CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, August 29, 2008

வேண்டாமையும் வேண்டுதலும்...

நீ
என்னை பார்க்கிறாயா
என்பதெனக்கு தெரியவேண்டாம்!

நீ
என்னை நினைக்கிறாயா
என்பதெனக்கு தெரியவேண்டாம்!

நீ
என்னை ரசிக்கிறாயா
என்பதெனக்கு தெரியவேண்டாம்!

நீ
என்னை காதலிக்கிறாயா
என்பதெனக்கு தெரியவேண்டாம்!

நான்
உன்னை பார்ப்பதும்
உன்னை நினைப்பதும்
உன்னை ரசிப்பதும்
உன்னை காதலிப்பதும்

உனக்கு
தெரியும் தான்
என்பதெனக்கு தெரியவேண்டும்...

அதுமட்டும் தான்
எனக்கு தெரியவேண்டும்..

தங்கைக்கோர் கவிதை...

எனக்கான தங்கையெனும்
உறவோடு தான் உள்நுழைந்தாய்!

சின்ன சின்னதாய் தான்
உனக்கும் எனக்கும் உரையாடல்கள்
நட்பை பெரியதாய் மாற்றியிருக்கும்!

ஆம். நீ தான் இப்போது
என்னுயிர் தோழியாய்
என்னுள்ளே எப்போதும்
இருக்கிறாய்!

தூரமாக நாமிருந்தாலும்
துளைத்து கொண்டிருக்கும்
உன் எஸ் எம் எஸ் இதயத்தை..

இப்போதெல்லாம் நீ
இதயத்தில் மட்டுமல்ல
இரத்தநாளங்களில் கலந்து
உயிர்முழுக்க புரையோடியிருக்கிறாய்..

எனக்கான உன் அறிவுறுத்தல்கள்
செல்ல கோபங்கள்
சின்னதான கெஞ்சல்கள்
எனக்கான குழந்தையாய்
உன்னை காட்டி நிற்கும்..

அதிகபட்ச மன அழுத்தங்களில்
மீள்வதற்காய் உன் குரலையே
நாடும் என் சிந்தையும் செல்போனும்..

ஒப்புக்கான உறவுகள் மத்தியில்
எனக்கான பிறப்பு நீ!

என்னுள்ளே என்னுள்ளே
ஆழ்ந்துகிடக்கும் உன் நினைவுகள்
எப்போதும் அழியபோவதில்லை..

உன்னை பற்றி சுருக்கமாய்
சொல்ல நினைக்கையில்
உயிரென்ற வார்த்தை தவிர
வேறொன்று நினைவிலில்லை..

ஆம்
என் உயிர் நீதானே!

Saturday, August 23, 2008

மெய்யும் ...மெய்யான பொய்யும்...

எனக்கு என்ன தோன்றியதோ
அதை மட்டுமே உன்னிடம்
சொல்லியிருக்கிறேன்..
சொல்லிக்கொண்டுமிருக்கிறேன்...

உன்னை பற்றி வர்ணிக்கும்
தருணங்களில் புகழ்ச்சி
வேண்டாமென்பதாயும்
உண்மை உரைக்குமாறும்
கேட்டுகொண்டிருப்பாய்...

எனக்கு என்ன தோன்றியதோ
அதை மட்டுமே உன்னிடம்
சொல்லியிருக்கிறேன்..
சொல்லிகொண்டுமிருக்கிறேன்..

என்னைபற்றி சொல்லுவதெல்லாம்
உண்மையெனவும் உன் அழகை
பொய்யெனவும் பதிலுரைப்பாய்..

எனக்கு அதில் மட்டும் தான்
மிகுந்த ஆச்சர்யமே ..
ஒரு அழகிக்கே அழகை பற்றி
தெரியவில்லை என்..

உன்னை பற்றி நான்
சொன்னதெல்லாம் உண்மை..
நம்பிக்கையில்லையெனில்
என்னிடம் தான் கேட்க
வேண்டும் மீண்டும்..

