CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, April 30, 2007

01-06-06

*இன்று
என்னவளுக்கும்
எவனோ ஒருவனுக்கும்
நிச்சயதார்தமாம்

*இன்னுமொரு
பெரிய திருப்பம்
என் வாழ்வில்.

*இழந்தது போதவில்லை
போலும்
பிரிந்துவிட்டாள்
அவளும்

*குமுறுகிறது மனம்
அழுகிறது மனக்கண்கள் -மூட
மறுக்கிறது நிஜக்கண்கள்

*கனவிலே நினைவாகி
நின்றவள்
நிஜத்திலே கனவாகிப்
போனாள்

*கண்களில் காதலாய்
வந்தவள்
கண்ணீரில் கரையவிட்டுப்
போனாள்

*பவுர்ணமி என்று வர்ணித்தேன்
அவளை- நிலவு தேய்ந்து விடும்
என்பதை
மறந்து - ஆம்
மறைந்துவிட்டாள்

*எத்தனை
இன்னல் வந்தாலும்
இணைவோம் என்றாள்.
இணந்துவிட்டது இன்னல்
என்னோடு
இணைந்துவிட்டாள் அவள்
இன்னொருவனோடு

*அவன் எழுதியது நடக்கும்
என்றாள் அன்றே
அவள் அறியாமல் போனால்
தவறில்லை
அவள் மனம் மாறுமென்று
அறியாளோ?
அறிந்தும் கூறாமல் போனதன்
காரணமென்னவோ.

*மாற்றான் கண்பட்டது போலும்
என் வாழ்வில்
மாறியது அவள்
மனம் சட்டென்று

*மாற்றத்தால் அவளறியாள்
என் இன்னலை
மாற்றம் கண்டுதான்
எனக்கும் புரியலை

*காலத்தை காரணம்
காட்டுகிறாள் அவள்
கடந்துவிட்ட வாய்ப்பை
தேடுகிறேன் நான்

*தாய் தந்தை கஸ்டம்
என்கிறாள் அவள்
என்னித்தனைக்கால நஸ்டம்
புரியவில்லை அவளுக்கு

*இன்னலை தேடிப்போனேன்
நானே -இனியவளே என்று
இன்னமும் ஆறலையடி மனது
வடுவாகிப்போனதடி உன் நினைவு

*கால் போனதிசை போகிறது
உடல்
மனம் போனதிசை போகிறது
உயிர்

*உயிரெங்கே தேடினால்
உனதருகே
நீ எங்கே தேடினால்
அவனருகே

*நினைக்க மறுக்குதடி மனமும்
சகிக்க முடியலையடி அதையும்
இறக்க நினைக்குதடி உயிரும்
மறக்க சொல்லுதடி நண்பர் கூட்டம்

*அவரும் அறிவார் காதல்வலி
ஆயினும் தருவார் ஆறுதல்

*இதயத்தில் உன்னை சுமந்ததால்
நானும் ஆனேன் தாயாய்

நீயும் ஆனாய் தாரமாய்
அவனுக்கு
வலிக்குதடி
எனக்கு

*நானும் சுமக்கிறேன்
குழந்தையாய் உன்னை
நீயும் சுமப்பாய்
குழந்தையாய் அவன் வித்தை

நெஞ்சம் கூசுதடி நினைத்தால்
தூக்கமும் வரலையடி படுத்தால்

*இன்பம் போல் தெரிந்து
துன்பம் மட்டும் தந்தவளே
இனியாவது இன்பம்
தருவாய் அவனுக்கு

*உன் மனம் ஒரு
குரங்கு
தயவு செய்து
இரங்கு

என்
ஆணினம் பாவம்
ஆக்கிடாதே சவம்

*தவமிருந்தேன் வரமாய்
உன்னை பெற
கடவுள்தான் இல்லையடி
வரம் தர

*வெளியே சிரிக்கிறேன்
உள்ளே அழுகிறேன்
நானும் ஆனேன் என்னவோ

*என்
பிறை நிலவே
குறை தவமே
அறை மனமே
அகல் விளக்கே
பகல் கனவே
நகல் பொருளே

மொத்தத்தில்
நிரந்தரமில்லாதவள்
நீ
நிலைகுலைந்து போனேன்
நான்.

*சிந்தும் தூரலில்
சிறகடித்து வந்தாள்
- காண கண்கோடி தேவை என்றேன்
கொட்டும் மழையில்
நொறுங்கடித்து போனாள்
- நிற்க தெருக்கோடி கிடைத்தது தான்
அழகு
கோடியை கொடுத்தவன்
கேட்டதை கொடுக்கலையே

*அழகு
ஆபத்து என்றான்
அன்றே கவின்ஞன்

அப்போது கண்டித்தேன் நான் அவனை
இப்போது துண்டித்தாள் இவள் என்னை

*அலசியதில் புரிந்தது
அழிவு தான்
அழகு என்று.....................

Sunday, April 29, 2007

வரம்.

* என்னவளே
நான் இதுவரையில்
காணாத பெளர்ணமி
உன் முகம்

*நான் என்றுமே
காணாத ஈர்ப்பு
உன் விழி

*நான் உன்னிடம்
பெறாத வரம்
உன் காதல்..

வேண்டுகோள்.

ஓ! பிரம்மனே

செய்வன திருந்த செய்

என்னவளுக்கு

இதயம் இல்லை

காதலை வாழவைப்போம்...

*உலகமே வியக்குமினிய காதலை
நாம் வாழ்ந்து கொண்டே
வாழவைப்போம்

*உடல்களின் தேடல்கள் அல்ல- காதல்
இரு உள்ளங்களின் சேரல்
என்பதை உணர்த்துவோம்

*முத்தங்களின் பரிமாற்றமல்ல-காதல்
இரு இதயங்களின் இடமாற்றம்
என்பதை இயற்றுவோம்

*கட்டிப்பிடிப்பதில் இல்லை - காதல்
மனம் விட்டுக்கொடுப்பதில் உண்டு
என்பதை கற்பிப்போம்.

*தற்கொலை செய்வதை ஒழித்து
தன்னம்பிக்கை வளர்ப்போம்.

*எதிர்ப்புகளை
ஏணியாக்குவோம்

*ஆம் அன்பே
உலகமே வியக்கும் இனிய காதலை
நாம் வாழ்ந்து கொண்டே
வாழவைப்போம்..

காதலை சொல்லி........ காத்திருக்கிறேன்..........

. இனியவளே
உன்னிடம் உதிர்த்த
ஓரிரு வார்த்தைகளுக்கு
என் மனம்
எத்தனை ஒத்திகை
பார்த்திருக்கும்..

.அவற்றை எல்லாம்
போற்றி
பாதுகாக்குமே
என் சிந்தை

.நீரின்றி மீன்களா?
அன்பே
உன் நினைவுகளின்றி
என் கவிதைகளா?

.வடிவமின்றி
நிழல்களா?

.ஆம் அன்பே
இந்த நிழலுக்கு
வடிவம் கொடுக்க
நீ உதிர்க்கும்
வார்த்தைகளுக்கு
காத்திருக்கிறேன்....

Saturday, April 28, 2007

காதல் சொல்ல வந்தேன்.....

என்னவளே!

நான்
கண்களை திறந்து
வைக்கையில் -நீ
காட்சிகளாய் வந்து
போகிறாய்.........

நான்
கவிதைகளை எழுதி
வைக்கையில் -நீ
மொழிகளாய் தோன்றி
மறைகிறாய்........

நான்
நித்திரையை தழுவி
இருக்கையில் -நீ
கனவுகளாய் தோன்றி
மறைகிறாய்.......

நான்
தனிமையில் நின்று
தவிக்கையில் -நீ
நினைவுகளாய் நெஞ்சை
நிறைகிறாய்...........

- ஆனால்

நான்
காதல் சொல்ல வந்தால்
மட்டும் - ஏன் அன்பே
காட்சிகளை மறைத்து
மொழிகளை மறநந்து
கனவுகளை கலைத்து
நினைவுகளை நீக்கி
மவுனத்தை மட்டும்
எனக்கு
பரிசளிக்கிறாய்......................


தணிகை

நான் ரசித்தவை

நீ வாழ்வதற்கு பிறந்தவன் வீழ்வதற்கல்ல

யாரது மெளனமாய்
ஏனடா விழிகள் நீருடன்

என்ன!
தோல்வியால் தோய்ந்து போனாயா

கலங்காதே வீரனே!
விழிநீர் துடைத்து
நெஞ்சினை நிமிர்த்து

நீ வாழ்வதற்கு
பிறந்தவன்
வீழ்வதற்கல்ல

உன் அகத்தீயினை
அனைக்க வேண்டாம்
தோல்விக்கு கொல்லியிட
தேவைப்படும் நமக்கு.

உன்னை சுற்றி
புறம் சொன்னோர்நெற்றி
நிலம் காணவைப்போம் வா!

வெற்றியின் விலாசம்
வேண்டாம் இனி உனக்கு
வெற்றி உன்னை தேடட்டும்
அதுதான் என் கணக்கு

புலம்பலை விடுத்து-லட்சியத்தை
புருவத்தின் இடை நிறுத்து

தோல்வி ஓர் கோழையடா!
தோற்றுப்போகும் உன்னிடத்தில்
ஆத்திரமும் அவசரமும்
தோல்வியின் ஒற்றர்கள்
அவர்கள் இனி நமக்கெதற்கு?

கடந்ததை சிதறடித்து
கவனத்தை முன் நிறுத்து

ஆதவன் இனி உனக்கு
அஸ்தமிக்க போவதில்லை!
சாதனை புரியும் வரை-நீ
சாகவும்போவதில்லை

சுறுசுறுப்பு சுடர் ஏற்றி
சோம்பலை சாம்பலாக்கு

திட்டமிடு பக்குவமாய்
திருத்திக்கொள் தவறுகளை

உன்னை விடு என்னை விடு-உன்
உழைப்பிற்க்கு முதன்மை கொடு
உழைப்பென்னும் வாளெடுத்து
முயற்சிப்பாதையில்
நம்பிக்கை குதிரை ஏறி
உலகை வெல்வோம் வா!
வெற்றி நமதே!

--யாழ் பிரபு

Thursday, April 26, 2007

தோல்விகள்

.முத்தமிழ் மன்ற போட்டியில்

முதல் பரிசு பெற்றவன்

முதல் முறையாய் தோற்றேன்..

சந்தனச்சிலையாம் உன்னை

சந்தித்த முதல் நாள்..

. உடற்பயிற்சி போட்டியில்

முதல் பரிசு பெற்றவன்

இரண்டாம் முறையாய் தோற்றேன்

கண்ணழகியாம் உன்னை

காதலித்த முதலாய்........

. ஆண்டுத்தேர்விலும்

அதிக மதிப்பெண் பெற்றவன்

மூன்றாம் முறையாய்

முழுதும் தோற்றேன்

பதுமையாம் நீ - என்மேல்

பாசம் வைத்த முதலாய்.......

பள்ளி முடிந்தது

பயணம் தொடருமா ?.- என்றதற்கு

. கல்லூரிக்கு போகாதே

கல்யாணம் பண்ணிக்கலாம்.

கம்பெனிக்குப்போ- என்றாய்

காலூன்றமுடியாமல் நான் பட்ட

கஸ்டங்கள் நீ அறிவாய்...

.உன் உள்ளம் போல் வாழவைக்க

உன்னவன்

உழைத்தேன்

உயர்ந்தேன்

உன்னை கண்டபின் முதல் ஏற்றம்

என்னில்.....- மகிழ்ச்சி

.மகிழ்ச்சியுடன் வாழ்ந்தவனை

மணம் முடிக்க அழைப்பாய்

-என்றிருந்தேன்

மாமனோடு திருமணம்

மறக்காமல் வந்துவிடு என்று

மனம் கூசாமல் சொன்னாய்.......

.ஏழரை வருடம் காதலித்து

எட்டு வார இடைவெளியில்

எப்படீயடி

என்னை மறந்தாய்....

.ஜெயிக்க மட்டுமே

ஜனனம் எடுத்தவன் உயிருள்ள

ஜடமாய் இந்த

ஜகத்தினில்..........

Wednesday, April 25, 2007

என் செல்ல லூசு................

ஏப்ரல் 26 ,2007 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்

பேகம் என்னோட தோழி கல்லூரி முடிந்து வீட்டுக்கு போகிறாள்.

இணைவோம் என்றாள்

எத்தனை

இன்னல் வந்தாலும்

இணைவோம் என்றாயடி -நீ

இணைந்தாய்

இன்னொருவனோடு....- நான்

இணைந்தேன்

இன்னலோடு................

ஒத்திகை

ஒத்திகை

உன்னிடம்

உதிர்த்த முதல் வார்த்தைக்கு

எத்தனை ஒத்திகை

பார்த்திருக்கும் என் மனம்

- நீ மட்டும்

ஒருமுறை கூட யோசிக்காமல்

வந்துவிடு என்றாய்

உன் திருமணத்திற்கு.................

இயற்கையும், நீயும்

இயற்கையும், நீயும்

சலனமே இல்லாத

ஓடை - உன் மெளனம்

எழில்மிகு நந்தவனத்தில்

மான் துள்ளல் - உன் கண்கள்


பொட்டல் காட்டில்

மழை - என் மீதான உன் முதல் பார்வை

அழகு தோட்டத்தில் பூத்ததாம்

அத்திப்பூ - என் உடனான உன் முதல் வார்த்தை

சுட்டெரிக்கும் கோடையில்

தென்றல்- என் மேல் உனக்கு காதல்

காலங்களில் சிறந்ததாம்

வசந்தம் - நம் காதல் பயணம்

அழகான அலை அதிலொரு

சுனாமி - என் மேல் உன் கோபம்

பரந்த பூமி பதறும்

நிலநடுக்கம்- உன் திடீர்

திருமணம்.........

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

என்னவளே!
உன் மெளனம்

என் தூக்கத்தை கலைத்தது

எதிர்பார்க்கின்றேன்........

உன் இதழ்களின் இயக்கம்

என் துக்கத்தை கலைக்கும்
என்று..............................

என் தோழி.........

எங்கேயோ தூரமாய்
இருந்து கொண்டு
தொலைபேசியில்
ஹாய் சொல்லிப் பழகி விட்டோம்

"ஹாய்"க்கும் "பை"க்கும்
நடுவில் சிக்கித் திணருகிறது
நம் வாழ்வு

நாம் பேசிய பேச்சுக்கள்
மட்டுமே நம் நினைவுகளின்
எச்சமாய் என்
செவிப்பறைகளில்
எதிரொலிக்கிறது

அலுவலக தொலைபேசியும்,
அருண் ஐஸ்கிரீம்களும்,
இரயில் நிலையங்களும்",
கவிதைகளும்
அடிக்கடிஉன்னை நினைவுபடுத்துகின்றன‌

சீக்கிரம் வா உன்னைச் சந்திக்கவேண்டும்

காதலியின் பிரிவுகூட‌
என்னை இப்படி
வாட்டியதில்லையடி
என் தோழி...

இரவுகளின் பிடியில்..........

எனக்கென்று

இருந்த சில இதயங்கள்

என்னை விட்டு

எங்கெங்கோ பறந்து செல்ல

பரிதவிக்கும் நான் மீண்டும்

இரவின் பிடியில்

இதம் தரும்

இதயங்களைத்தேடி..............

Tuesday, April 24, 2007

தியாகம்

அம்மாவின் மறைக்கப்பட்ட பசி

அவள் பிள்ளைக்கு

அடுத்தவேளை உணவாய்.........

உயிர்

ஆண்டவன் அருளால்

அன்னை தந்தையின்

அரவணைப்பில்

அரும்பும்

அற்புதம்......

உயிர்




அற்புதமாய்

தணிகை

உயிர்

ஆண்டவன் அருளால்

அன்னை தந்தையின்

அரவணைப்பில்

அரும்பும்

அற்புதம்......


அற்புதமாய்

தணிகை