நீ வாழ்வதற்கு பிறந்தவன் வீழ்வதற்கல்ல
யாரது மெளனமாய்
ஏனடா விழிகள் நீருடன்
என்ன!
தோல்வியால் தோய்ந்து போனாயா
கலங்காதே வீரனே!
விழிநீர் துடைத்து
நெஞ்சினை நிமிர்த்து
நீ வாழ்வதற்கு
பிறந்தவன்
வீழ்வதற்கல்ல
உன் அகத்தீயினை
அனைக்க வேண்டாம்
தோல்விக்கு கொல்லியிட
தேவைப்படும் நமக்கு.
உன்னை சுற்றி
புறம் சொன்னோர்நெற்றி
நிலம் காணவைப்போம் வா!
வெற்றியின் விலாசம்
வேண்டாம் இனி உனக்கு
வெற்றி உன்னை தேடட்டும்
அதுதான் என் கணக்கு
புலம்பலை விடுத்து-லட்சியத்தை
புருவத்தின் இடை நிறுத்து
தோல்வி ஓர் கோழையடா!
தோற்றுப்போகும் உன்னிடத்தில்
ஆத்திரமும் அவசரமும்
தோல்வியின் ஒற்றர்கள்
அவர்கள் இனி நமக்கெதற்கு?
கடந்ததை சிதறடித்து
கவனத்தை முன் நிறுத்து
ஆதவன் இனி உனக்கு
அஸ்தமிக்க போவதில்லை!
சாதனை புரியும் வரை-நீ
சாகவும்போவதில்லை
சுறுசுறுப்பு சுடர் ஏற்றி
சோம்பலை சாம்பலாக்கு
திட்டமிடு பக்குவமாய்
திருத்திக்கொள் தவறுகளை
உன்னை விடு என்னை விடு-உன்
உழைப்பிற்க்கு முதன்மை கொடு
உழைப்பென்னும் வாளெடுத்து
முயற்சிப்பாதையில்
நம்பிக்கை குதிரை ஏறி
உலகை வெல்வோம் வா!
வெற்றி நமதே!
--யாழ் பிரபு
Saturday, April 28, 2007
நான் ரசித்தவை
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 2:39 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Post a Comment