CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, March 14, 2008

நான் - மெரினா - அவள் -வானவில் - மழை

ஹைய்யா ஹைய்யா எனக்குள்ள திரும்பவும் ஒரு அழகான காதல் பிறந்துடுச்சு..இனிமே பிறக்காதுன்னு தான்
நினைச்சிருந்தேன்..ஆனா என் கனவு புலம்பல்களை கேட்டு எனக்காக ஒரு தேவதையை அனுப்பிவெச்சிருக்கார்
அந்த பிரம்மா..

அட ஆமாங்க எப்பபாரு அழகான பொண்ணு கனவுன்னு சொல்லி உளருவேன் இல்ல..இப்ப உண்மையிலே ஒரு தேவதை வந்தா..உங்க கிட்ட சொல்லாம இருக்கமுடியுமா...பாசக்கார மக்களே உங்களை விட்டா எனக்கு
யாரை தெரியும் சொல்லுங்க?

ம்ம்.கதைக்கு போலாமா ஹைய்யோ இல்ல அது ஒரு அழகான கவிதைன்னு கூட சொல்லலாம்..ஏன்னா அவ ஒரு கவிதை மாதிரி தான் இருக்கா..

போன வாரம் மெரினாவுக்கு போயிருந்தேங்க..வழக்கமான என்னோடு எப்பவும் இருக்கும் என் டைரியோட..கடல் அங்க வர மனிதர் இப்படின்னு எதாச்சும் கவுஜ என்ற பேர்ல கிறுக்கி வெச்சுக்குவேன்.அதுக்கு தான் அந்த டைரி.

போய் அங்க பீச்சில் இருந்த சிமெண்ட் பென்ச் ல உக்கார்ந்துகிட்டு கடலையே தனித்து வெறித்திருந்தேன். அங்க ஒரே காதல் ஜோடி கூட்டமும் ரசிக்கும் குழந்தைகளும் குடும்பத்து ஆசாமிகளும் குவிந்து கொண்டே இருந்தாங்க.. மனசு கடலை பார்த்துகிட்டே ஒரு கேள்வியை என் டைரியில் கை எழுதிட்டு இருந்தது..

அலையே நீயும் நானும் ஒன்றுதான் போல
நீயும் யாரைத்தேடி தான் அலுக்காமல் வந்து போகிறாய் என்னை போலவே.
கவலைப்படாதே என்னவள் வருவாள் அவள் பாதம் தொட்டால் உன் தோஷம் தீரும்..நீ எதிர்பார்த்தவை கிடைக்கும்.

என்று எழுதிவிட்டு சில நேர அமைதிக்கு பின் யாருமே தனியாய் தென்படவில்லை..ச்சே கனவுலயாச்சும் நல்ல பொண்ணு நமக்கு வாய்க்கும் என்று அப்படியே டைரியை பக்கத்தில் வைத்து சாய்ந்துவிட்டேன்..நல்ல தூக்கம் கருமம் கனவு தான் வரலை..சில நேரத்திற்கு பின்

"ஹலோ தணிகை " ஒரு மெல்லிய குரல்.குரலை கேட்டவுடன் வாயில் வழிந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு திரவத்தை துடைத்தவாறே எழுந்தேன்.
அட நம்ம கனவுல வர அதே தேவதை மாதிரி ஒரு பொண்ணு.எங்களுக்குள்ள உரையாடல் ஆரம்பமாச்சு..இதோ

என் பேரு எப்படி உங்களுக்கு....."

இது உங்க டைரி தானே.ஒரு குழந்தை எடுத்துட்டு வந்து போட்டுச்சு.நான் உங்களை பார்த்துகொண்டிருந்தேன் அப்போது,அதான் எடுத்துவந்தேன்..பேரை தெரிஞ்சிக்கணும்னு தோணுச்சு பார்த்துவிட்டேன்.மன்னிக்கவும்"

அசட்டு வழிசலோடு "நன்றிங்க,உங்க பே......." ச்சே இந்த அழகான பொண்ணுங்களை பார்த்தா மட்டும் ஏன் தான் நான் திக்குரேனோ தெரியலை

நான் ப்ரியா,இங்க சென்னைல தான் வீடு..எப்பவாச்சும் வருவேன்..தனியா எனக்கு ஒரே ஆச்சர்யம் தனியா உங்க வயசுல ஒரு ஆள் வரதை பார்த்து"

என்ன பண்ணங்க எனக்கு வாய்ச்சதெல்லாம் அப்படி"

அட முன்னாடி அடிபட்டு இருப்பீங்க போல இந்த விசயத்தில்"

தணிகா முத லவ் மேட்டரை எடுத்துவுடாத..அவ மனசுல எப்படியாச்சும் இடம்புடிக்கிற வழியபாருன்னு மனசுல பட்சி சொல்ல

அட அதெல்லாம் இல்லீங்க..உங்க அளவுக்கு மனசுல நிக்குற மாதிரி இன்னும் எந்த பொண்ணையும் பார்க்கல" எப்படிடா பட்டுன்னு சொல்லிபுட்டன்னு ஆச்சர்யமா நானே என்னை குனிந்து பார்க்கிறேன்..

