CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, February 22, 2008

அழுகையின் குரல்

வரையறை இல்லாத இன்பத்தில்
உயிர் ஜனித்த என்னை தூக்கி
வீசுகிறாள் பெற்றவளே..

வீசப்பட்ட எனக்கு சிலநேரத்தில்
பசிக்க பாலுக்காய் அழுகிறேன்.
அலங்கோல பெண்ணொருத்தி
அரவணைத்தாள் என்னையுமே..

அரவணைத்தவள் பாலூட்டநினையாமல்
அழுகையை காசாக்கி கொண்டாள்.
அழுகைக்கான அர்த்தம் அறியாமலே
அவளின் தட்டை நிரப்பும் உள்ளங்களே

அவளிடம் சொல்லி என் வயிறையும்
நிரப்ப சொல்வீர்களா???

Tuesday, February 19, 2008

டாஸ்மாக்.

கவலை கொண்ட நெஞ்சோடு
காலையிலே நடை பயணம்
ஆரம்பித்த சில நேரத்தில்

சாலையோர மாளிகையில்
சலசலக்கும் கூட்டமொன்று
சந்தினுள் நுழைந்து பார்த்தால்

வண்ண வண்ண புடவைகட்டி
வகைவகையாய் பெண்களங்கே
வரிசையாய் நிற்கின்றனர்.
விசாரித்து பார்த்தால் சுயம்வரம்
நடக்கிறது என்றார்கள்.

காசுகொடுத்துவாங்கி செல்லலாமாம்
எந்த பெண்ணையும் விலைபட்டியலோடு
பெயரும் பதிக்கபட்ட பலகையும் அருகில்

கவலைதீர சாலையோர மாளிகையில்
கல்யாணம் செய்து கொள் -கேட்டது
நண்பனின் குரலொன்று

சுயம்வர மோதலில் முட்டிமோதி
காசுகொடுத்து கட்டிகொண்டேன்
கட்டழகி ஒருத்தியை..

அங்கேயே ஒரு அறிவிப்புபலகை
அனுமதிபெற்ற அறையொன்று
முதலிரவு நடத்தவாம்..

உள்ளே சென்றேன் சென்றவுடனே
விசாரிப்புகள் ஆரம்பித்தன
இனிப்பா காரமா என???

காரத்தின் துணைகொண்டு
கற்பழித்து முடிக்கிறேன்
காசுகொடுத்து வாங்கியவளை..

கற்பழிந்த சோகத்தில் அவளும்
கற்பழித்த சோர்வில் நானும்
மயங்கியே சாய்கிறோம்..

மயக்கம் கொண்ட நெஞ்சிலே
கவலையோடு கண்ணீருமே
வெளிவருகின்றது..

போவோர் வருவோருக்கெல்லாம்
போதனை செய்ய அவர்களோ
எட்டி உதைத்து போகிறார்கள்..

சிலநேர மயக்கத்தின் தெளிவின்
பின்னால் மீண்டும் புறப்படுகிறேன்
சுயம்வர மாளிகைக்கு..

காசு கொடுத்தால் போதுமாமே
எத்தனை பேரையும் கூட்டி
கொடுக்குமாமே அரசின்

"டாஸ்மாக் விபச்சாரம்"

முதல் எழுத்து.

எதுவுமறியா குழந்தையின் கையில்
சிக்குண்ட வெற்றுகாகித கசக்கலாய்
நானும் எறியப்பட்டேன் காதலறியதெரியா.
பொய்யான காதலி ஒருத்தியால்.

மக்கும் குப்பைகுள்ளும் மகசூல்
தரும் சக்தி உண்டென புரிந்தது
உன்னால் மீண்டும் சரிசெய்யபட்டு
எழுதப்பட்ட வெற்றுகாகிதமெனக்கு.

உளிகொண்ட சிற்பியின் கண்பட்ட
கல்லின் சிற்பமாய் ஜொலித்தேன்
நானும் உன்னால் எழுதப்பட்டபின்
சிறந்ததொரு அழகான கவிதையாய்

அழகிய கவிதைக்காய் சிலநேரம்
அலைரசிக்கும் கவிஞனாய்
உன்னால் பிறந்த நான் மீண்டும்
கிழித்தெறிய பட்டதன் நோக்கமென்னவோ.

