CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, September 14, 2007

என் காதலே.....

அய்யராத்து பொண்ணு நீயும்

ஒய்யாரமா நடந்து வந்த

மெய்யாகவே காதலிச்சோம்

உயிரைவச்சி மணம்முடிச்சோம் -எனக்காக

அயிரைமீனு குழம்புவெக்க பக்கத்துவீட்டு

மயிலக்காவை நீ கேக்குறீயே -உனக்காக

உயிரைக்கூட தருவேனடி

தயிரைத்தானா உண்ண மாட்டேன்..என்

தங்கமே

Wednesday, September 12, 2007

மாற்றம் வருமே இம்மாயை உலகில்

மாற்றங்கள் வந்துவிட்டால்

தோற்றங்கள் உருவெடுக்கும்

தோற்றங்கள் உருவானால்

ஏற்றங்கள் வந்துவிடும்

ஏற்றங்கள் வந்துவிட்டால்

சீற்றங்களும்

தோற்றுப் போகும்.

போற்றி வளர்ப்போம்- நம் புகழ்

பெற்ற வம்சத்தை

தேற்றிடுவார்கள் உலகத்தை...

மோனைக்காக ஒரு உண்மை

நெஞ்சம் எல்லாம்

நெருப்பாய் கொதிக்கும் வேளையில்

நீ வந்ததும் மனம்

நெகிழ்ச்சியில்

நிறைந்து கிடக்க

நிழல் கூட

நிஜங்களாய் தெரிய

நீ வந்து

நீட்டினாய்

நின் திருமண அழைப்பிதழை....

சமூக நிலை

சாதாரண விசயங்கள் தான்

சகலத்தையும் ஆட்டி படைக்கும்

சக்தியாய் மாறிவிட்டது..

சர்வேஸ்வரன்

சக்தியற்று போய்விட்டான்

சடையப்பன் தானே

சர்வமும் படைக்கும்

சக்தியை பெற்றுவிட்டான்

சாதீயமும்

சடங்குகளும்

சரிபாதி இங்கிருக்க

சதிசெய்யும் மானிடரோ

சங்கூத காத்திருக்க

சகதி நிறைந்த

சமூகம் வேறன்றி

சமத்துவம் தான் எங்கு வரும்

சந்தனம் தான் எங்கு வீசும்

சாதனை தான் எங்கு பிறக்கும்

சரித்திரம் தான் எப்படி படைக்கும்

நண்பண் நீ இருக்க

தடங்கள் மாறினாலும்

தன்னம்பிக்கை மாறவில்லை

இன்னல்கள் வந்தாலும் என்

ஜன்னல்கள் மூடவில்லை

பிளவுகள் வந்தாலும் என் அறிவு

களவு போகவில்லை

நடைபாதை மறந்தாலும்

நல்வழிகாட்ட

நண்பண் நீ இருக்க

நானும் இருப்பேன்

நன்றி மறவாமல்

உனக்காக...

மண்ணின் மைந்தனே-நீ தானே மன்னவன்

வாரிச் சுருட்டும்

வக்கிர மந்திரிகளிருக்க

வழிமொழிய

வகைதெரியா மக்களிருக்க

வாரிக்கொடுக்கும்

வள்ளல்களும்

வலுவிழக்க

வசதியில்லா ஏழை வாழ்வில்

வசந்தம் தான்

வந்திடுமா?


உதவிக்கு அலைந்தவன் கூட

பதவிக்கு வந்துவிட்டால்

கதவடைப்பான்

கதம் என்று சொல்லியே

மதம் பிடித்து


- ஆயினும் எம்மக்கள்

அகம் முழுக்க அவனை நினைத்து

யுகம் முழுக்க உழைத்தாலும்

நகமளவு கூட நினைக்காமல்

சுகமான வாழ்க்கை அவனுக்கு

சோகமான வாழ்க்கை எம்மக்களுக்கு


வெளிச்சம் வேண்டி

பளிச்சிடும் சின்னங்களில்

அளித்திடும் வாக்குகளால்

பகட்டான வாழ்வு உனக்கு

இக்கட்டான நிலை எமக்கு


பாவணை செய்வோன் உன்னிடம்

ஆவணத்தை அளித்துவிட்டு

கோவணத்தோடு

அவலமாய் எம்மக்கள்.

அவர் சார்பாய் அறை

கூவல் விடுகிறேன் உனக்கு....

-கேள்


மஞ்சத்திலே

கொஞ்சிக்கொண்டிருப்பவனே

பஞ்சத்தில் அடிபட்டு

மிஞ்சிய எம்மக்கள்

அஞ்சாமல் உனக்கு

நெஞ்சம் கொதித்தால்

தஞ்சம் புகுவாய் நீ

தரைக்குள்...

பாதகம் செய்வோனே

ஆதவன் அஸ்தமிக்கும் காலம்

அருகில் தான் உள்ளது.


எம்மக்களே

ஆதவன் உமக்கு

உதயமாக வேண்டுமானால்

மாதர் பின் அலையாதே

சோதனை முறியடிக்க

சாதனத்தை கையில் எடு


சரித்திரம் படைக்க சாமியை தேடாதே

தரித்திரம் ஒழி -உன்

விழித்திர முதலில்

தனித்திறம் வளர்


உயர்வுக்காக

ஊன் பலி கொடுக்காதே

உன் பலியாம் திறமையை கொணர்


ஊமையாய் இருந்துகொண்டு

ஆமையை குறை கூறாதே

தீமையை சுடு


வேசிபின் அலையாமல்

பாசிகளை களைய முற்படு

தூசிகளை துடைத்து

நேசிப்பாய் சமத்துவத்தை.

யோசிப்பாய் ஒரு நிமிடம்


வேர்வை சிந்துவது நீ

போர்வை தூக்கம் அவனுக்கு

சோர்வை காணும் நீ -தொலைநோக்கு

பார்வை பார் சரியான

தீர்வை காண்..


இனியும் பொறுக்காதே

அணி திரள்வீர்

பணி முடிப்பீர்

கனி நம் கையில்


மண்ணின் மைந்தனே

மன்னவன் என்று நம்

முன்னவன் வினவினான்

உன்னவன் நானும்

வழிமொழிகிறேன்


நீ

இம்மண்ணின் மைந்தனென்றால்

நீ தான்

மன்னவன்...

Thursday, September 6, 2007

நான் ரசித்தவை

சிநேகிதியே....!!!!

நீ எனக்கு தோழியாக கிடைக்க
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?

உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட
உல்லாச வானில் பறந்திடு

உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்படு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்

பழையனவற்றை மறந்திடு
புதியதை தேடி விரைந்திடு
சோகத்தை தூக்கி எறிந்திடு
தோழன் என் தோளில்
தலை சாய்த்திடு

ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே