CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, March 26, 2008

அசந்தர்ப்பம்...

நான் அலுவலகத்துக்கு தினமும் பைக்கில் தான் பறந்து கொண்டிருந்தேன்.ஒரு நாள் கூட ப்ரியாவை பார்க்காமல் சென்றதில்லை.அவள் தினமும் காத்திருக்கும் ரயில் நிலையத்தில் அவள் ஏறும் முன் சென்று ஒரு ஹாய் சொல்லிவிட்டாவது செல்வேன்.இன்றும் ப்ரியாவுக்காய் அங்கே செல்ல திட்டமிட்டிருந்தேன்..
ப்ரியா என்னுடைய 3 வருட தோழி..ரொம்ப நல்லபெண்.பார்க்க அழகும் பேச்சில் அவளின் அறிவும் நமக்கே விளங்கும்..எதார்த்தமான உலகில் எல்லாவற்றையும் நல்லனவாய் பார்க்க எனக்கு கற்றுகொடுத்தவள் அவள்..எனக்கே தெரியாமல் எனக்குள் அவள் காதலியாய் விஸ்வரூபமெடுத்திருந்தாள்..
ஆனால் அவளிடம் என் காதலை சொல்ல பயமும் குழப்பமும் மாறி மாறி உந்தி தள்ள ஒரு காதலனாய் அவள் முன் நிற்க வலிமை இழந்து தான் இத்தனை நாள் கடத்திவிட்டேன்..வீட்டில் திருமணம் பற்றி தினம் தினம் தொல்லை..அதனால் ப்ரியாவிடம்இன்று காதலை தெரியபடுத்தி அவளிடம் சம்மதம் வாங்கும் நோக்கோடு தான் இன்றைய என் பயணம் ஆரம்பமானது..
"எப்படி ஆரம்பிக்கிறது.
ச்சே ஏன்டா நீ இப்படி இருக்க?,ப்ரியா வோடு மணிகணக்கா பேசிட்டு இருப்ப.இப்ப என்ன ஆச்சு?போய் சொல்லுடாப்ரியா உன்னை கல்யாணம் செய்துக்க ஆசைபடுறேன்னு கேளு
ம்ம் ஒரு வேளை சொன்ன‌துக்க‌ப்புற‌ம் அவ‌ என்னை வெறுத்துட்டா?
இல்ல‌டா ப்ரியா உன்னை வெறுக்க‌மாட்டா..நீ சொல்லி தான் பாரேன்
இல்ல‌ அவ‌கிட்ட‌ சொல்லி அவ‌ளை நான் பிரிஞ்சுட்டா நான் ...ம்ம் முடியாது..
ஏன்டா எப்ப‌வும் நெக‌ட்டிவாவே திங்க் ப‌ண்றே..பாசிட்டிவ் திங்கிங் ப‌ண்ணேன்டாநீ சொல்லு..அப்ப‌டி அவ‌ மாட்டேனு சொன்னாள்னா பேசி புரிய‌வெப்போம்.."
நானும் என் ம‌ன‌தும் பேசிக்கொண்டே சென்றோம்..
மனதின் குழப்பங்களோடு ரயில் நிலையத்தை அடைந்துவிட்டேன்..இன்னமும் ப்ரியாவை காணவில்லை..
ஹலோ ப்ரியா என்ன இன்னைக்கு ஆபிஸ் போகலையா"செல்போனில் அழைத்தேன்
ம்ம் 5 மினிட் அங்க இருப்பேன்"
ஓகே ப்பா" ஏதோ காதலையே சொல்லிவிட்ட திருப்தியோடு போனை அணைத்தேன்.
ஹே ஹேய் என்ன பண்றான் அவன் ..ஹேய் தம்பி நில்லுடா " திடீர்னு ஸ்டேசன்ல கூச்சல்..
பதட்டத்தோடு திரும்பி பார்த்தேன்..ஒருவன் ரயிலின் முன் ஓடி கோண்டிருந்தான்..நான் வேக வேகமாய் எழுந்து அவன் பின் ஓடினேன்..
