CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, June 27, 2008

டைமிங் கிராஸ்

என்னடா வாழ்க்கை இது? எப்பபாத்தாலும் வேலைக்கு போ வேலைக்கு போன்னு உயிரெடுக்கிறாரு அப்பா..வேலை கொடுத்தா நான் என்ன போக மாட்டேன்னா சொன்னேன்..நல்லா தான் படிச்சேன்..பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி பைலை தூக்கிட்டு அலைஞ்சா போன மூனு கம்பெனிக்கே வாழ்க்கை வெறுத்துட்டு
படிச்சப்ப வாங்கி கொடுத்த சைக்கிளெடுத்துகிட்டு சைட்டடிக்க பஸ்ஸ்டாண்டு பக்கமா மணி நாலாச்சுன்னா
போயிடறது தாங்க நம்ம வாழ்க்கை..

என்னடா புலம்பிட்டே போறான்னே யாரு இவன் பேரு என்னன்னு யோசிக்கறீங்களா? பேரு சிவாவே தான். மூனு வருசமா வேலை தேடுற வேலைய விட்டுட்டு இங்க பஸ்ஸ்டாண்டுல தான் ஆட்டோ காரனுங்களை பிரண்டா பிடிச்சுகிட்டு போற வர குஜிலிங்களையெல்லாம் லேசா கலாய்ச்சுகிட்டு இருந்தாலும் இது வரைக்கும் ஒன்னுமே மடியல..சரி இன்னைக்கு கொஞ்சம் மெருகேத்திகிட்டு போலாம்னு யோசனை..

மணி மூனாச்சு..எழுந்து பாத்ரூம் போனவன் அரைமணிநேரம் குளிச்சுட்டு வெளிய வந்தா இவரு பாக்கற வேலைக்கு இது ஒன்னும் குறைச்சலில்லன்னு அம்மா கத்திட்டே இருந்துச்சு..அடிக்கிற காத்தோட காத்தா அம்மாவோட பேச்சையும் துரத்திவிட்டு மேக்கப் போட ஆரம்பிச்சு 3.50 ஆயிடுச்சு..இப்பவே கிளம்பினாதான் பஸ்ஸ்டாண்டுக்கு போகமுடியும்னு சைக்கிள் எடுத்துட்டு கிளம்பி போயிட்டேன்.

இந்த ஆட்டோகாரனுங்க கூட உக்காந்தா தான் ஒரு சப்பை பிகரு நம்மளை பாக்கலை சைக்கிள்லேயே இருந்து சைட் அடிப்போம்னு தள்ளியே நின்னுட்டேன்..ப்பா புதுசா ஒரு பொண்ணு ..இன்னைக்கு தான் பாக்குறேன்.இவ்ளோ அழகா நம்ம ஏரியாவிலயா..எப்படீயாச்சும் பிட்ட போட்டுடனும்டா ன்னு என் மனசு சைக்கிளை உந்த ஹாய் பிரியான்னு ஒருத்தன் நல்லா அழகா பைக்கை கொண்டாந்து நிப்பாட்டி ஏத்திட்டு போயிட்டான்..

இப்ப தான் எனக்கு புரிஞ்சது காலத்தோட வேகம்..அதே வேகத்தோட வீட்டுக்கு போய் தூக்கி போட்ட சர்டிபிகேட் பைலை தேடதொடங்கினேன்..

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: