CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, January 19, 2008

தெரிந்தும் தெரியாத....

அழகுகுரலால் இசைபாடும்
குயிலின் கருத்த தேகமாய்
வண்ணத்தூரிகையில் எண்ணங்களை
வரையும் அந்தரத்தின் ஓவியனின்
வேர்த்தமுகமும் இழந்த உழைப்பும்

வெயிலும் மழையும் சூறையாய்
காற்றும் எத்தனை வந்தாலும்
பூக்களோடு உறவாடி உறிஞ்சுகுழலால்
தேனினை சேகரிக்கும் தேனியாய்
தினம் தினம் கூனிகுருகி
கொதிக்கும் தாரோடு கலந்த உடலாய்
பாதைகள் செப்பனிக்கும்
சாமான்யனின் கஸ்டமும்

மாடுகள் பூட்டிய கலப்பையை
கையில் ஏந்திகொண்டு சேற்று
காலணிகள் அணிந்தே போராடி
அறுக்கும் நெல்மணிகளுக்கு
பின்னால் மறைந்த வலிகளும்

வண்ணங்களோடு பறந்து திரியும்
பட்டாம்பூச்சியாய் கனவுகளோடு
சிரித்து கல்வி கற்கும் வயதில்
தீக்குச்சிகளோடு கணக்கியல் கற்கும்
அரும்பிய மொட்டுகளான சிறார்களின்
கருகிய கனவுகளும்

தெரியாமல் ஒன்றும் இல்லை.
அடர்ந்த மலைப்பனியில்
தெரியாத வாகனவெளிச்சமாய்
கேட்கும் சத்தமாய்
இவர்களின் வாழ்வும்
தெரிந்தும் தெரியாமல்......

நினைவுகளின் வலிகள்

அழகுபூங்காவில் அமைதிதென்றலின்
மெல்லிய ஸ்பரிசங்களாய்
எனக்குள் உன் இதமான
ஆரம்பங்கள் எல்லாம்மூடிகிடந்த
அறையின் சேர்ந்துவிட்ட
குப்பைகளாய் மனதினுள்
நினைவுகளாய் குவிந்தே கிடக்கின்றன.

செல்லரித்த ஓலைகள்
சொல்லிவிடும் வாழ்வியல்விதிகளாய்
இன்னமும்விரும்பியே ஏற்கிறேன்
விலையில்லா உன்னுடனான
நினைவுகளோடு வலிகளையும்..
நாம் நடந்த இடங்களை
நான் மட்டும் தனியாய்
கடக்கும் போதும்

அடர்ந்த காட்டுபாதையின்
தனியான பயணியாய்
பள்ளம் நோக்கி பயணிக்கும்
வண்டல்மண்ணோடு சேர்ந்த
நதியாய் உன் நினைவுகளை
சுமந்துகொண்டே பயணிக்கிறேன்
மரணமில்லா வாழ்வுக்காய்
மரணத்தை தேடி..

Thursday, January 17, 2008

எனக்குள் ஒரு தாக்கம்-தபு சங்கர்

வெளிச்சம்

யாருமில்லா இருட்டறையில்
தனியாய் அமர்ந்திருந்தேன்
கையில் விளக்கோடு வருகிறாய் நீ...
நீ வந்தாலே ஒளிவருமே
விளக்கெதற்கு என்றேன் நான்..
வெட்கத்தில் விளக்கினும் சிவந்து
அருகில் வைத்துவிட்டு
ஓடிவிடுகிறாய் நீ.
உன்னிலிருந்தே ஒளிபெற்று
பிரதிபலித்ததாய் சொல்லி
அணைகிறது விளக்கு...
**************************************************************************
தேவதை

தேவதை எப்படி இருக்கும்
என கேட்கும் உன் தம்பியிடம்
ரொம்ப அழகாயிருக்கும் என
சொல்லி முடிக்கிறாய் நீ.
உன்னைவிட அழகாய் இருக்க
முடியாதென்று சொல்லாமல்
தவிக்கிறேன் நான்...
**********************************************************************
தேவதைகளுக்கு சிறகுகள்
இருக்கும் என்று எங்கோ
படித்திருக்கிறேன்..
பொய் சொல்வோர் நிறைய
இருந்திருக்கிறார்கள் போலும்
நீ இங்கே சிறகில்லாமல்
இருப்பதை யாரும்
பார்க்கவில்லையோ
***********************************************************************
வானத்திலிருந்து
தான் தேவதைகள்
வருமாமே..
நீ மட்டும் எப்படி
எதிர்வீட்டிலிருந்து
வருகிறாய்...
**********************************************************************
தேவதைகள்
எப்போதுமே புன்னகையோடு
தான் இருக்குமாம்.
நீ மட்டும் காதல் சொன்னால்
ஏன் கோபப்படுகிறாய்.
*************************************************************************
தேவதைகள் எல்லாம்
காரணமின்றி யாரையும்
துன்புறுத்தாதாம்..
நீ மட்டும்
என்ன என்னை இல்லாமலே
ஆக்கிவிட்டாய்
***************************************
தாவணி

தாவணிகட்டியதால்
அழகாய் இருப்பதாய்
சொல்கிறாய் நீ..
உன்னை கட்டியதால்
அழகாய் இருப்பதாய்
சொல்லி பறக்கிறது
தாவணி..
************************************************
ஒரு மணிநேரமாய்
அலசுகிறாய்
ஜவுளிக்கடையில்
உனக்கான தாவணிக்கு.
உன் கை படும் தாவணிக்கெல்லாம்
தாங்கமுடியா சந்தோசம்
அதிஅழகியை தொட்டுவிட்டோமென
*****************************************************
உன்னால் நிராகரிக்கபட்ட
தாவணிகளெல்லாம்
உயிர்நீக்கின்றனவாம்
தன் சாயம் வெளுத்து
உனக்கானவையாய்
உருவாக்கபடாததினால்
***********************************************************
தாவணிகட்டினால்
கொள்ளையழகாய் இருக்கிறாய்நீ
என்று உன் முந்தானை இழுத்தேன் நான்
இவளிடம் இருந்து
என்னை பிரிக்காதே என
காற்றோடு சேர்ந்து
என்னை அடிக்கிறது தாவணி
****************************************************************

காணாமல் போனவர்கள்

தேடிகிடைத்த இரையை
தன் குஞ்சுகளுக்கு கொடுக்கும்
பறவையை போலே
நாள் முழுதும் வெயிலில்
உழைத்தாலும் தனக்கு
ஊற்றும் கஞ்சியை மிச்சம்
பிடித்து பிள்ளைக்கு தரும்
தாய் குடிகாரகணவனால்
காணாமல் தான் போய்விட்டாள்..

ஓய்வுநாளை அனுபவிக்க
ஓரமாய் நின்று ரசிக்க,
இன்றாவது தன்பிழைப்புக்கு
நிறைய வழிகிட்டாதா என
எதிர்பார்த்து சென்றவன்
இருக்க இடமில்லாமல்
இக்கரையாவது எனக்கு
இருப்பிடமாய் இருக்குமென
உறங்கிகிடந்த யாருமில்லா
சகோதர சகோதரிகாள்
என எல்லோரையும்
எழில் பொங்கும் அலையாய்
இருந்த கடலில் சின்னதாய்
ஒரு சினுங்கல் சுனாமியாய்
இத்தனை பேரும்
காணாமல் தான் போய்விட்டார்கள்..

பலமில்லா ஆட்டுகொட்டகையில்
நரிகள் புகுந்து அவற்றையுமே
அடித்துதின்னுவது போல்
எம் ஈழத்தமிழரின் இடம்தனை
பற்றிக்கொண்டு அவரையும்
துன்புறுத்துவோரை தட்டிகேட்டவரெல்லாம்
காணாமல் தான் போய்விட்டார்கள்.

இன்றைய நாள்..

சலசலக்கும் சத்தத்தோடு
அடுத்தடுத்த குழந்தையாய்
கடலுக்காய் பிறந்திடும்
அலையாய் பிறக்குதே
ஒவ்வொரு நாளும்
இன்றைய நாளாய்...

குருவி தலையின் மீது
பனங்காயாய் முப்பதுகிலோ
எடைகொண்ட குப்பனும்கூட
பிழைப்புக்காய் தலைமீது கூடை
சுமந்து பயணமாகிறான்
இன்றைய நாளாவது
அதிகமாய் விற்குமென..

தண்ணீரில்லா குளத்தின்
குறுகிசாகும் மீனினை போல்
தினம் தினம் வெயிலிலே
வெந்து கொதிக்கும் தாருடன்
நொந்து பாதைகள் உருவாக்குவோனும்
மேஸ்திரியின் அதட்டலுக்கு இடையே
இன்றைய நாளாவது மழைவந்து
வெப்பம் தணிக்காதா என்று
ஏக்கத்தினூடே பணியை தொடர்கிறான்.

இத்தனை ஏக்கம் கொண்ட
மனிதனை மோதிவிட்டு சிறிதும்
பொருட்படுத்தாது வேகமாய்
பறந்து கொண்டிருக்கும் கார்
ஓட்டும் பணக்காரனுக்கு
இன்றைய நாளாவது இரக்கம்
பிறக்காதா என எண்ணிவிட்டு
அலுவலக வேலைக்காய் நானும்
புறப்படுகிறேன் மனிதமில்லாதவனாய்..

Wednesday, January 9, 2008

ஒற்றைச்சொல்..

எங்கெங்கோ இஸ்டத்துக்கும்
சுதந்திரமாய் பறந்து செல்ல
சிறகுகள் இருந்தும்
சின்ன கூண்டிலே அடைக்கப்பட்ட
கொஞ்சும் கிளி போல்

மனிதனாய் பிறந்தும்
மனம் மகிழ பேசதுடித்தும்
எத்தனை எத்தனை ஏக்கங்கள்
எனக்கான ஒற்றைசொல்லாய்
ஊமை என்று நினைக்கும்
போது ஒற்றைச்சொல்
அம்மா என்று அழைக்க
எத்தனை ஆசை எனக்குள்

கவிதை எழுத முயல்கிறேன்

எட்டாத உயரத்தில் இருக்கும்
கொம்புதேனுக்காய் முடவனின்
ஆசையை போல் எனக்குள்
ஓர் ஆசை கவிதையொன்றை
என் கைப்பட எழுதிவிட..

அன்றிலிருந்து ஆரம்பமானது
கஜினியின் பதினேழு முறை
படையெடுப்பை போல்
காகிதத்துக்கும் என் பேனாவுக்கும்
ஆன யுத்தம்..

ஈன்று சிலநேரமான கன்றின்
எழுந்து நிற்க ஏற்படும்
தோல்விகள் போல்
காகித கசக்கல்கள் மட்டுமே
என் கவிதை போருக்குள்..

அயராது உழைத்த உழவனின்
நல்ல மகசூல் போல்
எண்ணங்களில் தேடலில்
எனக்கும் கிடைத்தது
பதினைந்து பக்க கவிதை...

எந்த பக்கம் தாவுவதெனெ
விழிக்கும் மதில்மேல் பூனையாய்
நானும் விழிக்கிறேன்
இது கவிதையா? ஓவியமா ?
என..

என்ன சொல்ல உன் பெயர்
மட்டுமே எழுதிய காகிதம்கூட
எல்லாமுமாய் தோன்றுகிறதே
எனக்குள்...

தேடிக்கொண்டே இருக்கிறேன்........

தேடிக்கொண்டே இருக்கிறேன்....

பரந்து விரிந்த பாலையிலே
சிறகுகள் விரித்தே பறவையது
இரைதேட செல்வதுபோல்
தேடிகொண்டே இருக்கிறேன்..

பசியில் அழுதுகொண்டே
பாலுக்காய் ஏங்கி தவிக்கும்
பச்சிளம் குழந்தையை
குப்பைதொட்டியில் வீசிஎறிந்த
அன்னை தந்தையை தான்
தேடிக்கொண்டே இருக்கிறேன்..

இனவெறி பிடித்து மனிதநேயம்
மறந்து மனிதனுக்கு மனிதன்
இழைக்கும் கொடுமைகளை
கண்டு இரக்கம் என்பதை
தேடிகொண்டு தானிருக்கிறேன்..

வேகமாய் ஓடியே முதலாய்
வரும் குதிரைக்காரனுக்கு
முதல்பரிசு என்பதாய்
உழைத்தே உருக்குலையும்
உழவனுக்கல்லாது எஜமானனுக்காய்
சென்றடையும் ஊதியத்தை தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்..

பலசரக்கு கடைகளில்
கலப்படமாய் பொருள்விற்று
யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன
என்று இருக்கும் கடைக்காரனை போல்

ஏற்றதாழ்வுகளாய் உலகம்
படைத்து மனிதமில்லா மனிதன்
படைத்து வேடிக்கை பார்க்கும்
விந்தை மனிதன் கடவுளைதான்
தேடிக்கொண்டே இருக்கிறேன்

Thursday, January 3, 2008

அசந்தர்ப்பம்..2

அச்சந்தர்ப்பம் அசந்தர்ப்பமாய் போனாலும்
அடுத்த சந்தர்ப்பத்துக்காய் தயாராக
ஆரம்பித்தே அடியெடுத்தேன்..
உன் கல்லூரி வாசலுக்கே தவம் புரிய
தொடங்கினேன் தொடர்ந்தே வந்தேன்.
தொடர்தலின் முடிவாய் தொட்டு விட்டேன்
கீழே விழுந்த உன் கைகுட்டையை.
எடுத்து கொடுத்த முதல் ஆரம்பமானது
என்னுடனான உன் முதல் வார்த்தை.
சிறிதாய் ஆரம்பித்த வாதாங்கள்
சிரிக்கும் அளவிற்கும் தொடர்ந்தது
நாள்களும் கடந்தது. வந்த வேலை
மறந்தே நானும் வழிய தொடங்கியது
தாமதாய் புரிந்தே தயாரானேன்..
காகிதமும் பேனாவும் போர் புரிய
தொடங்கின அன்று முதல்..
காகிதங்களின் கசக்களுக்குள்
கடைசியாய் கவிதை வடித்தேன்
கண்ணழகி உன் பேரையே எழுதி
வேறெதுவும் அழகான கவிதையாய்
தோன்றவில்லை எனக்கு..
எழுதிமுடித்த கவிதையோடே
எழுந்துவந்தேன் எழிலரசி உனைகாண
எடுத்துகொடுக்குமுன்னே நீ
எடுத்தாய் எனக்கு திருமணம் என்று
உன் திருமண அழைப்பிதழை..
கண்களில் நீர் வர கலங்கி
குனிந்தேன்.சந்தர்ப்பமே இல்லா
அசந்தர்ப்ப வாழ்க்கை நினைத்து..

அசந்தர்ப்பம்..

எண்ணெய் தலை சீவாத முடி
சுருங்கிய சட்டை சோகமாய் முகம்
எப்போதும் தனிமை ஏதோ
பறிகொடுத்தது போல் நான்
யோசனைகளின் கூடாரமாய்
பூங்காவில் அமர்ந்திருக்க
அழகுக்கு அர்த்தம் என்பது போல்
தங்கரதம் நீ நடந்துவர
தனிமைக்கு விடுமுறை அளித்து
உன் நினைவுகளுடனே
வீடு திரும்பி விரும்பி எடுத்த
புது சட்டை வித்தியாசமான
தலை சீவல் புத்துணர்ச்சியாய்
முகத்தோடே காலைகுளியல் முடித்தே
உன்னை தேடி வந்த நேரங்கள்..
சின்ன சின்னதாய் பூத்த முறுவலுக்குள்
நானும் தயாரானேன் காதல் சொல்ல
சில நாள் செல்ல நல்ல நாளொன்று
வந்திடவே நானும் வந்தேன்
வழக்கமாய் நீ வரும் கோவிலுக்கு.
தடுமாறிய நெஞ்சுக்குள் தைரியம்
வரவழைத்து தலைநிமிர்த்தி பார்த்தேன்
தங்கமகள் உன்னோடு எப்போதுமில்லா
தந்தையின்று வருகை தர
தலை தாழ்த்தி திட்டிகொண்டேன் நிழலை
சந்தர்ப்பம் கூட எனக்கு
அசந்தர்ப்பமாய் மாறியதை நினைத்தே

Wednesday, January 2, 2008

மின்மினிகள்

வண்ணங்களின் வளைவு நெளிவுகளில்
எண்ணங்களின் தெளிவை பிரதிபலிக்கும்
சாலையோர விளம்பர பலகை ஓவியன்..
உயரமான இடத்தில் போய் வரைந்தாலும்
உயர்வுகாண முடியா வாழ்க்கையில்
வாழ்த்துகள் சிலர் வாயால் கேட்க
சின்ன சின்ன சந்தோசம்..

உழைப்பையே பெரிதும் நம்பி
உழவையே தொழிலாய் கொண்டு
கலப்பையை கையில் ஏந்தி
காலத்துக்கும் வெயில் மழை பாரா
அனைவரின் பசிபோக்க அவனின்
பசி மறந்து உழைக்கும் விவசாயி
உழைப்பின் பலனாய் மகசூல்
காணும் போது தான் மனதோரம்
சின்ன சின்ன சந்தோசம்...

கெட்டி மேளம் கொட்டாத காலம்
கட்டிக்கொள்ள இதுவரை யாருமில்லை
வெட்டியாய் வாழ்ந்தே முடிப்பேனோ
என்று எண்ணியே நாளுமே
நரகமாய் தள்ளும் முதிர்கன்னி
திடீர் ஒருநாள் பெண்பார்க்க ஏற்பாடு
கனவுகளின் கருவுறுதல்
நினைவுகளில் சின்ன சின்ன சந்தோசம்...

எண்ணெய் தேய்க்கா தலை
அழுக்கு சீருடை அடிவாங்கியே
வேலை கற்கும் அழியாத கனவுகளோடு
வேலை முடித்து சோகமாய் திரும்பும்
மெக்கானிக் சிறுவன் அடைமழைக்காய்
ஒதுங்கிய பள்ளி நினைவுகள் அழகாய்
சின்ன சின்ன சந்தோசம்...

ஆம்
சின்ன சின்ன சந்தோசங்கள் எல்லாம்
இருட்டு தேசத்தின் மின்மினி பூச்சிகள்
இன்றளவும் முன்னேறா வாழ்க்கை
முகம் தெரியா மின்மினிபூச்சிகளாய்
எம் சகோதர சகோதரிகள்..