அமைதியாகதான் விடிகிறது
ஒவ்வொரு காலைபொழுதும்
அலுவல்களின் சுமூகமான ஆரம்பங்கள் கூட
அதிகபட்சமான கோபங்களால்
அலையடித்து சின்னாபின்னமாகிறது
அறிவுரைகள் குவியத்தொடங்கி
அதிகமாகிப்போகிறது இயலாமையின்
கோபத்தினூடே உளைச்சல்களும்
அதனூடான சிகரெட் எண்ணிக்கையும்.
தோழனின் தோள்தட்டல்களூடான
ஆசுவாசத்தின் கழிவிறக்கம்
தனிமையை நாட விழைகிறது
விரலுக்கிடையில் அக்னிகக்கும்
சிகரெட்டுடன் விசாலமான பூங்காவை
தாண்டுகையில் விரிந்து படர்ந்திருந்த
விலாமரமானது எதையோ உணர்த்தியபடி
உதிர்க்கிறது அதன் பழுத்த இலைகளை
தென்றலது முகம் வருடியதை சுகித்தப்படி
தாண்டிசெல்ல கோடை வெம்மையின்
புழுதிக்காற்று முகத்தில் அறைந்து
எதையோ உணர்த்த யத்தனிக்கிறது
புரியாமல் ஆழ்கடலில் முத்துக்கள் தேடுபவனாய்
யோசிக்கையில் விரல் சுட்டு புரியவைத்து
சாம்பலாகிறது சிகரெட் துண்டு..
மூன்றையும் ஒன்றாய் திணித்து
எண்ணுகையில் தெளிவாகி திரும்புகிறேன்
வாழ்க்கை வாழ்வதற்கென்று...
Thursday, April 17, 2008
புரிய முற்படுகையில்...
Subscribe to:
Post Comments (Atom)
3 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
நன்றி தலைவா..
//அறிவுரைகள் குவியத்தொடங்கி
அதிகமாகிப்போகிறது இயலாமையின்
கோபத்தினூடே உளைச்சல்களும்
அதனூடான சிகரெட் எண்ணிக்கையும்.//
அடடா..
//தோழனின் தோள்தட்டல்களூடான
ஆசுவாசத்தின் கழிவிறக்கம்
தனிமையை நாட விழைகிறது//
அருமையா இருக்கு.. கவிதை:)
இப்போதான் கவனிச்சேன்:)
நன்றி தலைவா..
Post a Comment