ஆனாலும் உனக்கு
கெட்ட எண்ணங்கள்
இவ்வளவு கூடாது!
என் உறக்கத்தைகூடவா
கவர்ந்து கொள்ள வேண்டும்?..
என்றெல்லாம் என் நாட்குறிப்பில்
சோகம் இழையோடியுல்லதோ
அன்றெல்லாம்என்னிடம்
நீ முகமலர்ந்திருக்கமாட்டாய்
என்று அர்த்தம்!
உனைப் பார்க்க முடிவதென்னவோ
ஒரு சில நிமிடங்கள்தான் என்றாலும்
அது போதும் என் மீதமுள்ள
நேரங்களையும் ஆக்கிரமிக்க!..
புன்முறுவலோடு நீ பூக்கும்
சிறு புன்னகைகூட
ஒருவகை போதைதான்..
அதிலிருந்து மீண்டெழுவதற்கு
எனக்கு பல மணி நேரமாகிறது!
சிறு பொய் கூறினேன் என்பதற்காக
என்மீது கொபம் கொள்ளதே!
இல்லாவிடில் உனை சமாதானப்படுத்த
ஆயிரம் பொய்களை கூறி விடுவேன்..
உனக்கெதிரான என் தீர்மானங்கள்
அனைத்தும் ஒரே நொடியில்
உடைந்து போய்விடுகின்றன..
உன் இதழ்கள் எனக்காக
ஒரு துளி புன்னகையை
உதிர்த்து செல்லும் பொழுது!
உன்மீது கொண்டுள்ள என் அன்பு
என்னவகை என்று தெரிவதற்குள்
அடுத்த கட்டத்திற்கு தாவிவிடுகிறது
என் அசுர மனது!
சாத்தியமில்லை என்று தெரிந்தாலும்
எல்லாவற்றையும் எனக்கு
சாதகமாகவே எடுத்துகொள்கின்றேன்..
உன்னிடமிருந்து மட்டும்!
எனக்கே புரிவதில்லை?
எப்படித்தான் திரும்ப திரும்ப
உன்னிடமே ஏமாறுகிறேன் என்று!
உன்னை தவிர்க்க நினைத்து
தவிர்க்க நினைத்துமுன்பைவிட
அதிகமாகவேநெருங்கி விடுகிறேன்!
எனக்கு தெரிந்து
அன்பு செய்வதைவெறுக்கும் ஜீவி
உலகத்தில் நீ மட்டும்தான்!
சொன்னால் நம்பமாட்டாய்!
நான் கூறும் பொய்களைமட்டுமே
நீ ரசிக்கின்றாய்!
உன்னிடம் மட்டுமேபொய்களை
அதிகமாக எடுத்துகொள்கின்றேன்!
என் பொய்கள் மட்டுமேஉனை
அதிகமாக கவர்கிறதென்பதால்!
நீ என்மேல்
எப்போதும் காட்டும் வெறுப்பைவிட,
எப்போதாவது காட்டும் அன்புதான்
என் மனதில்ஆழமாக பதிந்து விடுகிறது!
உண்மையில் எனக்கான
கவிதை சுரங்கம் நீதான்!
வடிவமைக்கும் பணிமட்டும்
தான் என்னுடையது..
நீ என்மேல் பொழிவது
விஷ அ(ன்)ம்புகள் என்று
எனக்கு தெரியப்போவதில்லை..
நான் சாகும் வரையில்!
என் முன்னால் யாரிடமும்
அதிகமாக அன்பு காட்டாதே!
இல்லாவிடில் அவர்கள்
என்னால் சபிக்கப்படுவார்கள்!
Friday, July 25, 2008
செல்லப்பாண்டி கவிதைகள்...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 9:45 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை குமார்.c.v
இது தாண்டா போலிஸ்..
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
கருப்பொருள் அறிந்தோ
அறியாமலோ உறுதிமொழி
எடுப்போம் நாங்கள்..
காந்தி ஜெயந்தியாகட்டும்
சுதந்திர தினமாகட்டும்
மது அருந்தலாம்.
கைக்காசு தீர்ந்தால்
கடமை எங்கள் கண்முன்
வந்து நிற்கும்..
லைசன்ஸ் இருந்தாலும் சரி
இல்லையென்றாலும் சரி
எங்களுக்கு கைக்காசு தீரும் போது
நீங்கள் தலைகவசம் அணியாவிட்டாலும்
கடமை கண்முன் நிற்கும்..
