என்னான்னே தெரியலீங்க புது வருசம் பொறந்தாலும் பொறந்துச்சு..எப்பவுமே கவிதைன்னு எதாச்சும் எழுதிட்டு இருப்பேன்..அதுவும் வரமாட்டேங்குது..அடக்கருமமே இந்த ஓம் பயபுள்ள பசின்னு ஒரு ஆழமான சிறுகதை எழுதி கலங்கடிச்சுட்டான்..ஒருவேளை நாமெல்லாம் என்னடா எழுதறோமுனு வெக்கப்பட்டு மூளை சூம்பிப்போச்சா இல்லாங்கட்டி புதுசா வந்திருக்க சேட்டைக்காரன் மாடரேசன்லயே வைங்கோ ஏடாகூடமா எதாச்சும் போடுவேன்னு மனசை வருடற மாதிரியோ இல்லாங்கட்டி பிசையறமாதிரியோ (மாவில்லயா மனசு) இல்லாங்கட்டி அடப்பாவிங்களா இந்தமேட்டரை இப்படியும் சிந்திக்கலாமோன்னு நினைச்சிட்டிருக்க மாதிரி எதேதோ பதிவு போடுறான்...(ஊர் பேர் தெரியாதவனுக்கு ன் தான் நான் தர மரியாதையா இருக்கு)
இந்த ஹாஜா மாம்ஸ் கதை எழுதறேன்னு ஆரம்பிச்சு மனுசனை கதற கதற சிரிக்கவச்சு சிதறடிக்கிறாரு..இம்புட்டு நாளா நீங்கலாம் எங்கயா போயிருந்தீய ..முதல்ல இருந்தே இப்படிலாம் எழுதி இருந்தா நானும் கதை கவிதைன்னு எதையும் கிறுக்கியிருக்க மாட்டேன்ல..
என் மூளை ஏன் இப்படி சூம்பி போன கத்திரிக்காயாட்டும் ஆச்சுன்னும் தெரியல..எதாவது எழுதனும் யோசிச்சாலும் ஏன் அழுகி போன மாம்பழமாட்டும் குழையுதுன்னு தெரியல..
ஒன்னும் ஒன்னும் ஒன்னுக்கொன்னும் பிட்டிங்காவவே மாட்டேங்குதுய்யா... எதாவது கோர்த்தெழுதி மனசுல சலனத்தை ஏற்படுத்திட்டா தான் அந்த எழுத்தாளன் வெற்றியடையறான்...ஒன்னுமே இல்லாத மேட்டரைக்கூட ஏதோ ஒரு டிஸ்கின்னு கடைசி வரி வச்சு சூப்பராக்கி புடுறாய்ங்க...
எனக்கு மட்டும் ஏன் இப்படி சூம்பிப்போச்சு.. இம்புட்டு நீளமா நான் ஏதோ எழுதறக்கு காரணம் இருக்குன்னு நினைக்கறீங்களா..நீங்க நினைச்சா இருக்கு..இல்லாட்டி இல்லங்க.. ஆனா நானும் ஒரு காரணமா தான் எழுதறேன்.. என்னடா காரணம்னு கேட்டீங்கன்னா சத்தியமா எனக்கு சொல்லதெரியாது...
ஏன்னா காரணமே இல்லாம எதையாச்சும் புதுவருசத்துக்கு முதல் பதிவா போடணுமிங்கறது தான் என் காரணம்.. சரி இம்புட்டு நீளமா எழுதி அதுல ஒரு மேட்டராச்சும் உருப்படியா இருக்கணுமேன்னு தான்
இந்த வருசம் முதல் கவிதைங்கற பேர்ல ஒன்னு..
உங்கள்
இதயப்பெரிகார்டிய சுவர்களை
அதிர்வடைய செய்யும்
நிகழ்வுகளில் தான்
நான் பயணிக்கிறேன்..
கோர்க்கும்
திறமை இல்லையென்பதாலே
நான்
அதை
கவிதையென
எழுதவில்லை...
