எட்டாத உயரத்தில் இருக்கும்
கொம்புதேனுக்காய் முடவனின்
ஆசையை போல் எனக்குள்
ஓர் ஆசை கவிதையொன்றை
என் கைப்பட எழுதிவிட..
அன்றிலிருந்து ஆரம்பமானது
கஜினியின் பதினேழு முறை
படையெடுப்பை போல்
காகிதத்துக்கும் என் பேனாவுக்கும்
ஆன யுத்தம்..
ஈன்று சிலநேரமான கன்றின்
எழுந்து நிற்க ஏற்படும்
தோல்விகள் போல்
காகித கசக்கல்கள் மட்டுமே
என் கவிதை போருக்குள்..
அயராது உழைத்த உழவனின்
நல்ல மகசூல் போல்
எண்ணங்களில் தேடலில்
எனக்கும் கிடைத்தது
பதினைந்து பக்க கவிதை...
எந்த பக்கம் தாவுவதெனெ
விழிக்கும் மதில்மேல் பூனையாய்
நானும் விழிக்கிறேன்
இது கவிதையா? ஓவியமா ?
என..
என்ன சொல்ல உன் பெயர்
மட்டுமே எழுதிய காகிதம்கூட
எல்லாமுமாய் தோன்றுகிறதே
எனக்குள்...
Wednesday, January 9, 2008
கவிதை எழுத முயல்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Post a Comment