வண்ணங்களின் வளைவு நெளிவுகளில்
எண்ணங்களின் தெளிவை பிரதிபலிக்கும்
சாலையோர விளம்பர பலகை ஓவியன்..
உயரமான இடத்தில் போய் வரைந்தாலும்
உயர்வுகாண முடியா வாழ்க்கையில்
வாழ்த்துகள் சிலர் வாயால் கேட்க
சின்ன சின்ன சந்தோசம்..
உழைப்பையே பெரிதும் நம்பி
உழவையே தொழிலாய் கொண்டு
கலப்பையை கையில் ஏந்தி
காலத்துக்கும் வெயில் மழை பாரா
அனைவரின் பசிபோக்க அவனின்
பசி மறந்து உழைக்கும் விவசாயி
உழைப்பின் பலனாய் மகசூல்
காணும் போது தான் மனதோரம்
சின்ன சின்ன சந்தோசம்...
கெட்டி மேளம் கொட்டாத காலம்
கட்டிக்கொள்ள இதுவரை யாருமில்லை
வெட்டியாய் வாழ்ந்தே முடிப்பேனோ
என்று எண்ணியே நாளுமே
நரகமாய் தள்ளும் முதிர்கன்னி
திடீர் ஒருநாள் பெண்பார்க்க ஏற்பாடு
கனவுகளின் கருவுறுதல்
நினைவுகளில் சின்ன சின்ன சந்தோசம்...
எண்ணெய் தேய்க்கா தலை
அழுக்கு சீருடை அடிவாங்கியே
வேலை கற்கும் அழியாத கனவுகளோடு
வேலை முடித்து சோகமாய் திரும்பும்
மெக்கானிக் சிறுவன் அடைமழைக்காய்
ஒதுங்கிய பள்ளி நினைவுகள் அழகாய்
சின்ன சின்ன சந்தோசம்...
ஆம்
சின்ன சின்ன சந்தோசங்கள் எல்லாம்
இருட்டு தேசத்தின் மின்மினி பூச்சிகள்
இன்றளவும் முன்னேறா வாழ்க்கை
முகம் தெரியா மின்மினிபூச்சிகளாய்
எம் சகோதர சகோதரிகள்..
Wednesday, January 2, 2008
மின்மினிகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Post a Comment