எதற்கென்று யோசிக்காதே!
வேறெவரும் உண்மை சொல்லா
விட்டால் ...பொய்யாகி விடுமே...

எனக்கு என்ன தோன்றியதோ
அதை மட்டுமே உன்னிடம்
சொல்லியிருக்கிறேன்..
சொல்லிக்கொண்டுமிருக்கிறேன்...


மழை மண்ணோக்கியே தான் வரும்....

Friday, August 22, 2008

ஒரு படைப்பின் குறிப்புகள்...

மாபெரும் அண்டமானது
வெறிச்சோடி கிடக்க காண்பதென்னவோ
எனக்கு பொறுக்கவில்லை..

உணர்வுகளை பிரதிபலிப்பதாய்
உயிர்களை படைத்துவிட
முடிவு செய்து ஆயத்தங்கள்
செய்து விட்டேன்..

முதலில் சிறிது சிறிதான
என எண்ணற்ற உயிர்கள்
படைக்கபட்டது என்னால்..

நானும் உயிர்களை படைப்பதில்
தேர்ந்தவனாய் இல்லாமையின்
விளைவுகள் படைத்தல் தொடர்ந்தது
வகை வகையாய்..

ஒவ்வொன்றிலும் ஏதோ
ஒரு குறையிருப்பதாய்
உணர்ந்து கடைசியாய்

மனிதனை படைக்கும்
யோசனையில் பலன்
நான் எதிர்பார்த்த வாறே தான்..

உணர்வுகளை வெளிபடுத்தி
ஆக்கங்களை மட்டுமே
தருவதற்காயும் என்வேலையை
இலகுவாக்கவுமே படைத்தேன்,..

ஆரம்பமென்னவோ
நன்றாக தான் இருந்தது..
ஆக்கங்களில் ஈடுபட்டவன்
அழிவு வேலையை செய்ய

ஆரம்பித்ததில் எனக்கும்
வருத்தம் தான்..

இனியாவது
செய்வன திருந்த செய்ய
வேண்டுமென்று உறுதியாக
இருக்கிறேன்..

மனிதா!
உன்னை விட உன்னதமாய்
உயிரொன்று மிகவிரைவில்....

எதிர்பார்த்ததும் பாராததும்

நான் உன்னை
எதிர்பார்த்திருந்தேன்..

உன்னை மட்டுமே
எதிர்பார்த்திருந்தேன்..

ஆம் இப்போதெல்லாம்
உன்னை தான் அதிகமாக
எதிர்பார்த்திருக்கிறேன்..

உன்னை-
இதில் என்னவெல்லாம்
எதிர்பார்த்திருக்கிறேன்
என்று தெரியுமா உனக்கு!

விழிகள் வெளிசிந்தும்
விசேஷ பார்வைகள்
உதடுகள் உச்சரிக்கும்
உன்னத புன்னகை

கொலுசுகள் பேசும்
சங்கீத மொழி
புருவங்களின் நெளிவுகள்
பருவத்தின் அபிநயம்

இது மட்டுமல்ல
உன்னை எதிர்பார்ப்பது
இன்னும்

எனக்கான காதலும்
காதலுக்கான உன்னையும் தான்..

ஆம்
நான் உன்னை
மட்டுமே எதிர்பார்த்திருந்தேன்!

நீ
உன்
அண்ணனோடு
வருவாய் என எதிர்பார்க்க
தவறிவிட்டிருந்தேன்..

நீ
நான் எதிர்பார்த்த
உன்னை தொலைத்து
எதிரே வந்திருந்தாய்..

ஆம்
அண்ணனோடு உன்னை
நான் எதிர்பார்க்கவில்லையே

காத்திருத்தலில்
ஏமாற்றமும் சேர்ந்தென்னை
ஏளனமாய் சிரிக்க

தலைகவிழ்ந்து
நிமிர்வதற்குள்

நான்
எதிர்பாராத உன் அண்ணன்
என்னருகில் எரிக்கும்படி
பார்த்துகொண்டிருந்தான்..

நான்
உன்பார்வையை தானே
கேட்டேன்..
நீ
வேர்வை வரவல்லவா
வைத்துவிட்டாய்!

பயமில்லாத மாதிரி
முகபாவம் வரவழைக்க
நான் பட்ட பாடு
நீ அறிந்திருக்க மாட்டாய்!

பூவிரலால்
கரம்கோர்ப்பாய் என
எதிர்பார்த்தேன்

நீயோ
பூதத்தின் விரலுக்கிடையில்
அல்லவா மாட்டிவிட்டாய்!

இரும்பு பிடி பிடித்தான்
துரும்பென கூட பாராமல்!

கால்கொலுசொலி கேட்கதான்
எதிர்பார்த்தேன்..
என் காதுகிழிய அடிப்பான்
என எதிர்பாக்கவில்லை
நான்..

அட
இப்போது தான் நான் கேட்ட
புன்னகை உன்னிடம் வந்தது.
இப்போது நான் எதிர்பார்க்கவே
இல்லை தெரியுமா?
**********************************************************

நான்
உன்னை மட்டுமே
எதிர்பார்த்திருந்தேன்..

உண்மையில்
உன்னை உனக்கு
தெரிந்து தான் நான்
எதிர்பார்த்திருந்தேன்..

உன்னை-
இதில் நான் என்னவெல்லாம்
எதிர்பார்த்திருந்தேன் தெரியுமா?

விளக்கங்கள்
கொடுக்கலாம் என்று தான்
நினைத்தேன்..

நீ யும்
என்னை எதிர்பார்த்திருந்தால்
உன்னை-இதில்
உன்னை வர்ணித்து தான்
எழுதியிருப்பேன்..

நீ
எதிர்பார்க்கவும் இல்லை
எதிரே பார்க்கவும் இல்லை

நான்
எதிரிலே நின்று பார்க்கிறேன்
எதிர்பார்க்கவும் செய்கிறேன்

ஆம்
உன்னை
மட்டும் தான் நான்
எதிர்பார்த்திருந்தேன்..

நீ
எதிர்பாராதது ஒன்று
நான் சொல்லவா?

ஆம்
நான் உன்னை
மட்டுமே
எதிர்பார்த்திருந்தேன்

இதுவல்ல நான்
சொல்லவந்தது

இதையே
மூன்று பெண்களிடமாவது
சொல்லியிருப்பேன்..
ஹி ஹி ஹி..
ஒன்று மட்டும் இப்போது
உன்னிடம் இருந்து
எதிர்பார்க்கிறேன்..

உனக்கு அண்ணன்
இருந்தால் முன்னமே
சொல்லிவிடுவாய் என!!

Friday, August 1, 2008

காதல்..



சூரியன் அஸ்தமிக்குமொரு பொழுதில்
இரு நிலவுகள் உதயமாகிறதென்னில்..

வானிலவின் தண்மையை மறைத்து
கொள்கிறது பூநிலவின் அழகு.

இந்நிலவை மட்டுமே வெறிக்கிறது
என் காத்திருத்தல் முழுமையும்.

எவ்வுளவு உதறியும் விழுந்துவிடாமல்
கூடவே பயணிக்கிறது நிலவின் நினைவுகள்.

இரவுகள் விழித்துகொண்டு நினைவுபேய்கள்
இங்குமங்குமாய் அலைந்துகொண்டிருக்க

இதயத்தில் ஒழுக ஆரம்பிக்கிறது
காதலின் வாசத்தோடான குருதி..

குருதியின் வாசத்தை நிலவில்
நுழைக்க திட்டம் தீட்டிகொண்டிருக்கிறோம்..

நானும் என் மனமும்...