டேய் தம்பி நில்லுடா ...ஏன்டா இப்படி ..ஹலோ ப்ளீஸ் நில்லுப்பா..." கத்திகொண்டே ஓடினேன்
ரயில் அருகில் வந்து விட்டது.இதற்கு மேல் என்னால் எதுவும் முடியவில்லை கண்ணை மூடிகொண்டு ஹய்யோனு கத்திவிட்டேன்
என்னை விடுங்க ப்ளிஸ்" அவனின் குரல் கேட்டது
அதன் பின் ரயிலின் சத்தம் மட்டுமே காதில் விழுந்தது..
அந்த ரயிலின் சத்தத்தின் காதையும் கண்ணையும் மூடிக்கொண்ட நான் மெதுவாய் ஒரு பயத்தோடே மெதுவாய் கண்ணை திறந்தேன்..முழுதாய் திறப்பதற்குள் நான் இன்னொரு பிறப்பும் எடுத்தேன்..
ஹப்பா அந்த பையன் முழுதாய் ஓரமாய் விழுந்து கிடக்க அவன் பக்கத்தில் ப்ரியாவும் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தாள்..
ஹைய்யோ ப்ரியா உனக்கொன்னும் ஆகலையே"
இல்ல தணிகை டோன்ட் வொர்ரி..ஐ ஆம் ஆல் ரைட்"
ம்ம்ம்..தேங்க்ஸ் ப்ரியா இவனை காப்பாத்தினதுக்கு"
ம்ம்ம்ம்"
பேசிமுடிப்பதற்குள் சாவதற்கே பிறந்தவன் போல எழுந்து ஓட முயற்சித்தவனை பிடித்து அறைந்தே விட்டேன்..எல்லாரும் எங்களையே பார்க்க அவனோ கண்களில் நீர் ததும்ப சாய்ந்தான்..
"ஏன் சார் ஏன் எனக்கு மட்டும் இப்படி .நான் நினைக்கரது எதுவுமே நடக்க மாட்டேங்குது"
"ஹலோ ஏன் தம்பி இங்க வா ஒன்னும் பேசவேண்டாம் ..உட்கார்" அப்படின்னு சொல்லிட்டு
"ப்ரியா நான் போய் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வரேன் வெயிட் பண்னு" ஓடி போய் நொடியில் திரும்பினேன்
அவனுக்கு தண்ணீர் கொடுத்து முகத்தை கழுவிவிட்டு
"உன் பேர் என்ன‌ப்பா ? ஏன் இப்ப‌டி?""என் பேர் சிவா ,நான் பிர‌பா ந்னு ஒரு பொண்னை ல‌வ் ப‌ண்ணேன் சார்""ச‌ரி அதுக்கு ஏன் அவ‌ ஏமாத்திட்டாளா என்ன‌ ?""இல்ல‌ சார் நானும் அவ‌ளும் ரொம்ப‌ ப்ர‌ன்ட்ஸா இருந்தோம் சார்" அவ‌ன் ஆர‌ம்பிக்கும் போதே ப்ரியா பாப்கார்ன் வாங்கி கையில் வைத்துகொண்டு ஸ்டேச‌ன் கூரையை நோக்கி அச‌ட்டு சிரிப்பு சிரிப்பு சிரித்துகொண்டு இருந்தாள்.
"ச‌ரி என்ன‌ ஆச்சு?"
"என‌க்குள்ள‌ கொஞ்ச‌ கொஞ்ச‌மா அவ‌ காத‌லியா நுழைஞ்சுட்டா..அவ‌கிட்ட‌ சொல்ல‌ணும்னு எத்த‌னையோ முறை நினைச்சிருக்கேன்ஆனா அவ‌ காலேஜ் முடிச்ச‌தும் சொல்லிட‌லாம்னு நான் இருந்தேன்..நினைச்ச‌ மாதிரியே க‌ல்லூரி க‌டைசி நாள் அவ‌கிட்ட‌ காத‌ல் சொல்ல‌ போன‌ப்ப‌ அவ‌ என்கிட்ட‌ அவ‌ளோட‌ திரும‌ண‌ இன்விடேச‌ன் கொடுத்துட்டா,என்னால‌ எதுவும் சொல்ல‌ முடியாம‌ வ‌ந்திட்டேன்..ஆனா அவ‌ என் ம‌ன‌சு பூராவும் நிறைஞ்சிருக்கா..என்னால‌ ம‌ற‌க்க‌ முடிய‌லை..அவ‌ளை வேரொருத்த‌ரோட‌ க்கூட‌ நினைச்சு பார்க்க‌ ம‌ன‌சு ஒத்துக்க‌லை...என்னால் அதை பாத்துக்கிட்டு இருக்க‌ முடியாது...நாளைக்கு அவ‌ளுக்கு க‌ல்யாண‌ம் ...என்னால‌ வாழ‌வே முடியாது...அவ‌ கிட்ட‌ காதலை சொல்ல‌போன‌ நேர‌ம் தான் அச‌ந்த‌ர்ப்ப‌ம் மின்னு பார்த்தா சாவ‌க்கூட‌ முடிய‌லை..என‌க்கு எல்லாமே அச‌ந்த‌ர்ப்ப‌மா இருக்கு" தோளில் சாய்ந்தே அழ‌த்தொட‌ங்கினான்..
