஆனால் என்னால் வெளி வர தோணவில்லை..

சில மாதங்கள் நகர நான் பெருத்துக்கொண்டே போகிறேன்..என்னை அடிக்கடி தொடுவதும் அந்த ஆண்குரலில் விசாரிப்புகளும் மெதுவான தடவல்களும் ம்ம்ம் என்ற சத்தங்களும் கேட்டு கொண்டே இருக்கின்றேன்..

பத்து மாதங்கள் ஆகியிருக்கும்..என்னவோ தெரியவில்லை..என்னால் உள்ளே இருக்கமுடியவில்லை..நான் இருக்கும் அறையை என் காலால் எட்டி உதைக்கிறேன்..வெளியே அந்த அழகிய குரலின் கதறல்..என்னால் உள்ளே இருக்கவே முடியவில்லை..என்ன ஆனது என் அம்மாவுக்கு என்று வெளியே வரதுடிக்கிறேன்..

சிலநேரத்திற்கு பின் என் அம்மா பயங்கரமாய் கதறுகிறார்.நான் வெளியே வரமுடியாத இயலாமையில் உதைக்கிறேன்..சில பெண்குரல்கள் அம்மாவை திட்டியும் சிலர் ஆறுதலாய் பேசியும் என்னவோ செய்கின்றனர்..

என் அம்மாவின் பெரிய அலறல் அப்படியே அமைதியாகிறது..அங்கிருந்த பெண்குரல்கள் அப்பாடா அவங்க அப்பா சொன்ன மாதிரியே பெண்குழந்தை தான் பிறந்திருக்கு..என்ற குரலில் ஒரு மகிழ்ச்சி தெரிகிறது..

அப்போது தான் புரிகிறது..நான் உதைத்ததால் தான் அம்மா கதறியிருக்கிறாள் என்று..நானும் மன்னிப்பு கேட்டு கதற ஆரம்பிக்கிறேன்..
ஒரே வெளிச்சம்..பெரிய பெரிய உருவங்கள்..என்னை எடுத்துசென்று ஏதோ திரவம் விட்டு சுத்தபடுத்துகிறார்கள்..

பின் அந்த பெண்குரலில் ஒரு குரல் மட்டும் வந்து இங்க பாரும்மா குழந்தை மூக்கு உன்னை மாதிரியே இருக்கு என்று ஒரு பெண்ணின் பக்கத்தில் படுக்க வைக்க அந்த பெண் ஹப்பா பிறை நிலவின் நெற்றிகொண்ட அவள் என் தலையில் வருடி என் நெற்றியில் முத்தமிடுகிறாள்..அந்த முகம் அப்படியே என்மனதில் பதிகிறது..அவள் தான் என் அம்மா என்றும் தெரிந்து கொண்டேன்..

அதன் பின் அழுகை..பசிக்காய் பால் ஊட்டுகிறாள் என் அம்மா..பயணம் செய்கிறேன்..

ஹைய்யா தங்கச்சி பாப்பா வந்துடுச்சு..என்று என் அண்ணனின் குரல்..

சூ பாப்பா தூங்குது கத்தாதே எழுந்தா அழுவும் னு அப்பாவோட குரல்..

எத்தனை பாசமான குடும்பம் என்று பெருமிதத்தோட தூங்குகிறேன்.

சிறிது நேரத்தில் அண்ணன் ஏம்மா தங்கச்சி தூங்கிகிட்டே சிரிக்கிறா ன்னு கேட்டான்.
அதுக்கு அம்மா சொன்னா "பாப்பா கனவுல தேவதைங்க வந்து சிரிக்கவெப்பாங்கடா அதான் சிரிக்கரா"
நான் என்னை முதன் முதலில் வருடி முத்தமிட்ட பிறை நிலவின் நெற்றி கொண்ட உன் முகம் கண்ட ஆனந்தத்தில் தான் சிரிக்கிறேன்..நீ தானம்மா என் கனவு தேவதை என்று சொல்ல வாயெடுக்கிறேன்,,

அவர்களை போல அழகிய வார்த்தைகளை என்னால் வெளிப்படுத்த முடியாமல் மீண்டும் அழத்தொடங்குகிறேன்.

என் செல்லம் என் பட்டு என்று எனக்கான கொஞ்சல்களோடும் அரவணைப்புகளோடும் பயணித்து கொண்டிருக்கிறேன்..

இத்தனை நாளா எனக்குள்ளிருந்த இந்த ஏக்கங்களையெல்லாம் எப்படியாச்சும் சொல்லணும்னு தவிச்சப்ப தான் என்னை படைச்ச பிரம்மா வந்து சொன்னாரு.. தணிகைன்னு ஒருத்தன் இருக்கான்..அவன் கனவுல வரது எல்லாத்தையும் போய் எல்லார்கிட்டயும் உளருவான்..நீயும் போய் அவன் கனவுல சொல்லு..அவனே சொல்லிடுவான்னு" அதான் நேத்து ராத்திரி தணிகா மாமா கனவுல வந்து எல்லாத்தையும் சொன்னேன்..

Friday, February 22, 2008

அழுகையின் குரல்

வரையறை இல்லாத இன்பத்தில்
உயிர் ஜனித்த என்னை தூக்கி
வீசுகிறாள் பெற்றவளே..

வீசப்பட்ட எனக்கு சிலநேரத்தில்
பசிக்க பாலுக்காய் அழுகிறேன்.
அலங்கோல பெண்ணொருத்தி
அரவணைத்தாள் என்னையுமே..

அரவணைத்தவள் பாலூட்டநினையாமல்
அழுகையை காசாக்கி கொண்டாள்.
அழுகைக்கான அர்த்தம் அறியாமலே
அவளின் தட்டை நிரப்பும் உள்ளங்களே

அவளிடம் சொல்லி என் வயிறையும்
நிரப்ப சொல்வீர்களா???

Tuesday, February 19, 2008

டாஸ்மாக்.

கவலை கொண்ட நெஞ்சோடு
காலையிலே நடை பயணம்
ஆரம்பித்த சில நேரத்தில்

சாலையோர மாளிகையில்
சலசலக்கும் கூட்டமொன்று
சந்தினுள் நுழைந்து பார்த்தால்

வண்ண வண்ண புடவைகட்டி
வகைவகையாய் பெண்களங்கே
வரிசையாய் நிற்கின்றனர்.
விசாரித்து பார்த்தால் சுயம்வரம்
நடக்கிறது என்றார்கள்.

காசுகொடுத்துவாங்கி செல்லலாமாம்
எந்த பெண்ணையும் விலைபட்டியலோடு
பெயரும் பதிக்கபட்ட பலகையும் அருகில்

கவலைதீர சாலையோர மாளிகையில்
கல்யாணம் செய்து கொள் -கேட்டது
நண்பனின் குரலொன்று

சுயம்வர மோதலில் முட்டிமோதி
காசுகொடுத்து கட்டிகொண்டேன்
கட்டழகி ஒருத்தியை..

அங்கேயே ஒரு அறிவிப்புபலகை
அனுமதிபெற்ற அறையொன்று
முதலிரவு நடத்தவாம்..

உள்ளே சென்றேன் சென்றவுடனே
விசாரிப்புகள் ஆரம்பித்தன
இனிப்பா காரமா என???

காரத்தின் துணைகொண்டு
கற்பழித்து முடிக்கிறேன்
காசுகொடுத்து வாங்கியவளை..

கற்பழிந்த சோகத்தில் அவளும்
கற்பழித்த சோர்வில் நானும்
மயங்கியே சாய்கிறோம்..

மயக்கம் கொண்ட நெஞ்சிலே
கவலையோடு கண்ணீருமே
வெளிவருகின்றது..

போவோர் வருவோருக்கெல்லாம்
போதனை செய்ய அவர்களோ
எட்டி உதைத்து போகிறார்கள்..

சிலநேர மயக்கத்தின் தெளிவின்
பின்னால் மீண்டும் புறப்படுகிறேன்
சுயம்வர மாளிகைக்கு..

காசு கொடுத்தால் போதுமாமே
எத்தனை பேரையும் கூட்டி
கொடுக்குமாமே அரசின்

"டாஸ்மாக் விபச்சாரம்"

முதல் எழுத்து.

எதுவுமறியா குழந்தையின் கையில்
சிக்குண்ட வெற்றுகாகித கசக்கலாய்
நானும் எறியப்பட்டேன் காதலறியதெரியா.
பொய்யான காதலி ஒருத்தியால்.

மக்கும் குப்பைகுள்ளும் மகசூல்
தரும் சக்தி உண்டென புரிந்தது
உன்னால் மீண்டும் சரிசெய்யபட்டு
எழுதப்பட்ட வெற்றுகாகிதமெனக்கு.

உளிகொண்ட சிற்பியின் கண்பட்ட
கல்லின் சிற்பமாய் ஜொலித்தேன்
நானும் உன்னால் எழுதப்பட்டபின்
சிறந்ததொரு அழகான கவிதையாய்

அழகிய கவிதைக்காய் சிலநேரம்
அலைரசிக்கும் கவிஞனாய்
உன்னால் பிறந்த நான் மீண்டும்
கிழித்தெறிய பட்டதன் நோக்கமென்னவோ.

உன்னால் அழகாக்க பட்டவன்
கிழித்தெறியும் போது பிரசவவலி
காணும் தாயினும் வலிகொள்வேன்
என்று அறியவில்லையா நீ..

இறந்தபின்னும் சாந்தியடையா
ஆன்மாவை போல் அலைகிறேன்
நானும் உன்னுடனான பழைய
எழுத்துக்களை தேடி.....................