அழகுகுரலால் இசைபாடும்
குயிலின் கருத்த தேகமாய்
வண்ணத்தூரிகையில் எண்ணங்களை
வரையும் அந்தரத்தின் ஓவியனின்
வேர்த்தமுகமும் இழந்த உழைப்பும்
வெயிலும் மழையும் சூறையாய்
காற்றும் எத்தனை வந்தாலும்
பூக்களோடு உறவாடி உறிஞ்சுகுழலால்
தேனினை சேகரிக்கும் தேனியாய்
தினம் தினம் கூனிகுருகி
கொதிக்கும் தாரோடு கலந்த உடலாய்
பாதைகள் செப்பனிக்கும்
சாமான்யனின் கஸ்டமும்
மாடுகள் பூட்டிய கலப்பையை
கையில் ஏந்திகொண்டு சேற்று
காலணிகள் அணிந்தே போராடி
அறுக்கும் நெல்மணிகளுக்கு
பின்னால் மறைந்த வலிகளும்
வண்ணங்களோடு பறந்து திரியும்
பட்டாம்பூச்சியாய் கனவுகளோடு
சிரித்து கல்வி கற்கும் வயதில்
தீக்குச்சிகளோடு கணக்கியல் கற்கும்
அரும்பிய மொட்டுகளான சிறார்களின்
கருகிய கனவுகளும்
தெரியாமல் ஒன்றும் இல்லை.
அடர்ந்த மலைப்பனியில்
தெரியாத வாகனவெளிச்சமாய்
கேட்கும் சத்தமாய்
இவர்களின் வாழ்வும்
தெரிந்தும் தெரியாமல்......
Saturday, January 19, 2008
தெரிந்தும் தெரியாத....
Subscribe to:
Post Comments (Atom)
1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
nice lines, very touching.........
Post a Comment