CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, March 13, 2008

கனவே கலையாதே

" அம்மா நான் பள்ளிக்கு போறேன்" சிவா சொல்லிவிட்டு வேகவேகமாய் அவனுடைய பையை தூக்கி கொண்டு
தனக்காய் அம்மா செய்து வைத்த மதிய உணவோடு கிளம்பினான்.

இதோ அவனுக்கான ஒரு முன்னோட்டம்:

சிவா ஒரு திறமைசாலி.13 வயதிலே பெரிய ஞானிபோல பேசுவான்.எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் அவன் கேக்கும் கேள்விகளுக்கு ஆசிரியர்களே மிரண்டு போய் நிற்பார்கள்.படிப்பில் படு சுட்டி..விளையாட்டிலும் அவன் தான் முதல்.

எப்போதும் அழகாய் தேய்த்த வெள்ளை சட்டை.அழகான முடிதிருத்தம் என அவன் முகமே அவனுடைய திறமையை வெளிச்சம் போட்டு காட்டும்.

காலையில் எழுந்து தன் அம்மா தரும் பாலை குடித்துவிட்டு சிறிது நேரம் படித்துவிட்டு அவனே எழுந்து கிளம்பி செல்வான் பள்ளிக்கு..பெற்றவர்களுக்கும் பெருமையாய் இருக்கும்.அதே போல் அவன் பள்ளியிலும் அவனை தெரியாத ஆசிரியர்களே கிடையாது எனலாம்..

இலக்கிய மன்ற போட்டிகளில் கூட அவனே முதல் பரிசை தட்டி செல்வான்.கடந்த வருடம் கூட நடந்த மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் முதல் பரிசை தட்டி சென்று பத்திரிக்கைகளில் அந்த மாவட்ட
செய்திகளில் ஜொலித்தான்..

இந்த வருடம் ஆண்டுவிழா விமரிசையாக கொண்டாட முடிவு செய்திருந்தார்கள். பள்ளியில்.


அது தான் இன்று சிவாவின் உற்சாகத்திற்கு காரணம்.ஆண்டுவிழாவை முன்னிட்டு நிறைய போட்டிகள்.பாட்டு,பேச்சு,கட்டுரை,விளையாட்டு போட்டிகள் என நிறைய ..சிவா எல்லாவற்றிற்கும் பேர் கொடுத்திருந்தான்..

பள்ளி சென்றவுடன் ஆசிரியர்கள் சிவாவை முதலில் அழைத்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.சக மாணவர்கள் சிவாவை பார்த்து பொறாமை படத்தான் செய்திருந்தார்கள்..சிவா வே வழக்கம் போல
எல்லாவற்றிலும் முதலாவதாய் வந்தான்..


ஆசிரியர்கள் எல்லோரும் இது தான் முன்னமே தெரிந்த முடிவாயிற்றே.இரண்டாம் மூன்றாம் இடத்தை தான் நாம் தெரிவு செய்யவேண்டும்..என்று சொல்லி மகிழும் போது தன் தாய் தந்தையை மனதில் நினைத்து கர்வத்தோடு ஒரு துளி கண்ணீர் விட்டான்..

போட்டிகள் முடிவடைந்து ஆண்டுவிழா நாளும் நெருங்கியது. மாணவர்கள் அனைவரும் பெற்றோருடன்
வருமாறு அறிவுறுத்தபட்டிருந்தார்கள் முன்னமே..

இன்று சிவாவின் மனதில் ஏகத்துக்கும் மகிழ்ச்சி..காலையில் எழுந்து குளித்துமுடித்து அம்மாவையும் அப்பாவையும் அவசரபடுத்தி கொண்டிருந்தான்.

"சீக்கிரம் கிளம்புங்க,பாரு எல்லாரும் போறாங்க" என்று ரோட்டில் நடந்து போகும் சகமாணவர்களை காண்பித்தான்..

ஆண்டுவிழாவின் தொடக்கம் இனிதே..ஆரம்பமே சிவாவின் சங்கே முழங்கு நடனத்தோடு ஆரம்பித்தது.

அனைவரின் பாராட்டுக்களை பார்க்கும் போது அவனுடைய பெற்றோரின் கண்களில் இருந்து கட்டுபடுத்தாத
கண்ணீர் வள்ளுவனின் வாக்கை நிருபித்து கொண்டிருந்தது..வழக்கமான எல்லா நிகழ்ச்சிகளும் முடிவடைந்து
பரிசு தரும் நிகழ்ச்சி..ஆரம்பம்..

முதலில் இலக்கிய மன்ற போட்டிகளின் பரிசுகள் சிவா வே அழைக்கபட்டான்.சிவா தன்னுடைய பெற்றோரையும் அழைத்துகொண்டு மேடை அருகே சென்றது தான்..கை தட்டல்கள் விண்னை பிளந்து கொண்டிருக்க சிவாவும் அவன் பெற்றோரும் மேடையிலே இருக்குமாரு கேட்டுகொள்கிறேன்.சிவா வின் பரிசுகள் அத்தனை என்று கம்பீரமாய் தலைமை ஆசிரியரின் குரல் ஒலிக்க..இன்னுமே கைதட்டல் நிற்க வில்லை..

கடைசியாய் சிவா உயரம் தாண்டுதலுக்கான பரிசை வாங்க போகிறான்"

சிவா எந்திரிடா..நம்ம ராஜி அண்ணன் மெக்கானிக் கடையில் வேலைக்கு சொல்லியிருக்கேன்..போய்ட்டு
இந்த மருந்தை வாங்கிட்டு வாடா" என்று பேசமுடியாமல் மெல்லிய குரலில் ஒரு சீட்டை கையில் கொடுத்து விட்டு நகர்கிறாள்..

சிவாவுக்கு இப்போது தான் கண்டது கனவென புரிந்து நிலைக்குள் வருகிறான்.சின்ன வயதில் நன்றாக படித்தவன் போன வருடத்திலிருந்து அவன் அப்பாவின் திடீர் குடிப்பழக்கத்துக்கும் சபலத்திலும் சிக்கி
சின்னா பின்னமான நினைவுகளோடு கனவிலாவது என்னுடைய இந்த படிப்பு தொடரட்டும்..கனவே கலையாதே என்று வேண்டுகோள் விடுத்து அழுக்கு சட்டையை மாட்டிக்கொண்டு பயணமாகிறான்.

இது ஒரு கற்பனை கதை தான்.ஆனால் இது போல் எத்தனை பேர் திறமைகள் இருந்தும் தந்தையின்
தேவையற்ற சகவாசத்தால் சீரழிந்ததை பார்த்திருக்கிறேன்..ஆனால் என்ன என் வீட்டருகில் இருக்கும்
அந்த சிவா என்பவன் வேலைக்கு சென்று அப்பனை போலவே குடித்துவிட்டு வீடு வந்து விழுவான்..
என்னுடன் ஏழாம் வகுப்பு வரை நன்றாய் படித்தவன் தன் தந்தையின் பைத்தியக்காரதனத்தால் வேலைக்கு சென்று தீயவர்களின் சகவாசத்தால் அவனும் இப்படி ஆனதன் பாதிப்பு தான் இந்த கதை..

.

2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

sekar said...

fantastic

தணிகாசலம் said...

நன்றி