வெளிச்சம்
யாருமில்லா இருட்டறையில்
தனியாய் அமர்ந்திருந்தேன்
கையில் விளக்கோடு வருகிறாய் நீ...
நீ வந்தாலே ஒளிவருமே
விளக்கெதற்கு என்றேன் நான்..
வெட்கத்தில் விளக்கினும் சிவந்து
அருகில் வைத்துவிட்டு
ஓடிவிடுகிறாய் நீ.
உன்னிலிருந்தே ஒளிபெற்று
பிரதிபலித்ததாய் சொல்லி
அணைகிறது விளக்கு...
**************************************************************************
தேவதை
தேவதை எப்படி இருக்கும்
என கேட்கும் உன் தம்பியிடம்
ரொம்ப அழகாயிருக்கும் என
சொல்லி முடிக்கிறாய் நீ.
உன்னைவிட அழகாய் இருக்க
முடியாதென்று சொல்லாமல்
தவிக்கிறேன் நான்...
**********************************************************************
தேவதைகளுக்கு சிறகுகள்
இருக்கும் என்று எங்கோ
படித்திருக்கிறேன்..
பொய் சொல்வோர் நிறைய
இருந்திருக்கிறார்கள் போலும்
நீ இங்கே சிறகில்லாமல்
இருப்பதை யாரும்
பார்க்கவில்லையோ
***********************************************************************
வானத்திலிருந்து
தான் தேவதைகள்
வருமாமே..
நீ மட்டும் எப்படி
எதிர்வீட்டிலிருந்து
வருகிறாய்...
**********************************************************************
தேவதைகள்
எப்போதுமே புன்னகையோடு
தான் இருக்குமாம்.
நீ மட்டும் காதல் சொன்னால்
ஏன் கோபப்படுகிறாய்.
*************************************************************************
தேவதைகள் எல்லாம்
காரணமின்றி யாரையும்
துன்புறுத்தாதாம்..
நீ மட்டும்
என்ன என்னை இல்லாமலே
ஆக்கிவிட்டாய்
***************************************
தாவணி
தாவணிகட்டியதால்
அழகாய் இருப்பதாய்
சொல்கிறாய் நீ..
உன்னை கட்டியதால்
அழகாய் இருப்பதாய்
சொல்லி பறக்கிறது
தாவணி..
************************************************
ஒரு மணிநேரமாய்
அலசுகிறாய்
ஜவுளிக்கடையில்
உனக்கான தாவணிக்கு.
உன் கை படும் தாவணிக்கெல்லாம்
தாங்கமுடியா சந்தோசம்
அதிஅழகியை தொட்டுவிட்டோமென
*****************************************************
உன்னால் நிராகரிக்கபட்ட
தாவணிகளெல்லாம்
உயிர்நீக்கின்றனவாம்
தன் சாயம் வெளுத்து
உனக்கானவையாய்
உருவாக்கபடாததினால்
***********************************************************
தாவணிகட்டினால்
கொள்ளையழகாய் இருக்கிறாய்நீ
என்று உன் முந்தானை இழுத்தேன் நான்
இவளிடம் இருந்து
என்னை பிரிக்காதே என
காற்றோடு சேர்ந்து
என்னை அடிக்கிறது தாவணி
****************************************************************
Thursday, January 17, 2008
எனக்குள் ஒரு தாக்கம்-தபு சங்கர்
Subscribe to:
Post Comments (Atom)
1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
நல்ல ரசனை
விரும்பினால் என் வலைதளத்தையும் பார்வையிட்டு பதில் கூறவும்
http://manthodumanathai.blogspot.com/
நன்றி
Post a Comment