அப்பாடா எப்படி எப்படியோ யோசிச்சு வராத கவுஜ ..இந்த பதிவை எழுதிக்கிட்டே வரும் போது தானா வருதே ..அது எப்படி???...
முடியலை இல்ல..என்னாலயும் முடியல.. சும்மா ஒரு மேட்டர் எடுத்துக்கலாம்..( என்னடா அதான் ஏதோ எழுதி தொலைச்சுட்டியே இன்னும் எதுக்கு நீட்டுறன்னு கேக்கலாம்..)
வருசத்தோட முதல் பதிவு,.. கொஞ்சம் மசலாமிக்ஸ் பண்ணலாம்னு தான்...
அது ஏன்னே தெரியலீங்க..பொண்ணுங்க கிட்ட பேசினாளே ஒரு கில்பான்ஸ் மூடு வந்துடுது.. பொண்ணுங்க கிட்டமட்டும் தான் சலிக்காம பேசமுடியுது.. சாட் பண்ணி ஒரு ஐந்து நாளிக்கு பேசினப்புறம் அடுத்த பொண்ணான்ட அலைபாயுது...
எப்போதிலிருந்து நான் பொண்ணுங்களை சைட் அடிக்க ஆரம்பிச்சேன்னு யோசிச்சு பாத்திருக்கேன்..எப்பவும் தோணினதில்ல.. இன்னைக்கு கங்கண கிரகணம் தனுஷ்கோடியில் தான் நல்லா தெரியும்னு செய்தியில் படிச்சதும் தான் ஞாபகம் வந்துச்சு..
பள்ளிக்கொடத்துல ஒன்பதாவது படிக்கும் போது எட்டாவது படிச்ச தனுஷ்கோடி பாத்து சிரிப்பா.. அடிக்கடி சிரிப்பா.. நல்லா சிவப்பும் இல்லாம கருப்பும் இல்லாம கலந்தடிச்ச ஒரு நிறம்.. உதட்டுசாயம் எல்லாம் ஒரு ஒப்பனைப்பொருளே இல்லடான்னு சொல்லுற அளவுக்கு அவ உதடு நிறம்... ரெட்டைச்சடை போட்டுக்கிட்டு ஒரு நல்லா மலர்ந்த ரோஜாப்பூவை வலதுபக்கம் வச்சுக்கிட்டு நீலக்கலரு தாவணியில் அவ வர அழகே தனி தாங்க..
அதனால தான் என்னவோ தணிக்கு பிடிச்சிருக்குமோ..அந்த புள்ள அப்படி போவும் போதும் வரும் போதும் சிரிச்சுக்கும்.. நானும் சும்மா வானத்தில் பறக்கிற மாதிரி ஒரு பீலிங்கோட ஸ்டைலா ஒரு ரொமான்டிக் லுக் விட்டுட்டு போவேன்...
மத்தபடி பேசினதே இல்ல அவக்கிட்ட.. ஒரு நாள் வீட்டான்ட கூட படிக்கிற ரெண்டுபேரு அடிச்சுக்கிட்டானுவ,..என்னடான்
அப்பால நான் என்ன பண்ண? அதுல ஒருத்தன் என் மாமா பையன் ..அவனுக்கு ஹெல்ப் பண்ணி அந்த பிகரை அந்த பையனோட கோர்த்து உட்டு நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள் பாடி முடிச்சு .....
படிப்பை முடிச்சு ரெண்டு வருசம் கழிச்சு பாத்தேன்... மொத்தம் ஐந்து வருசம் கழிச்சு அந்த பொன்ண பாக்கறேன்.. சும்மா சிலையாட்டம் இருந்தவ கலையிழந்து இடுப்புல ஒன்னு கையில ஒன்னு...
தலைவாராம சும்மா ஒரு கொண்டை போட்டுக்கிட்டு நடந்துபோனா ..அதிர்ச்சியில் உறைஞ்சுபோயிட்டேன்..
இப்ப என்னதாண்டா சொல்லவர நீயின்னு என்னை நாயை பாக்கறமாதிரி பாக்கலாம் நீங்க..
அதாங்க கடைசியே ஒரு தத்துவம்:
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.....
0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Post a Comment