சலசலக்கும் சத்தத்தோடு
அடுத்தடுத்த குழந்தையாய்
கடலுக்காய் பிறந்திடும்
அலையாய் பிறக்குதே
ஒவ்வொரு நாளும்
இன்றைய நாளாய்...
குருவி தலையின் மீது
பனங்காயாய் முப்பதுகிலோ
எடைகொண்ட குப்பனும்கூட
பிழைப்புக்காய் தலைமீது கூடை
சுமந்து பயணமாகிறான்
இன்றைய நாளாவது
அதிகமாய் விற்குமென..
தண்ணீரில்லா குளத்தின்
குறுகிசாகும் மீனினை போல்
தினம் தினம் வெயிலிலே
வெந்து கொதிக்கும் தாருடன்
நொந்து பாதைகள் உருவாக்குவோனும்
மேஸ்திரியின் அதட்டலுக்கு இடையே
இன்றைய நாளாவது மழைவந்து
வெப்பம் தணிக்காதா என்று
ஏக்கத்தினூடே பணியை தொடர்கிறான்.
இத்தனை ஏக்கம் கொண்ட
மனிதனை மோதிவிட்டு சிறிதும்
பொருட்படுத்தாது வேகமாய்
பறந்து கொண்டிருக்கும் கார்
ஓட்டும் பணக்காரனுக்கு
இன்றைய நாளாவது இரக்கம்
பிறக்காதா என எண்ணிவிட்டு
அலுவலக வேலைக்காய் நானும்
புறப்படுகிறேன் மனிதமில்லாதவனாய்..
Thursday, January 17, 2008
இன்றைய நாள்..
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Post a Comment