CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, July 7, 2008

புணர்தலென்பது.. - சுயம்சொன்னால்



பருவம் முதல் படையெடுக்கும்
காமத்தில் சிக்குண்ட உடல்கள்
எத்தனையோ..

உடல்களின் புணர்தல் பெருகியும்
காமத்தின் உணர்தல் மட்டும்
தணிந்ததாயில்லை..

மனைவியோடு புணர்தலென்பது
பிரேதத்தின் உணர்தலாகவே
இருக்குமெப்போதும்...

~ஆயினும்~

உடல்களின் தேடல்கள் மட்டும்
தொடர்ந்துகொண்டேயிருக்கும்..

கார்த்திகையில் நாயை போலவே..

5 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

cheena (சீனா) said...

தணிகை

கவிதை கவிதையாகப் பார்த்தால் அருமை எனச் சொல்லலாம். கருத்தினைப் பார்த்தால் ஒவ்வாத கருத்தென ஒதுக்க வேண்டும். புணர்தல் என்றாலே அது மனைவியுடன் மட்டும் தான் இருக்க வேண்டும். மற்றதற்குப் பெயர் புணர்தலில்லை. உவமை என்பது உயர்ந்ததன் மாட்டு, உவமை என்பது ஒருபுடைத்து எனக் கூறுவர்.
உவமையிலும் நாகரீகம் வேண்டும்.

நல்ல கவிதை எழுத நல் வாழ்த்துகள்

தணிகை said...

//கவிதை கவிதையாகப் பார்த்தால் அருமை எனச் சொல்லலாம். //

இதுக்கு முதல்ல நன்றி சொல்லிடணும் ..நன்றி ஐயா..

//கருத்தினைப் பார்த்தால் ஒவ்வாத கருத்தென ஒதுக்க வேண்டும். புணர்தல் என்றாலே அது மனைவியுடன் மட்டும் தான் இருக்க வேண்டும். மற்றதற்குப் பெயர் புணர்தலில்லை.//

ம்ம் நான் ஒத்துகொள்கிறேன் ஐயா..இது இந்த மாதிரி ஆண்களின் சுயம் சொல்லும் படியான ஒரு கற்பனை.அவர்களுக்கு சமூகம் ஒதுக்கினாலும் ஒதுக்காவிட்டாலும் அவர்களின் நிலைப்பாடு இதுவாக தான் இருக்கும்..

அதனால் தான் அவர்களின் சுயமே ஒருவேளை இது தவறென நினைத்திருந்தால் தன்னை நாயினோடு உவமை படுத்தியிருப்பதான என் எண்ணம்..

நாகரீகமென்று சொல்லி ஒரு அருகதையற்ற வாழ்க்கை வாழ்பவருக்கு நாகரீகமான உவமை சொல்லி என்னாக போகிறது என்பது என் எண்ணம்..

//நல்ல கவிதை எழுத நல் வாழ்த்துகள்//

நன்றி..

N Suresh said...

//பருவம் முதல் படையெடுக்கும்
காமத்தில் சிக்குண்ட உடல்கள்
எத்தனையோ..//

எல்ல உடல்களிலும் இந்த உணர்வு இருக்கும். அறிவு என்ற அதிசயம் இறைவன் தந்த பரிசு. அதை பயன்படுத்தினால் நன்று.

//உடல்களின் புணர்தல் பெருகியும்
காமத்தின் உணர்தல் மட்டும்
தணிந்ததாயில்லை..//

காமம் வெறுக்கப்பட வேண்டியதல்ல

//மனைவியோடு புணர்தலென்பது
பிரேதத்தின் உணர்தலாகவே
இருக்குமெப்போதும்...//

இது அரக்கர்களுக்கு; மனிதர்களுக்கல்ல. அன்பான மனைவியோடு புணர்தலே ஒரு நல்ல மனிதனுக்கு சுதந்திரமான சுகம். தவறு செய்யும் சுகத்தை ரசிப்பவர்களை குற்ற உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக கொன்று விடும். அதற்காக ராட்சஷியாக ஒரு மனைவி அமைந்து விட்டால்..??? என்ற கேள்வி வந்துவிடும். அதற்கு யோசித்து ஒரு முடிவெடுப்பதே நல்லது.

~ஆயினும்~

//உடல்களின் தேடல்கள் மட்டும்
தொடர்ந்துகொண்டேயிருக்கும்..

கார்த்திகையில் நாயை போலவே..//

வெறி பிடித்த, ஆம் காமவெறி பிடித்த மனிதன் அரக்கனாகிறான். நாய்க்கு அந்த மாதத்தில் இருக்கும் ஓர் அசௌகரியத்தைத் தான் அது தீர்த்துக்கொள்கிறது. நாய்கள் இதுபோன்ற மனிதர்களை விட மிகவும் சிறந்தது. இதுபோன்ற மனிதர்களோடு ஒப்பிட்டு நாய்களை இந்த கவிதை அவமானம் செய்கிறதே!!

Anonymous said...

தணிகை எப்படி இருக்கிங்க? நான் நல்லா இருக்கேன்.எனக்கு என்ன எழுதுறதுன்னே தெரியல அப்பறம் " உங்க ப்ளாக் ரொம்ப காலமா படிக்கிறேன்" அப்படின்னு பொய் சொல்ல மாட்டேன்.எனக்கு உங்க நட்பு என்றைக்கும் வேண்டும்.

உங்க புணர்தலென்பது கவிதை படித்தேன். எனக்கு அதில் எந்தச் சலனமும் இல்லை.
உயிர்க்கு உடல் தேவை என்பதைப் போலத்தான் புணர்தலுக்கும் உடல் தேவை.
இயற்க்கை விதியில் புணர்தலே புணிதமானது. அதற்குத் தான் அத்தனை மெனக்கெடுகிறது இயற்க்கை.புணர்தல் புதிய உடலை உருவாக்கும்.புதியது வளர்ந்து புணரும்.புதிய உடலை உருவாக்கும்.பழையது அழியும்.சுழற்ச்சி தொடரும்.


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே! _ பாரதி.


முடிந்தால் "வைரமுத்து கவிதைகள்" பக்கம் 75 ல் "குழந்தை" என்னும் தலைப்பில் உள்ள கவிதை படித்துப் பாருங்கள்.
அதை படித்துவிட்டு நான் அழுதேன் தெரியுமா ?.

அவர் குழந்தையை பார்த்த விதம் அப்படி.

உங்கள் மெயில் முகவரி கிடைக்குமா? என் முகவரி : vkumar3@royalenfield.com.

உங்கள் நட்பை எதிர்பாக்கிறேன்.

குமார்.வே

Anonymous said...

HAI THANIKA