கொலைகள் நடக்கட்டும்
கொள்ளைகள் நடக்கட்டும்
கேள்விகள் கேட்கபட்டால் மட்டுமே
கட்டுப்பாடு எங்களுக்குள்
விட்டுகொடுக்காமல் வந்துவிடும்..
அப்பப்பா..எத்துணை
அருமையானது எங்கள்காவலின்
கண்ணியமான சேவை..
அரசியல்வாதி ஒருவனின்
வருகைக்காக காலையிலிருந்து
இரவு வரை வெயிலடித்தாலும்
மழைவந்தாலும் பொம்மை போல
நின்றிருப்பீர்கள்.
இந்த பிழைப்பு பிழைப்பதற்கு
எங்களோடு வரிசையில் நின்று
ரேஷனில் அரிசி வாங்கி
தின்று வாழலாம்....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 9:42 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Thursday, July 24, 2008
அப்படியாப்பா??? இது கவிதைன்னு சொல்ல முடியாது
இந்தியா சுதந்திரம் அடைந்து
விட்டது!!!
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே"
காந்தி சுட்டு கொல்லபட்டார்!!
"ஐயகோ என்னே கொடுமை"
அரசியலில் முழுக்க ஊழல்
ஆரம்பிச்சுட்டாங்களா??
அதிகாரிகளும் ஊழல் பண்றாங்க
அடப்பாவிங்களா???
நான்கு வயது சிறுமி கற்பழிப்பு
அப்படியா?
அண்ணன் தம்பி சண்டையில்
அரிவாள் வெட்டு அண்ணனுக்கு
அப்படியா?
அடுத்தவன் பொண்டாட்டியோடு
கள்ளக்காதல்..
கணவனின் ஆவேசம்
மனைவி,காதலன் இரட்டை கொலை
அப்படியா?
அணு ஒப்பந்தம் ஆட்சி கவிழ்ப்பாகலாம்
நம்பிக்கை ஓட்டெடுப்பு.
மத்தியில் எம்பிக்களிடம்
பணபுழக்கம்
அப்படியாப்பா?
அசோக்நகர்,வடபழனியில்
தொடர்கொலை-சைகோ யார்?
தேடுதலில் தீவிரமான போலிஸ்.
அப்படியாப்பா?
இந்துமதம் எங்கே போகிறது?
கேள்வியை தலைப்பாக்கி
கட்டுரைதொடர்..
அப்படியாப்பா?
இஸ்லாம் சொல்வதொன்றும்
செய்வதொன்றும்
அப்படியாப்பா?
தாயையே மதிக்காத மகனாய்
இயேசு..இங்கே அவரையும்
வணங்க ஆட்களென ஆதங்கம்
அப்படியாப்பா?
என்னப்பா அப்படியாப்பா?
நீங்களும் தான் காலகாலமாக
நல்லது கெட்டதென செய்திகளாய்
என் காதுகிழிய சொல்கிறீர்கள்.
நல்லது நடந்தது சரி..
தீயவைக்கு முற்றுபுள்ளி வந்ததாகவே
தெரியவில்லை..
இப்படியே போனால் அப்படியாப்பா
"அடப்போங்கப்பா"
எனக்கூட மாறும்..
என் மேல் வருத்தப்படவேண்டாம்.
-இது வரை நான்..இதற்கு மேல் கவிஞர் ருத்ரா...
தணிகைமலை மாமணியே
முருகைய்யா.."===============ருத்ரா
மதுரை சோமு இன்று
இப்படித்தான் பாடியிருப்பார்.
பேனாவுக்கு பதில்
ஒரு வேலாயுதத்தை வைத்து
கூர்மையாக குத்தி குத்தி
எழுதியிருக்கிறீர்கள்.
உங்கள் "அப்படியாப்பா?.."
"செய்தீ" வரிகளில்
அப்படியும் இல்லாமல்
இப்படியும் இல்லாமல்
"அலி"ப்பாக்கள் எனும்
ஒருவகை"கலிப்"பாக்கள்
அல்லவா எழுதியிருக்கிறீர்கள
ஒரு புதிய யாப்பிலக்கணத்தில்
தரவு கொச்சக கலிப்பா என்று
இதை சொல்லிக்கொள்ளலாம்.
