CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, June 14, 2008

ஒரு சுயத்தின் உளறல்..

என் பேரு சிவா.வயசு 25 ஆகுது.நல்ல கம்பெனில வேலை செய்றேன்..போன வருசம் தான் கல்யாணமும் ஆச்சு.அழகான பொண்டாட்டி..எனக்குன்னு பாத்து பாத்து செய்வா..இந்த ஒரு வருசத்தில சின்னதா எப்பவாச்சும் கசப்பு வந்தா கூட அவளோட சிரிப்பும் விட்டுகுடுக்கும் தன்மையும் என்னை அதை மறக்கவெச்சுடும்..நல்லாவே இருந்தோம் ஒரு வருசம் வரைக்கும்..படுக்கையறையிலிருந்து எல்லாத்திலயும் அவளுக்கு பிடிச்ச மாதிரி நானும் எனக்கு பிடிச்ச மாதிரி அவளும் இருந்தோம்..

ஒன்பதாவது மாசம் சீமந்தம் முடிச்சு புள்ள பெத்துட்டு வரேன்னு அம்மா வீட்டுக்கு போயிட்டா..பொண்டாட்டி இல்லாம ரெண்டு நாள் ஏதோ போச்சு..மூனாவது நாளென்னோட தனிமை என்னை என்னமோ புரட்டி போட்டுச்சு..அவ ஞாபகமாவே இருந்துச்சு..லீவ் போட்டுட்டு அவளை பாக்க போயிட்டேன்..ரெண்டு நாள் அங்கிருந்தா ஆபிஸிலிருந்து போன் பண்ணி சீக்கிரம் வாங்கன்னு குரல்..வேலையை பாருங்கன்னு அவளும் துரத்திட்டா..

ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா அம்மாக்காரி எப்பவும் கஸ்தூரியில ஆரம்பிச்சு லட்சுமி வரைக்கும் அழுதுட்டு இருக்கா..சாப்பாடு கூட நேரத்து போட மாட்டா..உம்முன்னு மூஞ்சை வெச்சுகிட்டு போய் படுக்கையில இழுத்து போத்திகிட்டு படுத்தா பக்கத்தில படுத்திருந்த பொண்டாட்டி காரி தான் ஞாபகத்து வர்ரா...அதோடு அந்த லீலைகளும்..உடம்பு நெருப்பா கொதிக்க ஆரம்பிச்சுது..மண்டை காஞ்சு போய் ராத்திரிக்கெல்லாம் தூக்கம்வரமா காலையில எந்திரிச்சு கழுவின மூஞ்சும் சூம்பிபோன கண்ணுமா ஆபீஸ் போனாக்கா பக்கத்து சீட்டு பழனி என்ன மச்சி பொண்டாட்டி இல்லாம வாடிட்ட போலன்னு வெறுப்பேத்தினான்..

அடபோடா நீவேறன்னு சொல்லிட்டு திரும்பினா டேய் 150 ரூவாய் தான் ..காலேஜ் போற பொன்னு ஒன்னு இருக்கு..ஓகேன்னா சொல்லு சாயங்காலம் நேரா போயிடலாம்..எட்டு மணிக்கெல்லாம் அவளை திருப்பி அனுப்பிடலாம்..

போடா இவன...நான் எம்பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு வேலை முடிச்சு வீட்டுக்கு வந்து திரும்பவும் அம்மா காரியோட பாவக்கண்ணீர பாத்துபுட்டு ரூம்ல அடைஞ்சா மனசு பழனி சொன்ன காலேஜ் பொன்னுக்கா திரும்பிச்சு..நாளைக்கு போலாமா வேணாவான்னு மாறி மாறி போட்டி போட்டு சுத்துது..எப்படியோ போலாம்னு முடிவு பண்ணி தூங்கிட்டேன்.காலையில எழுந்து ஆபிஸ்க்கு கிளம்பி போய் பழனிக்கிட்ட கேக்கலாம்னு நினைச்சு நினைச்சே ஏதோ ஒன்னு தடுக்குது..கடைசி வரைக்கும் கேக்க மனசே இல்ல..வீட்டுக்கு வந்து ரூமுக்குள்ள போவாம மேயக்காட்டு பக்கமா காத்தாட உக்காரலாம்னு
அப்படியே போனேன்..

