1.
ஊர்சுற்றியது போதுமென
பூமியின் பார்வையிலிருந்து
புதைந்துகொண்டிருந்தது
சூரியன்..
வெள்ளொளி மறைய
மெல்ல மெல்ல கருக்கத்தொடங்கிய
அந்த அந்திமப்பயணத்தின்
குறுக்கில்
குருதிதோய்ந்த சதைப்பிண்டங்களாய்
சிதறிக்கிடந்தது
ஈருருளியொன்று...
யாருக்கோ
அல்லது
யார்யாருக்கோ
இருட்டத்தொடங்கியிருந்தது...
2.
உலகின்
அத்தனை சப்தங்களின்
செவிகளையும் அடைத்து
நிசப்தங்களாய் மாற்றிய
இரவொன்றில்
அடர்வனத்தில்
மெலிதாய் தொடங்கிய
தென்றலின் குளிர்ச்சியில்
சில பறவைகள் கீச்சிடுகின்றன!
நிலவைப்போர்த்தியிருந்த
மேகங்கள் சட்டென விலகியிருந்த
ரம்மியமான அந்த பொழுதில்
உனக்கென மட்டும்
தொடக்கமும் முடிவுமில்லாத
பூக்களை உதிர்க்கும் பாதையொன்றை
சமைத்துச்சிரிக்கிறது
என் கனவு...
Wednesday, December 23, 2009
ஒரே நாளின் இரண்டு இரவுகள்
எழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 12:17 AM 2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post
வகை கவிதை
Sunday, December 20, 2009
மிருகம் விழித்த இரவு...
நடுநிசித்தாண்டியும்
உறக்கத்தில் ஆழ்ந்து போகாத
என் விழிகள் வன்மங்களை
கட்டவிழ்த்துக்கொண்டு
தெருவிலிறங்கி
ஓடிக்கொண்டிக்கையில்
தூரத்திலொரு
உருவம் எவ்வித ஒப்பனைகளுமின்றி
என்னைப்பார்த்து சிரிக்கிறது!
ஏதோவொரு பயணத்தில்
தெரியாமல் இடித்துவிட்டு
உதட்டுப்புன்னகைக்கு பின்னால்
மன்னிப்பென்ற வார்த்தையை
உதிர்த்துவிட்டு போனவள் தான்
இவள்!
சிவப்பின் வெறியேறியிருந்த
என் கண்கள் நிர்வாணத்தை
உடுத்திக்கொண்டு அவளை
இருட்டின் போர்வைக்குள்
அழைத்துச்செல்கின்றது...
தன் வானத்தில் கால்பதித்து
தலைகீழாய் நடக்கும் என்னை
வெறுத்துக்கண்மூடிக்கொண்டது
தெருவிளக்கு...
எழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 7:16 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post
Friday, December 18, 2009
தனித்த இரவொன்றின் கனவு....
அந்தக்கனவு
எனக்கு மிகப்பிடித்தமாய் இருக்கிறது!
ஒரு
குழந்தை என்னைப்பார்த்து
புன்னகைத்துக்கொண்டிருந்தது!
ஒரு
இருக்கையை விட்டுக்கொடுத்தற்காக
இயலாமையொன்று
நன்றி நவின்றது!
ஒரு
மற்றும்
இன்னொரு
குரல் காதல்மொழியை
பேசிக்கொண்டிருந்தன!
அதே
பேருந்தில் தான்
அவளென் அருகில்
நின்று புன்னகைத்தாள்!
அந்தக்கனவு
எனக்கு மிகப்பிடித்தமாய் இருக்கிறது!
எழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 11:28 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post
வகை கவிதை
Saturday, December 5, 2009
01.
நீ
எங்காவது
சந்தித்திருக்கலாம்
என்னைப்போல் ஒருவனை..
இப்போது
தான் பார்க்கிறேன்
உன்னைப்போல் உன்னை..
02.
ஒரு
மயிலிறகின் மென்மையைப்போல்
ஒரு
பூவின் வாசத்தைப்போல்
ஒரு
கனவு பலிப்பதைப்போல்
ஒரு
உயிர் ஜனனிப்பதைப்போல்
நீயும்
அதிசயமும்
அற்புதமும் நிறைந்தவளே!
03.
பாலைவனம்
ருசிக்கும்
மழையைப்போலவே
நீயும்
என்னுள் ஊறிப்போகிறாய்!
04.
குழந்தை
பாதங்களின் மென்மையை
உள்ளடக்கியே
உதைக்கிறது
உன் கோபங்கள்..
ரசிக்கத்தான் முடிகிறது;-)
05.
வலைவிரித்து
காத்திருக்கும் மீனவனாய்
உனக்கான சொற்களுக்காய்
காத்துக்கொண்டிருக்கிறேன்..
கிடைத்தால்
கண்டிப்பாய் என் காதல்
கவிதையாய்
வடிக்கப்படும்!
06.
நீ
எங்காவது
சந்தித்திருக்கலாம்
என்னைப்போல் ஒருவனை..
இப்போது
தான் பார்க்கிறேன்
உன்னைப்போல் உன்னை..
எழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 2:35 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post
வகை கவிதை;காதல்
Thursday, December 3, 2009
நான்கு கவிதைகள்
1.
தனிமை
இரவின் உறக்கமற்றப்பொழுதுகள்
மதுவோடு புழங்குதல்
புகையோடு கைக்கோர்த்திருத்தல்
வறட்டுபுன்னகை உதிர்க்கும்
உதடுகள்
எல்லாம் தொலைந்துபோயிருக்கிறது
இரண்டாமவள் உருக்குலைந்து
மூன்றாமவள் உருப்பெற்றிருப்பதால்...
2.
எப்போதாவது
எதிர்படும் பழைய நண்பர்கள்
பழைய நட்போடே
தேநீர் அருந்த கூப்பிடும்போது
பழையன
புதுப்பிக்கப்படுகிறது..
3.
மொத்தமாய்
நனைந்து போன உடை
ஒரு கையில் சிகரெட்
ஒருகையில் தேநீர்
மழை இனிக்கிறது...
4.
அதிவேக
பைக் டிரைவிங்
பிடித்தமான எனக்கு
எப்போதாவது லிப்ட் கேட்கும்
சிறார்களோடான
மிதவேகமும்
பிடித்தமாயிருக்கிறது..
எழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 9:23 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post
வகை கவிதை;மழை