CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, June 21, 2011

அவன் - இவன் - சில நிகழ்வுகள் ஒரு கட்டுடைத்தல்


இந்த மூன்று நாட்களாக படம் பார்த்தவர்கள் அல்லது பார்த்துவிட்டு வந்த நண்பர்களிடம் கதை கேட்டவர்கள்
எழுதிய விமர்சனங்களை படித்துவிட்டு படம் இப்படித்தான் இருக்குமென்கிற முன் முடிவுகளோடு நாம்
சென்றாலும் படம் தொடங்கிய வுடன் வரும் பிண்ணனி இசையிலாரம்பித்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும்
வாழ்ந்துகெட்ட ஜமீனின் அலங்காரத்திலேயே நம்முடைய விமர்சன முன்முடிவுகளை கட்டுடைத்து நம்மை கட்டிப்போடுகிறார் இயக்குனர்.. அதிகபட்சம் நம்மை கட்டிப்போட்ட இருக்கையிலிருந்து எத்தனிக்க முயலுவோமானால் நம் பக்கத்து இருக்கை நண்பரோடு கை தட்டுவதற்காக இருக்கலாம். அல்லது சிரித்து சிரித்து சரிந்து விழலாம் ...........




வாழ்ந்துகெட்ட அல்லது கெட்டுவிட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் ஜமீனின் பிறந்தநாள் விழாவில்
ஆரம்பிக்கிறது படம் இல்லை இல்லை .. வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் எனவும் சொல்லலாம்...இது பொம்பளைங்க இடம் ஆண்கள் வரக்கூடாது என்ற மகளிர் மசோதாவின் அறிக்கையில் பெண்ணாக களமிறங்குகிறார் விஷால்.. வனப்பு மிகுந்த உடல்.. மடிப்பு விழுந்த இடுப்பு.. குலுக்கி ஆடும் ஆட்டம்.... சில பெண்ணியவாதிகள் ஆணாதிக்கத்தின் உச்சகட்டத்தை பாலா தொட்டிருக்கிறார் எனவும் சொல்லலாம் என்றாலும்
எத்தனை ஆண்கள் இப்படியான பெண்களின் நேரடியான தாக்குதலை தாங்கிக்கொண்டு உம்மென்று அவர்கள் ஆடுவதை பார்த்து கைக்கொட்டி கரகோஷம் எழுப்பிவிட்டு போவார்கள்..( நான் மேல் சொன்னது வெறும் ஆட்டத்துக்கு மட்டுமான போட்டியல்ல. நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையிலும் இப்படித்தான் வாழ்கிறோம் என்பதை நம்மால் உணரமுடியுமானால் இந்த காட்சியை எந்தவொரு வெறுப்புமில்லாமல் பார்க்கமுடியும் . அப்படி நாம் வெறுப்போமானால் நாம் தினமும் வாழும் இந்த வக்கிரவாழ்க்கையை வெறுக்கலாமென்று பாலா சொல்லியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது)


சரி அடுத்து ஒரு நீதிபதி தான் பதுக்கிய பத்திரங்களை & பணமடங்கிய லாக்கரின் சாவியை தொலைத்துவிட்டு
அதை உடைப்பதற்காக விஷாலை அள்ளிக்கொண்டுவருகிறார்கள் போலிஸார்கள்..இதை பற்றி சொல்வதற்கென்ன இருக்கிறது நம் நாட்டில் அல்லது நாம்(நாம் என்பது நம் போலிஸார், நம் நீதிபதி , நம் அரசியல்வாதி, நம் முதலாளி.. நான்கு நம் கள் நாம் என மறுவியிருக்கிறது ) வாழும் வாழ்க்கை தான் இதுவும். பூட்டை திறக்க விஷால் சாவி கேட்டவுடன் கையாலாகவதனென்று ஓரம் கட்டிவிட்டு அறிமுகப்படுத்தபடுகிறார் ஆர்யா... (கும்பிடுறேன் சாமியாக)


நாங்கமட்டும் எத்தனை காலத்துக்கு தான் கும்பிடுறேன் சாமின்னு சொல்லிட்டிருப்போம். நீங்களும் சொல்லி கூப்பிடுங்க எனும் இடத்தில் நையாண்டி மேலோங்கி தெரிந்தாலும் இன்னமும் இப்படியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் அடித்தட்டு அல்லது நடுத்தட்டு மக்களை பற்றி அல்லது இப்படியான வாழ்க்கையை
வாழவைத்துக்கொண்டிருக்கும் மேல்தட்டு அல்லது முதலாளித்துவத்தினை பற்றி சில நொடிகளில் பதியவைக்கிறார்..

அடுத்து சக்களத்தி சண்டை. நம்ம தமிழ்நாட்டுல நடக்காததாய்யா இது ? கிரீன் வசனங்கள் பேசினாலும் சென்னையின் கடைசி மூலையில் இருக்கும் என் ஊரிலே இந்த கிரீன் வசனங்கள் ஒரு நல்லது கெட்டது அட எதுவுமே இல்லாட்டியும் கேட்டுக்கொண்டிருக்கும் போது திரையில் வரும் அந்த மாதிரியான ஒரு கிராமத்து மனுஷிகள் பேசிக்கொள்வது இயல்பு தானே.. மேக்கப் போட்டு கவுன் போட்டு பெண்கள் ஃபக் என்று சொன்னால் நம்மால் காதுகொடுத்து கேட்கமுடிகிறதென்பதை ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அது தான் உண்மை என்று சொல்லிக்கொண்டு வேறு வேறு ஊரில் இருவரை வைத்து நம்மவர் படும் பாட்டை நாம் நன்கே அறிவோம்.. ஒரே
வீட்டில் இரு அறைகளாக பிரித்துவைத்துக்கொண்டிருக்கும் சக்களத்தி வாழ்க்கை குறித்து தெரிந்துகொண்டு நாம் எதுவும் சாதிக்கப்போவதில்லையென்றாலும் இன்னும் நம்மிடம் இருக்கும் வாழ்க்கைப்பிரச்சினை குறித்ததாக இந்த காட்சியை குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளலாம்.. பின்னாளில் உதவலாம் யாருக்காவது...


காதல் காட்சிகள்.. வெட்டிப்பயல் திருடர்கள் உதவாக்கரைகள் இவர்களின் காதல் இப்படி விரசமாக இருப்பது அல்லது ஆணாதிக்க தொனியோடு இருப்பதென்பது இயல்பானதே..இவர்களால் அவ்வளவு தான் காதலிக்கமுடியும்.. இதுக்கு மேல யாருமே போகமுடியாத பாலைவனத்துக்கு நடுவுல ஒரு குடைப்போட்டு ரெண்டு சேர் போட்டு அதுலயும் உக்காராம கையில் ஒரு கிதார் வச்சிட்டு காதல் அணுக்கள்னு பாடினா அவ்ளோ நல்லாருக்காதில்லையா.. நாளைக்கு நாமே கதைக்கு ஒட்டாத காதல் என்று எங்காவது தட்டச்சிக்கொண்டிருக்கலாம் தானே... சரி இவர்கள் தான் இப்படி விரசமாக காதலை வெளிப்படுத்துகிறார்கள்
என்றால் இந்த பொண்ணுங்களுக்கு எப்படி காதல் வரும் நு கேள்வி எழலாம் ( எழுந்துடுச்சு).. எனக்கு தெரிஞ்ச நிறைய பொண்ணுங்களே செக்சுவலா பேசற பசங்களை தான் லவ் பண்றாங்க.. மானே தேனேன்னு சுத்தினவன்
இப்பவும் சுத்திட்டு தான் இருக்கான் கடை கடையா .(ஐ மீன் பச்சைபோர்டு கடை) ..இதுவும் நாம் (இங்கயும் சில நம்கள் தான் ) வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையே...

ஒரு காதல் காட்சியில் காதலியோடு சேர்ந்து படிக்கும் ஆர்யா பரிட்சையில் ஒரு கேள்விக்கு உட் படுகிறார் . இரண்டாம் காந்தி என்று அழைக்கபடுபவர் யார்? நெல்சன் மண்டேலா அல்லது ராஜபக்சே என்ற ஆப்சனோடு..

இந்த காட்சியில் நான் உணர்ந்த இரண்டு .

ஒன்று .. நாம் நம் இந்திய இறையாண்மை அல்லது சமச்சீர் கல்வி இப்படியொரு கேள்வியையும் இதே பதிலையும் கொடுத்து ஆசிரியர்களுக்கான விடைத்தாளில் ராஜபக்சே என்ற விடைதான் சரியானதென்று பிரிண்டிங் செய்து கொடுக்கலாம்..

