மகிழ்ச்சியின் அத்தனையெல்லைகளையும்
கடந்து போயிது தன்னெல்லையென
மனங்கள் யாவற்றையும் வியப்பில்
ஆழ்த்தி விடுவதென்று வேர்களை
ஆழமாய் பரப்பிக்கொண்டு
தூரல்களிலிருந்து கனத்து போன
மழையனைத்திலும் நனைந்தவாறே
மெல்லமாய் பூக்கத்துவங்கியிருந்த
பூவொன்றின் வாசமானது
பூமியெங்கும் வீசத்தொடங்கியத்தருணத்தில்
நீ அந்த பூவினை கசக்கிவிட்டெறிந்திருக்கிறாய்!
உனக்கும் அவனுக்கும் மிகப்பிடித்தமான
அந்த பூவின் நிலைகண்டு
அவனுக்கு மட்டுமான வலியில்
ஜனனித்த உப்புநீரானது அவன்
மரணத்தின் மீது தெளிக்கப்போகும்
பன்னீர்த்துளிகளின் மாதிரிகளாய்
உணர்ந்தழுது உலர்ந்து போகலாம்
உன்னால் கொலைசெய்யப்பட்ட பூ..........
Tuesday, September 22, 2009
அழுதுலர்ந்த மலரொன்றின் மரணம் குறித்து....
எழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 4:38 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post
Subscribe to:
Posts (Atom)