உன்னால் அழகாக்க பட்டவன்
கிழித்தெறியும் போது பிரசவவலி
காணும் தாயினும் வலிகொள்வேன்
என்று அறியவில்லையா நீ..

இறந்தபின்னும் சாந்தியடையா
ஆன்மாவை போல் அலைகிறேன்
நானும் உன்னுடனான பழைய
எழுத்துக்களை தேடி.....................

Saturday, January 19, 2008

தெரிந்தும் தெரியாத....

அழகுகுரலால் இசைபாடும்
குயிலின் கருத்த தேகமாய்
வண்ணத்தூரிகையில் எண்ணங்களை
வரையும் அந்தரத்தின் ஓவியனின்
வேர்த்தமுகமும் இழந்த உழைப்பும்

வெயிலும் மழையும் சூறையாய்
காற்றும் எத்தனை வந்தாலும்
பூக்களோடு உறவாடி உறிஞ்சுகுழலால்
தேனினை சேகரிக்கும் தேனியாய்
தினம் தினம் கூனிகுருகி
கொதிக்கும் தாரோடு கலந்த உடலாய்
பாதைகள் செப்பனிக்கும்
சாமான்யனின் கஸ்டமும்

மாடுகள் பூட்டிய கலப்பையை
கையில் ஏந்திகொண்டு சேற்று
காலணிகள் அணிந்தே போராடி
அறுக்கும் நெல்மணிகளுக்கு
பின்னால் மறைந்த வலிகளும்

வண்ணங்களோடு பறந்து திரியும்
பட்டாம்பூச்சியாய் கனவுகளோடு
சிரித்து கல்வி கற்கும் வயதில்
தீக்குச்சிகளோடு கணக்கியல் கற்கும்
அரும்பிய மொட்டுகளான சிறார்களின்
கருகிய கனவுகளும்

தெரியாமல் ஒன்றும் இல்லை.
அடர்ந்த மலைப்பனியில்
தெரியாத வாகனவெளிச்சமாய்
கேட்கும் சத்தமாய்
இவர்களின் வாழ்வும்
தெரிந்தும் தெரியாமல்......

நினைவுகளின் வலிகள்

அழகுபூங்காவில் அமைதிதென்றலின்
மெல்லிய ஸ்பரிசங்களாய்
எனக்குள் உன் இதமான
ஆரம்பங்கள் எல்லாம்மூடிகிடந்த
அறையின் சேர்ந்துவிட்ட
குப்பைகளாய் மனதினுள்
நினைவுகளாய் குவிந்தே கிடக்கின்றன.

செல்லரித்த ஓலைகள்
சொல்லிவிடும் வாழ்வியல்விதிகளாய்
இன்னமும்விரும்பியே ஏற்கிறேன்
விலையில்லா உன்னுடனான
நினைவுகளோடு வலிகளையும்..
நாம் நடந்த இடங்களை
நான் மட்டும் தனியாய்
கடக்கும் போதும்

அடர்ந்த காட்டுபாதையின்
தனியான பயணியாய்
பள்ளம் நோக்கி பயணிக்கும்
வண்டல்மண்ணோடு சேர்ந்த
நதியாய் உன் நினைவுகளை
சுமந்துகொண்டே பயணிக்கிறேன்
மரணமில்லா வாழ்வுக்காய்
மரணத்தை தேடி..

Thursday, January 17, 2008

எனக்குள் ஒரு தாக்கம்-தபு சங்கர்

வெளிச்சம்

யாருமில்லா இருட்டறையில்
தனியாய் அமர்ந்திருந்தேன்
கையில் விளக்கோடு வருகிறாய் நீ...
நீ வந்தாலே ஒளிவருமே
விளக்கெதற்கு என்றேன் நான்..
வெட்கத்தில் விளக்கினும் சிவந்து
அருகில் வைத்துவிட்டு
ஓடிவிடுகிறாய் நீ.
உன்னிலிருந்தே ஒளிபெற்று
பிரதிபலித்ததாய் சொல்லி
அணைகிறது விளக்கு...
**************************************************************************
தேவதை

தேவதை எப்படி இருக்கும்
என கேட்கும் உன் தம்பியிடம்
ரொம்ப அழகாயிருக்கும் என
சொல்லி முடிக்கிறாய் நீ.
உன்னைவிட அழகாய் இருக்க
முடியாதென்று சொல்லாமல்
தவிக்கிறேன் நான்...
**********************************************************************
தேவதைகளுக்கு சிறகுகள்
இருக்கும் என்று எங்கோ
படித்திருக்கிறேன்..
பொய் சொல்வோர் நிறைய
இருந்திருக்கிறார்கள் போலும்
நீ இங்கே சிறகில்லாமல்
இருப்பதை யாரும்
பார்க்கவில்லையோ
***********************************************************************
வானத்திலிருந்து
தான் தேவதைகள்
வருமாமே..
நீ மட்டும் எப்படி
எதிர்வீட்டிலிருந்து
வருகிறாய்...
**********************************************************************
தேவதைகள்
எப்போதுமே புன்னகையோடு
தான் இருக்குமாம்.
நீ மட்டும் காதல் சொன்னால்
ஏன் கோபப்படுகிறாய்.
*************************************************************************
தேவதைகள் எல்லாம்
காரணமின்றி யாரையும்
துன்புறுத்தாதாம்..
நீ மட்டும்
என்ன என்னை இல்லாமலே
ஆக்கிவிட்டாய்
***************************************
தாவணி

தாவணிகட்டியதால்
அழகாய் இருப்பதாய்
சொல்கிறாய் நீ..
உன்னை கட்டியதால்
அழகாய் இருப்பதாய்
சொல்லி பறக்கிறது
தாவணி..
************************************************
ஒரு மணிநேரமாய்
அலசுகிறாய்
ஜவுளிக்கடையில்
உனக்கான தாவணிக்கு.
உன் கை படும் தாவணிக்கெல்லாம்
தாங்கமுடியா சந்தோசம்
அதிஅழகியை தொட்டுவிட்டோமென
*****************************************************
உன்னால் நிராகரிக்கபட்ட
தாவணிகளெல்லாம்
உயிர்நீக்கின்றனவாம்
தன் சாயம் வெளுத்து
உனக்கானவையாய்
உருவாக்கபடாததினால்
***********************************************************
தாவணிகட்டினால்
கொள்ளையழகாய் இருக்கிறாய்நீ
என்று உன் முந்தானை இழுத்தேன் நான்
இவளிடம் இருந்து
என்னை பிரிக்காதே என
காற்றோடு சேர்ந்து
என்னை அடிக்கிறது தாவணி
****************************************************************

காணாமல் போனவர்கள்

தேடிகிடைத்த இரையை
தன் குஞ்சுகளுக்கு கொடுக்கும்
பறவையை போலே
நாள் முழுதும் வெயிலில்
உழைத்தாலும் தனக்கு
ஊற்றும் கஞ்சியை மிச்சம்
பிடித்து பிள்ளைக்கு தரும்
தாய் குடிகாரகணவனால்
காணாமல் தான் போய்விட்டாள்..

ஓய்வுநாளை அனுபவிக்க
ஓரமாய் நின்று ரசிக்க,
இன்றாவது தன்பிழைப்புக்கு
நிறைய வழிகிட்டாதா என
எதிர்பார்த்து சென்றவன்
இருக்க இடமில்லாமல்
இக்கரையாவது எனக்கு
இருப்பிடமாய் இருக்குமென
உறங்கிகிடந்த யாருமில்லா
சகோதர சகோதரிகாள்
என எல்லோரையும்
எழில் பொங்கும் அலையாய்
இருந்த கடலில் சின்னதாய்
ஒரு சினுங்கல் சுனாமியாய்
இத்தனை பேரும்
காணாமல் தான் போய்விட்டார்கள்..

பலமில்லா ஆட்டுகொட்டகையில்
நரிகள் புகுந்து அவற்றையுமே
அடித்துதின்னுவது போல்
எம் ஈழத்தமிழரின் இடம்தனை
பற்றிக்கொண்டு அவரையும்
துன்புறுத்துவோரை தட்டிகேட்டவரெல்லாம்
காணாமல் தான் போய்விட்டார்கள்.