அட என்ன ஐஸா..எனக்கெதுக்குங்க.."

ஐஸ் வாங்கி குடுத்து ஏமாத்திரவன் நான் இல்ல"அப்படின்னு வெகுளியா நடிச்சேன்.

சரி உங்களை பத்தி சொல்லுங்களேன்" அவ

சில நிமிடங்களில் சுயசரிதை எழுதிமுடித்தேன் என் வாய் தமிழால்.ஆனா முதல் காதலியோட மெரினா போன விசயத்தை சொல்லவே இல்ல.

நான்" உங்களை பத்தி சொல்லுங்களேன்"

அழகான உச்சரிப்பு,தெளிவான பேச்சு என அவளை சொன்ன விதமும் எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது..அவளின் புருவங்கள் வளைந்து அடிக்கடி ஏவிய பார்வை அம்புகள் எனக்குள் தைத்து சுகமே தந்தது..

பட்டென சொல்லியே விட்டேன்.உங்களை இதுக்கப்புறம் எப்போ பார்ப்பேன்னு தெரியாது.ஆனால் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க..
காதலிக்குறேன்னு சொல்லதெரியலை..ஆனா கல்யாணம் பண்ணிக்க ஆசைன்னு சொல்லிட்டேன்

பார்த்த ஒரே நாளில் அதுவும் சில மணிநேரங்களில் இப்படி லூசு மாதிரி பேசுறான்னு நினைக்கறீங்களா?.மத்த பசங்க மாதிரி காதல் திடீர்னு வரும்னு டைலாக் விடமாட்டேன்..அவகிட்ட பேசினா கண்டிப்பா வரும்..அவ எனக்கு கிடைச்சது பாக்கியம் எனக்கு..

அப்போ திடீர்னு ஒரே கூச்சல்..ஹை வானவில் வானவில் அப்படின்னு குழந்தைகள் கத்த இருவரது பார்வையும் வானத்தை நோக்கியது.

வானவில் எனக்கு ரொம்ப பிடிக்குங்க.எவ்ளோ அழகு பாருங்களேன்"
அவ தான்

நான் அவளையே பார்த்துகொண்டு வானவில் உங்களை விட ஒன்னும் அவ்ளோ அழகா இல்லை" என்றேன்.

ம்ம்ம் சரி சரி ரொம்ப தான். எனக்கு சம்மதமே உங்களை கல்யானம் பண்ணிக்குறதில்.ஆனா கொஞ்ச நாள் போகட்டும் என்றாள்.

மனதுக்குள் குஷியோடு இனிமே அடிக்கடி வரவேண்டியிருக்கும் மெரினாவுக்கு என்றேன்..

"ம்ம்ம்ம்"

"..........." தாங்கமுடியா சந்தோசங்க எனக்குள்

" வானவில் வந்தா மழை வரும்னு சொல்லுவாங்களே,இப்ப மழை வருமோ" என்றாள்.

" ஆமாம் ப்ரியா..வானம் கூட இருட்டிட்டு வரூது"

"ஹை எனக்கு மழைன்னா ரொம்ப ப்ரியம்"

" நான் கூடத்தானே ப்ரியா"

பேசிட்டே இருக்கும் போது பட்டென முகத்தில் சிலதுளிகள் விழுந்தன.
மழை மழை வாங்க வாங்க என கூச்சல்கள் கேட்க
வேகமாய்.அடித்து பிடித்து எழுந்தேன் சிமெண்ட் பென்ச்ல இருந்து.இவ்ளோ நேரம் என் கூட பேசிட்டிருந்த என் பிரியாவை காணோம்..

அட கருமமே இதுவும் கனவா.ச்சே போங்க இவ்ளோ நேரம் நானும் நிஜமா நடந்துச்சுன்னு இல்ல நினைச்சேன்..என்னவோ போங்க நொந்துகிட்டே ஓடி போய் ஒரு மரத்தடியில் நின்னுட்டேன்..


நான் - மெரினா - அவள் -வானவில் - மழை - கனவு ..

2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

சிவசுப்பிரமணியன் said...

தணிகை ... சும்மா சொல்லக்கூடாது.. ரொம்ப நல்லா இருந்துச்சு.. கவலையே படாதீங்க.. அதை கெட்ட கனவா நினச்சு மறந்துடுங்க.. உங்களுக்குனு ஒரு தேவதை வருவா.. ஆனா நீங்க எதிர்பார்க்காத சமயத்துல தான் வருவா...

தணிகை said...

ம்ம் சரிங்கோன்னா ...வாழ்த்துக்கு நன்றி..