1.
ஊர்சுற்றியது போதுமென
பூமியின் பார்வையிலிருந்து
புதைந்துகொண்டிருந்தது
சூரியன்..
வெள்ளொளி மறைய
மெல்ல மெல்ல கருக்கத்தொடங்கிய
அந்த அந்திமப்பயணத்தின்
குறுக்கில்
குருதிதோய்ந்த சதைப்பிண்டங்களாய்
சிதறிக்கிடந்தது
ஈருருளியொன்று...
யாருக்கோ
அல்லது
யார்யாருக்கோ
இருட்டத்தொடங்கியிருந்தது...
2.
உலகின்
அத்தனை சப்தங்களின்
செவிகளையும் அடைத்து
நிசப்தங்களாய் மாற்றிய
இரவொன்றில்
அடர்வனத்தில்
மெலிதாய் தொடங்கிய
தென்றலின் குளிர்ச்சியில்
சில பறவைகள் கீச்சிடுகின்றன!
நிலவைப்போர்த்தியிருந்த
மேகங்கள் சட்டென விலகியிருந்த
ரம்மியமான அந்த பொழுதில்
உனக்கென மட்டும்
தொடக்கமும் முடிவுமில்லாத
பூக்களை உதிர்க்கும் பாதையொன்றை
சமைத்துச்சிரிக்கிறது
என் கனவு...
Wednesday, December 23, 2009
ஒரே நாளின் இரண்டு இரவுகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
அப்பிடியே தூங்கிட்டீங்க போல
Blogger சிட்டுக்குருவி said...
அப்பிடியே தூங்கிட்டீங்க போல//
aamaappaa
Post a Comment