உனை பார்த்துகொண்டே இருப்பதும்
உன்னிடம் பேசதுடிப்பதும்
பேசாமலே போய்விடுவதும்
எனக்கு வாடிக்கையாகிவிட்டது!
உனை சந்திக்கும் தருணங்களில்
எனை ஆட்கொள்ளும் இன்பதுன்பங்களை
புலம்பிதீர்த்தவாறே முடிந்துவிடுகிறது
என் பேனாவின் தூக்கமற்ற இரவுகள்!
உனக்கு மனவருத்தமில்லாமலும்
எனக்கு மனவருத்தம் நீங்குமபடியாயும்
என் காதலை உன்னிடம் சொல்லிவிட
வழிவகை தேடியே என் நினைவுகள்!
எங்கு
எப்படி
எதனை
பயன்படுத்தி உன்னிடம் சொல்வதெனது
காதலை!
பாற்கடலில் மூழ்கிவிட்ட எறும்பினைபோல்
திக்குமுக்காடி கிடக்கிறேன்!
கரையேறவா ? இல்லை உன்னிலே
கரைந்துவிடவா என?
மதுவை விட உன் நினைவுகள்
எனை நிலைகுலைய செய்வதால் தானோ
மாது நீ!
Friday, March 20, 2009
பாற்கடல் எறும்பு நான்!!!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:23 AM 3 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Tuesday, March 17, 2009
மர்மநாவல்
மெல்ல மெல்ல நகரும்
நாவலின் கடைசி பக்கத்தின்
அதிர்ச்சி மர்மத்தையே
நீயும் கொண்டிருந்தாய்!
ஆறாண்டு காலங்கள்
புரட்டிய காதல்பக்கங்கள்
கடைசியில் கண்ணீரில்
நனைந்து அழிந்து போகையில்
நீயும் ஒரு
மர்ம நாவலாகவே
தெரிந்தாய் எனக்கு!
படித்துமுடித்த நாவலின்
சம்பவங்கள் ஆட்கொள்ளும்
நிகழ்வுகள் என்னமோ
சிலகாலம் மட்டுமே!
நீ
நீங்காத வலிதந்த
நீளமான நாவலாகவே
நீள்கிறாய் என் வருடங்களில்!
உனை மறக்கும் யுக்திகளில்
தோற்று தோற்று இப்போது
இறக்கும் யுக்திகளை மேற்கொள்கிறேன்!
அவைகளும்தோற்றுபோகிறது
உன் நினைவுகளால்
வரலாறு எழுதாத நிகழ்வுகளாய்
என் வலிகள் கவிதைகளாய்!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 5:08 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Saturday, March 14, 2009
நரம்பறுந்த வீணை
நீ முழுவதுமாய்
எனை ஆட்கொண்டிருந்த
தருணங்களில் வேறெதுவும்
சிந்திக்காத என் சிந்தை
ஆயிரம் சிற்பிகளின் கைகள் பெற்றதாய்
நினைத்துகொண்டு செதுக்கிய
உன் பார்வைக்காய் தவங்கிடந்த
என் கவிதைகள்
உன்னால் ரசிக்கப்பட்ட தருணங்களை
நினைத்து அங்கலாய்த்து
சிறகடித்துகொண்டிருக்கும் என் அறைமுழுக்க!
பிரிதொரு நாளிலுன்
பிரியத்தினின்று வெளித்தள்ளப்பட்ட
என் கவிதைகள் அனைத்தும்
என் இருகைகளாலே கிழிக்கப்பட்ட
கணங்களில் அழுதுதுடித்த
காகிதத்தின் வலியின்
பலமடங்கினை கிழிப்பதற்காய்
அடைந்தேன் நான்!
அழகாய் வடிவமைத்து மீட்ட
மீட்ட இன்பம் தந்து நரம்பறுந்து
பரணேறிய வீணையின்
நினைவுகளாய்
அறைமுழுக்க
பரவிகிடக்கும் இந்த கவிதைகள்
அனைத்தும் உன்மீதான
என் அளவில்லாத பிரியங்கள்!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 4:32 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Saturday, March 7, 2009
ஒரு நாயகன் உதயமாகிறான்!!!!

ஹா ஹா ஹா ஹா சும்மா டெர்ரர் மாதிரியே இல்ல..(இல்லதான்னு சொல்லகூடாது).படிக்காதவன் படம் பாத்துட்டு இருந்தப்ப ஒரு சீன்ல தனுஷை இந்தமாதிரி போஸ்ல ஒரு ஸ்டில் எடுப்பாங்க..அதை பார்த்த தேனுவும் ஹை தணி தணி நீ தான்னு கத்த ஆரமபிச்சுடுச்சு..அப்ப நாமளும் இந்தமாதிரி ஒரு ஸ்டில் எடுக்கோணும்னு ஒரு ஆசை..அது இப்போதான் நிறைவேறிச்சு...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:01 AM 5 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை சுயவிளம்பரம்