நினைவஞ்சலி.
பெற்றவள் துடிதுடித்து..
மகனிடம் கண்ணீர் சிந்தி
கஞ்சிக்கு கையேந்த...
மகனோ..
மாற்றாம் தாய்
இறந்த செய்திகேட்டு
தாய்மையைப் போற்றி
அனுதாபக் கவி அச்சிட்டு
மக்கள் மத்தியில் புகழ்..
தேடுகின்றான்.
இல்லம்--
பெயரோ
அன்னை இல்லம்
அன்னையோ
முதியோர் இல்லத்தில்...
Thursday, November 29, 2007
இதயம் வலித்த வரிகள்-கவிதைகுயிலிடமிருந்து
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 9:44 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
Friday, November 23, 2007
என் காலையிலே.....
அழகான காலைப்பொழுதில்
அங்கமெனது சோம்பலுறிக்க
அடியெடுத்து வைத்தேன் வெளியே
அடுத்தவீட்டு வாசலிலே
அரிசிமாவெடுத்து
அதிசய தேவதையொன்று
அழகிய கோலம் வரைய
அங்கேயே மெய்மறந்தேன்.....
நிஜமதை மறந்து
நிழல்கனவு கண்டேன்
நித்திரையது கலைந்தும்...
சில்லென்ற பனித்துளியது
புல்லின்மீது படுத்துறங்கும்
ரம்மியமான இயற்கைக்கும்
போட்டியாய்
முத்தான வேர்வைகள் உன்
முகம் உதிர்த்தகாட்சி....
எத்தனைமுறை
இடம் மாறி மாறி
வரைவாய்...
உன் கால்கள் நினைத்து
என் மனது வலிக்கிறது...
நீ வைத்த
புள்ளிகளது என் நெஞ்சமதை
அள்ளி சென்றதை
எப்படி உரைப்பேனடி
கள்ளி உனக்கு.....
உன் ஈரக்கூந்தலது
இலேசான முடிச்சோடு
இடைவந்து மோதும் போது
சிக்கெடுக்காத கூந்தலில்
சிக்கிவிட்ட இதயத்தை
திரும்ப கேட்க முடியவில்லை....
உன்
கால் கொலுசொலியின்
ஓசையிலே
நாள் முழுதும் நிற்கதுடிக்குது
ஆசையிலே.....
அட..
ஒருவழியாய்
கோலம் முடித்து என் நிகழ்
காலத்துக்கு அழைத்துவந்தாய்...
பிரம்மனின் படைப்பையே
பிரமித்து பார்த்தவனின்
கரம்பிடித்து என்ன என்றாயே?
நரம்புகள் சிலிர்த்து
கிறங்கிபோனேனே.......
அடிகள்ளி
உனக்கும் ஆசையா
என உன் கரம் பற்றியவை
உதறிவிட்டு
சிரித்துக்கொண்டே
சித்திரமாய்
ஓடி உன் வீட்டின் கதவினில்
ஒளிந்துகொண்டு
ஓரவிழியால் பார்த்து
வெட்கபட்டாயே....
ரவிவர்மனின்
ஓவியத்தைவிட
கவித்துவமான
கவிதையா????
சிலையா நீ
பிரம்மனின் கலையது
வரம்பில்லா உன் அழகினால்
திணறிப்போனேன் நான்
தவமிருக்க துணிந்தேன்
வரமாய் உன்னை பெற.........
நீயே
என் வாழ்க்கைதுணயாய்
வருவாய் என்ற
ஆவலோடு.....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:33 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Wednesday, September 26, 2007
கல்லறை என் பார்வையில்
நெஞ்சம் முழுக்க
நிம்மதியுடன்
நிறைவான தூக்கம் இங்கே...
கண்கள் நிறைய
கனவுகள்
கருகிகிடக்கும் இங்கே...
சேராத காதல்கள்
சேர்ந்துவிடும் இங்கே...
சாதனையாளனும்
சதிகாரனும்
சங்கமாமிங்கே...
சாதனைகளின் முற்றுப்புள்ளி
சரித்திரங்கள் கற்கும் பள்ளி...
ஆம்
கற்றுக்கொடுக்காமல்
அனைவரும்
கற்கும்
கல்வி......இந்த
கல்லறை....
(அழியாத கவிபடைக்க ஆசைகொண்டே நினைவில் கொண்டு வந்தேன்...அழியும் மனிதவாழ்வை..அழியாத கல்லறையை)
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:46 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Tuesday, September 25, 2007
என் பார்வையில் இயற்கை
மழை
மேக ஒற்றுமையில்
காற்றின் ஒற்றடம்
மழை....
காற்று
ஒட்டுமொத்த மரத்தின்
ஒட்டார சினுங்கல்
காற்று....
வானம்
அழகிய அண்டத்தின்
அழியாத
அதிசயப் போர்வை
வானம்....
சூரியன்
சுறுசுறுப்புக்கு எடுத்துகாட்டாய்
சுற்றி வரும்
நெருப்புக்கோளம்
சூரியன்....