இரண்டு.. ஆர்யா ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு பதிலை எழுதுவார்.. இன்றைய நம் மாணவர்களுக்கான கற்பித்தல் முறை இப்படித்தான் இருக்கிறது.. புத்தகத்தை ஒரு மாணவனிடம் படிக்கசொல்லிவிட்டு புரிஞ்சதா என்று கேட்டுவிட்டு மணியடித்ததும் எழுந்து போகும் ஆசிரியர்கள் இருக்கும் வரை இப்படித்தான் பூவாதலையாவிலோ இல்லை கண்ணைமூடிக்கொண்டு இரண்டு விரல்களில் ஒன்றை தொட்டுப்பார்த்து பதிலெழுதி விட்டு செல்வார்கள் மாணவர்கள்..

எது எப்படியோ இதுவும் நம்கள் வாழும் வாழ்க்கை தான்...

ஒரு காட்சி ஆர்யா ஜமீனை திட்டிவிட்டு போக அவர் கண்ணாடி முன் நின்று காரிதுப்பி கண்ணாடியை உடைத்து தன்னையே திட்டிக்கொள்கிற காட்சி.. அதை கேமரா உடைந்துபோன கண்ணாடியில் குலைந்துபோன முகம் பேசுவதை போல காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்...இந்த காட்சிக்காக அவருக்கு நான் சபாஷ் சொல்லுவேன்.. நீங்கள் உணர்ந்து பார்த்தால் அந்த காட்சிக்காக கைதட்டமுடியாவிட்டாலும் உறைந்து போய் உட்காரலாம்...

அதே காட்சியை ஜமீனைப்போல் விஷால் நடித்துக்காட்ட அனைவரும் சிரிக்க ஆர்யா மட்டும் அழுதுகொண்டிருப்பார்.. இப்படி இப்படி நாம் நம் வாழ்க்கையில் எத்தனை பேரை அழவைத்துவிட்டு சென்றிருப்போம்.. அதை உணர்ந்தழுதுவிட்டால் கூட கொஞ்சம் மனிதனாகலாம் தானே.. மனிதர்களுக்கு மனிதர்களாக மாற சின்ன சந்தர்ப்பங்கள் கிடைக்கதான் செய்கிறது சிலர் மாறுகிறார்கள் சிலர் மாறுவதே இல்லை. இந்த சின்ன நிகழ்வை வைத்தே கொடூர வில்லனை நாம் வித்தியாசப்படுத்திக்கொள்ளலாம்..( படம் பார்த்தால் புரியலாம்) மற்ற படி வில்லனடித்துக்கொள்ளும் நிர்வாணக்காட்சிகள் பற்றியோ வில்லன் பற்றியோ சொல்லவேண்டுமானால் இதுவும் சகமனிதர்களால் வாழப்படும் வாழ்க்கை தான்)


சூர்யா பற்றிச்சொல்லவேண்டுமானால் வலிய திணிக்கப்பட்ட காட்சியாக பலர் சொன்னாலும் சிலருடைய வலிகளை நம்மாலும் தணிக்கமுடியுமென்ற நம்பிக்கை துளிகளை நமக்கு நாம் பொழுதுப்போக்குகாக சென்ற இடத்தில் சிறிதாவது நமக்குள் திணித்துவிட முயற்சி செய்த இயக்குனரையும் \\ விஷாலில் நவரசத்தை காணும் போது நம்முகத்தில் ஏற்பட்ட அந்த உணர்வுகளின் வெளிப்பாடுகளை திரையில் சூர்யாவிடமும் பார்க்கமுடிந்தது..


* விஷால், ஜமீன், ஆர்யா, வில்லன், நடிப்பென்று சொல்லத்தோன்றவில்லை

* நாயகிகள், அம்பிகா , இன்னொரு அம்மா... அந்த ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் குறைகளை தெரியப்படுத்தவில்லை..


* அவன் - இவன் **** நாம் நம்முடைய நம் களோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை


* கண்டிப்பா பாருங்க... நல்லா இருக்கு

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

Balaji said...

நல்லா எழுதியிருக்கீங்க...