அரசு உத்தியோகத்தவனின் வருகையாய்
விடியலெடுக்கிறது இந்த ஞாயிறும்
மெதுவான கசக்கலுக்குபின் தெளிவாகிறது
ஜன்னலூடன வெளிச்சமும் ஓடாத
என் கட்டிலறை கடிகாரமும்...
நேரவிசாரிப்பின் முனகலில் அன்னையின்
அர்ச்சனைகள் நினைவுபடுத்துகிறது
புதுவருட எண்ணைகுளியலையும்
அப்போதைய பத்து மணியையும்..
கட்டிலில் சாய்ந்தபடியே ஜன்னலூடே
தலைதூக்கும் எண்ணங்களை வருடிசெல்கிறது
நிழலின் தன்மையை ஏந்திவந்த தென்றலும்
மாட்டுதொழுவத்தின் புதுவரவும்
மடிமுட்டி பாலருந்தும் கன்றதனை
புதியவனா?புதியவளா ?புதிரோடு
ரசிக்கும் நினைவுலகை கலைக்கிறது
அண்டைவீட்டு மழலைப்பசியின் அழுகை
ஏனென்ற கேள்வியோடே வெளியேறும்
எரிச்சலூடான வார்த்தைகளுக்கிடையில் நுழைகிறது
அண்டைவீட்டாரின் அர்த்தமற்ற சண்டையும்
தங்கையின் குழந்தைக்கான தாலாட்டும்...
Wednesday, April 16, 2008
ஞாயிறொன்றில்....
Subscribe to:
Post Comments (Atom)
2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
எப்டிங்க இது?.. இயல்பா,ஒரு இளைஞனின் அன்றாட வாழ்க்கைய வர்ணிச்சிருக்கிங்க... :)
பார்த்தவற்றை இயல்பா கவிதைக்குள் கொடுக்குற அழகு நல்லாயிருக்கு.தொடருங்க ..
வாழ்த்துக்களுடன்.
நன்றிங்க தலைவா...
Post a Comment