CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, April 4, 2008

நள்ளிரவொன்றில்.....

பின்னேரபணியெனதில் இன்று தாமதாகி
நள்ளிரவில் முடித்து கிளம்பினேன்
ஆழ்ந்ததூக்க நேரத்தில் கசக்கிய கண்களுடனே
ஆரம்பித்தேன் வீடு நோக்கிய பயணத்தை..

விசாலமான நெடுஞ்சாலையின் இருபுறமும்
விருட்டென சீறிப்பாயும் கனரக வாகனங்கள்
பயத்துடனே தொடர்கிறது சாலையோரத்தில்
என் பயணமானது...

சிலதூரம் சென்றதும் சாலையொட்டிய
புதரிலிருந்து முகத்திலறைந்த வெளிச்சம்
புரியாது திரும்பி பார்க்கிறேன் ஆங்கே
புதுப்பெண்ணாய் வேடமிட்ட விலைமாதங்கே
பிழைப்புக்காய் காத்திருக்க கனத்த மனதோடே பயணித்தேன்

பயணத்தின் தொடர்தலில் தொடர்ந்தது
பணத்துக்கான விலைமாதுக்களின் வெளிச்சமும்
பரிதாபத்தோட பயணித்த சில நொடியில்
படார் சத்தம் பயத்தோடே நின்றதென் வாகனம்

முகம்தெரியா அளவுக்கு சிதைந்து போய்
குருதியொழுகிய நிலையில் துடிக்கிறது
அவனது கால்கலோடு என் மனதும்
புரிதலின் தாமதத்தில் நிலைக்கு வருவதற்குள்
நின்று விட்டது துடிப்பும் உயிருமே..

எதுவுமே செய்ய முடியா இயலாமையின்
கோபத்தில் மீண்டுமே தொடர்ந்தது
என் வீடு நோக்கிய நள்ளிரவின் பயணம்.

அதிர்ச்சியினோடே படுக்கையில் சாய்கிறேன்
அடுத்தடுத்து வந்து போகிறது என்னில்
விலைமாதுகளின் வெளிச்சமும்
முகம்தெரியா மரணத்தின் இருட்டும்......

2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

ரசிகன் said...

அருமையாய் இருக்குங்க.. பலசமயங்களுல சமுகத்துல இருக்குற அவலங்களுக்கு நம்மால எதுவும் செய்யமுடியாத இயலாமைதான் யதார்த்தம்.

தணிகை said...

ம்ம் உண்மை தான் ரசிகன் ஐயா..மனசு கனத்து போய் வந்த வரிகள் இவை..நன்றி..