அப்ப தான் இந்த பிரியா பொன்னு அந்த பக்கமா வந்துச்சு..பாவம் கல்யாணம் ஆகி ஆறுமாசத்தில் புருசங்காரன் ஆக்ஸிடெண்ட்ல செத்துட்டான்..திரும்ப அம்மாவூட்டுக்கே வந்துட்டா..எப்பவும் அண்ணான்னு தான் கூப்பிடுவா..என்னங்கண்ணா தனியா உக்காந்துட்டு இருக்கீங்கன்னு கேட்டுபுட்டா..எங்கிருந்து வந்தது தைரியம்னு தெரியலை..எங்க பொண்டாட்டி இல்லை..தனியா கட்டில்ல படுக்க கூட முடியலைம்மான்னு பட்டுன்னு சொல்லிட்டேன்..அந்த பொன்னு சுதாரிச்சுகிட்டு சரி நான் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போக முயற்சி பண்ண பட்டுன்னு அவளை கட்டி புடிச்சுகிட்டு பிச்சை காரன் மாதிரி கெஞ்சிட்டு இருந்தேன்,,

எதோதோ பண்ண கடைசியில அந்த புள்ளயும் மடியில சாய்ஞ்சுடுச்சு..எங்க பழக்கம் அடுத்தநாளும் வந்துச்சு..இப்படியே பொண்டாட்டிய மறந்துட்டு அந்த புள்ளை மிரட்டி மிரட்டி என்கைகுள்ள போட்டுகிட்டு என் ஆசையெல்லாம் தீத்துகிட்டு என் இஸ்டத்துக்கு இருந்தேன்.இதை ஒரு நா மேயக்காட்டு பக்கமா வந்த ஆத்தா காரி பாத்து தொலைச்சுட்டா..

புள்ள பெத்தலட்சணம் போதும்னு ஊருக்கு போய் பொண்டாட்டிகாரிய இழுத்துட்டு வந்துட்டா..ஒரு மாசகுழந்தையோட பொண்டாட்டியும் வந்து சேர்ந்தா.புள்ள தறிட்கெட்டு திரியறான்னு எப்படி என் ஆத்தாகாரி என் பொண்டாட்டிகிட்ட சொல்லுவா..

அடியே அந்த பிரியா பொன்னு ஊர்ல இருக்கறவனையெல்லாம் வெச்சுகிட்டு திரியறா..வெக்கங்கட்ட சிரிக்கி..அவளுக்கு நல்லசாவே வராது..உம் புருசனையாச்சும் பத்திரமா பாத்துக்கோடி ன்னு சூசகமா சொல்லிட்டா...

என் பொண்டாட்டியும் அதையே மனசுல வச்சுகிட்டு ஏங்க சத்தியமா என்னை தவிர நீங்க யாருகிட்டயும் போகமாட்டீங்களேன்னு அழுதா..எதுவுமே தெரியாத மாதிரி ஏம்மா திடீர்னு இந்த மாதிரி கேக்குறன்னு நான் கேக்க பிரியா சண்டாளி ஊர் மேயறாளேமேன்னு அவளை திட்டுறா..

சத்தியாமா உன்னை தவிர ஒருத்தியவும் தொடமாட்டேன்..அவ அப்படி திரிஞ்சா உம்புருசனை நீ நம்பமாட்டியான்னு பொறந்த குழந்தை மேல சத்தியம் பண்ணிட்டு மனசாட்சியே இல்லாம படுத்துட்டேன்..
இப்பவும் என் பாழாபோன மனசு பிரியாவை தான் கேக்குது...சே என்னால தான் அந்த பொன்னுக்கு இப்படி ஒரு பட்டம்ன்னு நொந்துகிட்டாலும் இனிமே எப்படி பிரியாவை பாக்குறதுன்னு மனசுக்குள்ள திட்டம் ஓடிட்டிருக்கு...

நீங்க சொல்லுங்க நான் நல்லவனா ? கெட்டவனா?

4 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

ச.பிரேம்குமார் said...

அருமை தணிகை :)

தணிகை said...

நன்றி தலைவா!!!

தணிகை said...

நன்றி தலைவா!!!

cheena (சீனா) said...

அன்பின் தணிகை

இங்கு ஒரு வலைப்பூ இருக்கிறதா - நன்று நன்று - நல்வாழ்த்துகள்