இந்தியா சுதந்திரம் அடைந்து
விட்டது!!!
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே"
காந்தி சுட்டு கொல்லபட்டார்!!
"ஐயகோ என்னே கொடுமை"
அரசியலில் முழுக்க ஊழல்
ஆரம்பிச்சுட்டாங்களா??
அதிகாரிகளும் ஊழல் பண்றாங்க
அடப்பாவிங்களா???
நான்கு வயது சிறுமி கற்பழிப்பு
அப்படியா?
அண்ணன் தம்பி சண்டையில்
அரிவாள் வெட்டு அண்ணனுக்கு
அப்படியா?
அடுத்தவன் பொண்டாட்டியோடு
கள்ளக்காதல்..
கணவனின் ஆவேசம்
மனைவி,காதலன் இரட்டை கொலை
அப்படியா?
அணு ஒப்பந்தம் ஆட்சி கவிழ்ப்பாகலாம்
நம்பிக்கை ஓட்டெடுப்பு.
மத்தியில் எம்பிக்களிடம்
பணபுழக்கம்
அப்படியாப்பா?
அசோக்நகர்,வடபழனியில்
தொடர்கொலை-சைகோ யார்?
தேடுதலில் தீவிரமான போலிஸ்.
அப்படியாப்பா?
இந்துமதம் எங்கே போகிறது?
கேள்வியை தலைப்பாக்கி
கட்டுரைதொடர்..
அப்படியாப்பா?
இஸ்லாம் சொல்வதொன்றும்
செய்வதொன்றும்
அப்படியாப்பா?
தாயையே மதிக்காத மகனாய்
இயேசு..இங்கே அவரையும்
வணங்க ஆட்களென ஆதங்கம்
அப்படியாப்பா?
என்னப்பா அப்படியாப்பா?
நீங்களும் தான் காலகாலமாக
நல்லது கெட்டதென செய்திகளாய்
என் காதுகிழிய சொல்கிறீர்கள்.
நல்லது நடந்தது சரி..
தீயவைக்கு முற்றுபுள்ளி வந்ததாகவே
தெரியவில்லை..
இப்படியே போனால் அப்படியாப்பா
"அடப்போங்கப்பா"
எனக்கூட மாறும்..
என் மேல் வருத்தப்படவேண்டாம்.
-இது வரை நான்..இதற்கு மேல் கவிஞர் ருத்ரா...
தணிகைமலை மாமணியே
முருகைய்யா.."===============ருத்ரா
மதுரை சோமு இன்று
இப்படித்தான் பாடியிருப்பார்.
பேனாவுக்கு பதில்
ஒரு வேலாயுதத்தை வைத்து
கூர்மையாக குத்தி குத்தி
எழுதியிருக்கிறீர்கள்.
உங்கள் "அப்படியாப்பா?.."
"செய்தீ" வரிகளில்
அப்படியும் இல்லாமல்
இப்படியும் இல்லாமல்
"அலி"ப்பாக்கள் எனும்
ஒருவகை"கலிப்"பாக்கள்
அல்லவா எழுதியிருக்கிறீர்கள
ஒரு புதிய யாப்பிலக்கணத்தில்
தரவு கொச்சக கலிப்பா என்று
இதை சொல்லிக்கொள்ளலாம்.
மனிதமுகங்கள்
எத்தனை வகையாய் பூத்திருக்கின்றன?
ஒரு நேரம் ரோஜாப்பூ
மறு நேரம் எருக்கம்பூ
இன்னொரு நேரம் அல்லிப்பூ.
அப்புறம் பார்த்தால் கள்ளிப்பூ.
இந்த பூக்கள் எல்லாம்
எப்படி கொலைவாள்களாய்
மாறின?
மனித ஆத்மா தினமும்
படுகொலை செய்யப்படுகிறது.
இந்த சித்திரங்களின்
கலைடோஸ்கோப் காட்சிகளை
இல்லை இல்லை...
கொலைடோஸ்கோப் காட்சிகளை
நீங்கள் காட்டியிருப்பது
நம்மை திடுக்கிட வைக்கிறது.
கவிதைகள்
முகில்கள் போலும் உலவலாம்.
திகில்கள் ஊட்டியும்
திக் விஜயம் செய்யலாம்.
உங்கள் எழுத்துக்களின்
..இந்த"திக் திக் விஜயத்துக்கு"
நிச்சயம் வெற்றி தான்.
வாழ்த்துக்களுடன்ருத்ரா.
Thursday, July 24, 2008
அப்படியாப்பா??? இது கவிதைன்னு சொல்ல முடியாது
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Post a Comment