"இங்க‌ பாரு சிவா ...இதுக்கெல்லாம் த‌ற்கொலை ப‌ண்ணிகிட்டா யாருமே வாழ‌முடியாது..என்ன‌வோ பெருசா அச‌ந்த‌ர்ப்ப‌ம் நு சொல்றியே இதுவும் யாருக்காச்சும் கிடைக்கிற‌ ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌மா தான் இருக்கும்...அச‌ந்த‌ர்ப்ப‌மும் ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌மே" ஞானி மாதிரி பேசி முடித்தேன்.."இல்ல சார் என்னால இனிமே இருக்க முடியாது சார்" அவன் எத்தனிக்க முயற்சித்தான்"ஹா ஹா ஹா ஹா "க‌ண்க‌ளில் நீர் வ‌ரும‌ள‌விற்கு பெரிதாய் சிரித்தாள் ப்ரியா..ஸ்டேச‌னில் எல்லாரும் எங்க‌ளையே பார்க்க‌
"பிரியா ..ப்ரியா என்ன‌ ஆச்சு ந்ன்னு க‌த்தி அவ‌ளை நிலைக்கு கொண்டு வ‌ர‌
"சிவா என்னை ப‌த்தி தெரியுமா ?உங்க‌ளை மாதிரி தான் நான் கூட‌ இதே ர‌யில் நிலைய‌த்தில் த‌ற்கொலைக்காக‌ வாழ‌ வ‌ழிதெரியாம‌ல் வ‌ந்த‌வ‌ள் தான்..இதோ இந்த‌ த‌ணிகை தான் இன்னைக்கு நான் உயிரோட‌ இருக்க‌ர‌துக்கு கார‌ண‌மே வாழ‌முடியும்னு ந‌ம்பிக்கை கொடுத்த‌து எல்லாமே. வாழ‌முடியும் சிவா வாழ்ந்து தான் பாரேன்"அதிகார‌ தோனியோடு அழ‌காய் அவ‌ள் பேசிய‌து ர‌சிக்க‌ வைத்த‌து..
"இல்ல‌ங்க‌ நான் அவ‌ளை ரொம்ப‌வே ல‌வ்பண்ணேன்..ம‌ன‌சார‌ ம‌னைவியா வாழ்ந்திருக்கேன்..அவ‌ இல்லாம‌ என்னால‌ இருக்க‌ முடியாது"விடாப்பிடியாய் அவ‌ன் எண்ண‌த்திலே இருந்தான்..
"சிவா நான் ஒன்னு கேக்கிரேன் உன்னால் முடியுமா?" ப்ரியா ஏதோ புது உக்தி க‌ண்ட‌வ‌ளாய் பேச‌
"ம்ம்ம் சொல்லுங்க‌" அவ‌ன் ஏதோ ஒப்புக்கு ப‌தில் சொன்னான்.
"நீ அந்த‌ பொண்ணுமேல‌ வெச்ச‌ அதே காத‌லை முழுமையான‌ அன்பை என் மேல‌ வெக்க‌ முடியுமா? நான் உன்னை க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிறேன்..நீ என்னை க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிறியா? சொல்லு சிவா?"கேள்விக‌ளோடு ப்ரியா
உல‌க‌மே இருண்டு விட்டதாய் என‌க்குள் அந்த‌ க‌ண‌ங்க‌ளில் நான் முழுவ‌துமாய் உடைத்தெறிய‌ ப‌ட்டேன்..நிலைகுலைந்து எழுந்த‌வ‌ன் அப்ப‌டியே அந்த‌ சேரில் சாய்ந்தேன்...என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்று புரிய‌வில்லை என‌க்கு..க‌ண்க‌ளில் நீர் த‌தும்ப‌ வெளிக்காட்ட‌ முடியாம‌ல் குனிந்து கொள்கிறேன்.
"அவ‌னோ எதுவுமே பேச‌முடியாம‌ல் திகைத்து போய் நின்றான்
"சிவா என‌க்குன்னு த‌ணிகை த‌விர‌ யாருமில்ல‌..எல்லாம் அவ‌ர் தான்..அவ‌ருக்கும் என்னோட‌ இந்த‌ முடிவுல‌ ச‌ம்ம‌த‌மா தான் இருக்கும்..உன்னை மாதிரி ஒரு உண்மையான‌ காத‌ல் வெக்க‌ற‌வ‌ன் க‌ண‌வ‌னா கிடைச்சா நான் ச‌ந்தோச‌மா தான் இருப்பேன்..இது உன்னோட‌ உயிர‌ காப்பாத்த நான் எடுத்த‌ முடிவில்ல‌...ந‌ல்லா யோசிச்சு என்னோட‌ வாழ்க்கைக்காக‌ எடுத்த‌ முடிவு தான்"
"த‌ணிகை என்ன‌ அமைதியா சொல்லுங்க‌ ?உங்க‌ளுக்கு ச‌ம்ம‌த‌ம் தானே?"
ப‌தில் சொல்ல‌ முடியாம‌ல் த‌லையை ம‌ட்டும் ஆட்டிவிட்டு குனிகிறேன்..
த‌ணிகை என்ன‌ ஆச்சு உங்க‌ளுக்கு சிவா கிட்ட‌ பேசி ச‌ம்ம‌த‌ம்னு சொல்ல‌ சொல்லுங்க‌"
மெதுவாய் க‌ண்க‌ளில் வ‌ந்த‌ க‌ண்ணீரை துடைத்துவிட்டு " சிவா சொன்னேன் இல்ல‌ அச‌ந்த‌ர்ப்ப‌மும் ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம்னு .ப்ரியா ரொம்ப‌ ந‌ல்ல‌ பொண்ணு ..உங்க‌ வீட்டு அட்ரெஸ் கொடு ..நானே இந்த‌ க‌ல்யாண‌த்தை பேசி ந‌ல்ல‌ப‌டியா முடிச்சு வெக்குறேன்.உன்னோட‌ ச‌ம்ம‌த‌ம் ம‌ட்டும் சொல்லு" என்றேன்
"சிவா ஏதோ யோசித்து குழ‌ம்பிய‌வ‌னாய் த‌லையை ம‌ட்டுமே ஆட்டினான்..ச‌ரி அட்ரெஸ் சொல்லு சிவா ந்னு கேட்க‌" என‌க்கு தெரியும் த‌ணிகை..என் பிளாட்டுக்கு எதிர்த்தாப்ல‌ தான் சிவா வீடு"ஆர்வ‌மாய் ப‌தில‌ளிக்கிறால் ப்ரியா..
அவ‌ளின் ஆசைக‌ளை புரிந்த‌வ‌னாய் என்னுடைய‌ அச‌ந்த‌ர்ப்ப‌ம் நினைத்து வ‌ருந்திகொண்டே "நான் நாளைக்கு வீட்டுக்கு வ‌ந்து பேசுரேன் சிவா, பை ப்ரியா டோன்ட் வொர்ரி நான் ந‌ல்ல‌ப‌டியா முடிச்சுவ‌க்கிறேன்"ன்னு சொல்லிட்டு கிள‌ம்பினேன்..
எங்கிருந்தோ அச‌ந்த‌ர்ப்ப‌மும் ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் தான் என்ற‌ குர‌ல் கேட்ட‌ மாதிரி தோன்றிய‌து
........................................................................முற்றும்

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: