மாபெரும் அண்டமானது
வெறிச்சோடி கிடக்க காண்பதென்னவோ
எனக்கு பொறுக்கவில்லை..
உணர்வுகளை பிரதிபலிப்பதாய்
உயிர்களை படைத்துவிட
முடிவு செய்து ஆயத்தங்கள்
செய்து விட்டேன்..
முதலில் சிறிது சிறிதான
என எண்ணற்ற உயிர்கள்
படைக்கபட்டது என்னால்..
நானும் உயிர்களை படைப்பதில்
தேர்ந்தவனாய் இல்லாமையின்
விளைவுகள் படைத்தல் தொடர்ந்தது
வகை வகையாய்..
ஒவ்வொன்றிலும் ஏதோ
ஒரு குறையிருப்பதாய்
உணர்ந்து கடைசியாய்
மனிதனை படைக்கும்
யோசனையில் பலன்
நான் எதிர்பார்த்த வாறே தான்..
உணர்வுகளை வெளிபடுத்தி
ஆக்கங்களை மட்டுமே
தருவதற்காயும் என்வேலையை
இலகுவாக்கவுமே படைத்தேன்,..
ஆரம்பமென்னவோ
நன்றாக தான் இருந்தது..
ஆக்கங்களில் ஈடுபட்டவன்
அழிவு வேலையை செய்ய
ஆரம்பித்ததில் எனக்கும்
வருத்தம் தான்..
இனியாவது
செய்வன திருந்த செய்ய
வேண்டுமென்று உறுதியாக
இருக்கிறேன்..
மனிதா!
உன்னை விட உன்னதமாய்
உயிரொன்று மிகவிரைவில்....
Friday, August 22, 2008
ஒரு படைப்பின் குறிப்புகள்...
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Post a Comment