மனிதமுகங்கள்
எத்தனை வகையாய் பூத்திருக்கின்றன?
ஒரு நேரம் ரோஜாப்பூ
மறு நேரம் எருக்கம்பூ
இன்னொரு நேரம் அல்லிப்பூ.
அப்புறம் பார்த்தால் கள்ளிப்பூ.
இந்த பூக்கள் எல்லாம்
எப்படி கொலைவாள்களாய்
மாறின?
மனித ஆத்மா தினமும்
படுகொலை செய்யப்படுகிறது.
இந்த சித்திரங்களின்
கலைடோஸ்கோப் காட்சிகளை
இல்லை இல்லை...
கொலைடோஸ்கோப் காட்சிகளை
நீங்கள் காட்டியிருப்பது
நம்மை திடுக்கிட வைக்கிறது.
கவிதைகள்
முகில்கள் போலும் உலவலாம்.
திகில்கள் ஊட்டியும்
திக் விஜயம் செய்யலாம்.
உங்கள் எழுத்துக்களின்
..இந்த"திக் திக் விஜயத்துக்கு"
நிச்சயம் வெற்றி தான்.
வாழ்த்துக்களுடன்ருத்ரா.
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 8:29 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
பிரியாத நினைவுகள்...
நிஜங்கள் முடிவுக்கு
வரும்போதெல்லாம்
நினைவுகள் ஆரம்பமாகிவிடுகிறது.
சுகமாகவும் சோகமாகவுமே!
சுகத்தில் மூழ்க நினைத்தால்
சோகம் ஆட்கொண்டு அணைக்கும்.
தனிமையின் அசைபோடுதலில்
வருடும் தென்றலில் கொஞ்சம்
நனைக்கும் மழையில் கொஞ்சம்
வெளிவிடும் புகையில் கொஞ்சமென
நினைவுகள் உதிர்த்துபோகும்..
மறக்கபடகூடாதவைகள் விடுபட்டும்
மறக்கதுடிப்பவைகள் விடுபடாமலும்
நின்று அடம்பிடிக்கும்..
நானும் அடம்பிடித்துகொண்டிருப்பேன்
தேங்காயை உருட்டும் நாயினை போல....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 4:41 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Wednesday, July 23, 2008
தேவையற்ற வெள்ளாமை..
கோபத்தின் வெள்ளாமையில்
பகைமை விளைச்சலில்
தலை கவிழ்தலோ
தவறுகளின் ஆரம்பமோ தான்
முடிவாயிருக்கும்..
ஆசுவாசத்தின் கழிவிறக்கம்
அமைதியின் பலனை
நினைவிருத்தினாலும்
பருவங்களில் வெள்ளாமையெடுக்கும்
கோபம் தணிந்ததாகவே இல்லை..
தேவையற்ற வெள்ளத்தின்
சேதங்கள் மட்டும் அடிக்கடி
அரங்கேறிகொண்டு தானிருக்கும்..
கோபத்துக்கான காரணங்களை
அர்த்தமாக்க முற்பட்டுகொண்டே.......
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 4:40 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Monday, July 7, 2008
புணர்தலென்பது.. - சுயம்சொன்னால்
காமத்தில் சிக்குண்ட உடல்கள்
எத்தனையோ..
உடல்களின் புணர்தல் பெருகியும்
காமத்தின் உணர்தல் மட்டும்
தணிந்ததாயில்லை..
மனைவியோடு புணர்தலென்பது
பிரேதத்தின் உணர்தலாகவே
இருக்குமெப்போதும்...
~ஆயினும்~
உடல்களின் தேடல்கள் மட்டும்
தொடர்ந்துகொண்டேயிருக்கும்..
கார்த்திகையில் நாயை போலவே..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 2:48 PM 5 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Friday, July 4, 2008
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாணி அக்கா...
அமெரிக்காவில் தமிழ் பள்ளியில் பகுதிநேர ஆசிரியையாக அ ஆ இ இந்த மூன்றெழுத்து மட்டுமே கற்று தரும் ஆசிரியையாய் இருந்தாலும் அமெரிக்காவில் சென்று தமிழ்பணி செய்வதில் இவர் மீது எனக்கு இன்னும் பற்று அதிகமானது..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 7:10 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை வாழ்த்துகள்