நிலவு
நெருப்பின் நிழலாய்
நெஞ்செங்கும் அழகாய்
கனவெல்லாம்
உலாவரும்
சூரியனின் பிரதிபலிப்பு
நிலா........
(அழியாதகவி படைக்க ஆசைகொண்டு அழகான அழியாத அதிசய இயற்கை என் பார்வையில்
எடுத்துவந்தேன்...தொடரும்)
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:43 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Saturday, September 22, 2007
உண்மைகள் பல விதம்
நான் அவளை பார்த்தது உண்மை
அவள் சிரித்ததும் உண்மை
நான் காதல் சொன்னது உண்மை
அவள் ஏத்துகிட்டதும் உண்மை
நான் திருமணம் செய்யநினைத்தது உண்மை
அவள் வேறொருவனை மணம் செய்தது உண்மை
என் மனம் இறந்தது உண்மை
அந்த கிளி பறந்ததும் உண்மை
தோழியவள் வந்ததும் உண்மை
தைரியமவள் தந்ததும் உண்மை
நான் அவளை மறுத்தது உண்மை
நான் இன்னும் சிறந்தது உண்மை
சமூகம் நோக்கி பார்த்ததும் உண்மை
சதி கண்டு வேர்த்ததும் உண்மை
பசிகொண்ட வாழ்க்கை உண்மை
பழம் கொண்ட உணவு உண்மை
ஆறுநாளைக்கு அரைவேளை கஞ்சி உண்மை
ஒரு வேளைக்கு நூறு டாலர் உணவு உண்மை
பார்வையாளன் பணக்காரன் ஆவது உண்மை
வேர்வைசிந்துபவன் கூலிக்காரனாய் இருப்பதுண்மை
வசதிகொண்ட வாழ்வும் உண்மை
வலிகொண்ட ஏழை உண்மை
மரணமும் உண்மை
ஜனனமும் உண்மை
காலம் இருப்பது உண்மை
கருப்பன் ஜெயிப்பது உண்மை
காக்கிற கடவுள் உண்மை
அழிக்கிற காலன் உண்மை
இதிலெல்லாம் எது உண்மை
இதில் எதுவெல்லாம் ஏற்பாடு
இதை அறிவது உங்கள் பாடு
நான் எழுதியது இந்தஏடு
உயர்வை தேட உண்மையை நாடு
உடனே உயரும் உன் நாடு
உண்மை சொல்ல வந்தேனுங்க
தண்மையான வார்த்தை கொண்டு
வெண்மையான உள்ளங்கொண்டு
வன்மை எதிர்த்து போராடு
நன்மைவரும் உன்னோடு
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:27 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
Thursday, September 20, 2007
ஒரு ஏழைப்பெண்ணின் அறைகூவல்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
நல்லதே செய்வோம்-உங்கள்
ஓலைவீடுகள்
ஒளிமயமாகும் என்றீர்கள்- ஆனால் உங்கள்
ஓட்டுச்சண்டைக்கு எங்கள்
ஓட்டைவீடுகளுக்கு
அள்ளிக்கொடுப்போம் என்று
கொள்ளிவைத்து விட்டீர்களே
எங்கள் வீட்டு
அடுப்பெரிய தானே வழிகேட்டோம்
இடுப்புகுழந்தையை எரித்தீரே..
உம்முடைய சதிக்கு எமக்கு
நிவாரணநிதி எதற்கு
கட்சிக்காக
தட்சணை கூட வாங்காமல்
உழைத்த என் கணவனுக்கு
குவாட்டர் வாங்கிகொடுத்து
குடிகாரனாக்கி விட்டீர்.
ஆயினும் அவன் செய்த
குறும்பால்
குழந்தை ஒருவன் வளர்கிறான்
வளர்க்கிறேன் அவனை
வல்லவனாக.உம்
வலிமையை
வலுவிழக்கச்செய்து
வாரிசுகளை வதைத்தெடுப்பான்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:28 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Wednesday, September 19, 2007
என் தோழி.
குறிக்கோளுடன் பயணித்தவன்
குரங்குமனக் காதலியால்
கிறங்கடிக்கப் பட்ட போது
மரணத்தின் வாசல் சென்றவனை
கரம் பிடித்து
காரணம் கேட்டவள் என்னிடம்
நிவாரணமாய் பேசினவள்-நீ
சந்திக்க உறவுகள் உண்டு
சிந்திக்க உரிமைகள் உண்டு என என்
சிந்தனைக்கு உணர்த்தியவள்..
ஆரோக்கியம் பேணுபவள்
அன்னை என்றால்
அவளும் என் அன்னை.
அறிவுரை தருபவர்
அப்பா என்றால்
அவள் தான் என் அப்பா
அறிவு புகட்டுவார்
ஆசானென்றால்
அவள் என் ஆசான்
காப்பது தெய்வமென்றால்
அவளன்றோ தெய்வம்.
தோழியால் மட்டுமே
அனைத்துமாய்
தோன்ற முடியும்....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 2:51 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை