CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, June 21, 2008

உண்மைகாத‌ல்-மீள்பார்வை

உண்மைகாதலொன்றுக்கு
உதாரணம் கேட்டார்கள்.
உன்னுடனான என்காதலையே
மீள்பதிவாக்குகிறேன்..

அடிகள்ளி!!!
முதன்முதலாய்
எப்படியடி என்னுள்
நுழைந்தாய் நீ!

எதிர்பாராத தருணமொன்றில்
எனக்கானவளாய்
என்னெதிரே நின்ற‌
முதல்கணத்திலே
முடிவாக்கினேனே!

வாழ்ந்தால் அது
வஞ்சி உன்னுடன்
தானென்று!!

அன்றிரவு முதல்
இமைகளிலெல்லாம்
இனிமைகனவுகளாய்
இனியவள் நீ மட்டும் தான்!

கனவுகாண்!முயற்சிசெய்
கலாமின் வார்ப்புகள்
காதலில் பிரயோகிக்கிறேன்!

முயற்சியின் பால்
முடிவும் கிடைத்தது.
நீ என் காதலியென்று!!

கனவில் கைகோர்த்த‌
கடற்கரைகள் இன்றுநம்
கால்தடங்களை பதிக்கிறது..

எந்தலை வலிக்காக நீயும்
உன் காய்ச்சலுக்காக நானும்
வலிகண்ட அழுகைகளும்

தோல்விக‌ளுக்கான
தேற்றுத‌ல்க‌ளும்
வெற்றிக‌ளுக‌ளுக்கான‌
வாழ்த்துக‌ளும்

ப‌றிமாற‌லாய்
அர‌ங்கேறிய‌ க‌ண‌ங்க‌ள்
என் வாழ்வின்
விமோட்ச‌ன‌ங்க‌ளென்று
இருவ‌ரும் சொல்லிகொண்டோமே!!

அப்பப்பா!!
எத்துணை அழ‌கான‌
நினைவுக‌ள் அத்த‌னையும்
நினைத்து நினைத்து
சிரித்திருப்போமே!!

நான் எதையாவ‌து
சொல்ல‌ சின்ன‌குழ‌ந்தையாய்
சினுங்கிகொண்டு
பேச‌மாட்டேனென‌
சொல்லிவிட்டு

அடுத்த‌ ஐந்துநிமிட‌ங்க‌ள்
ந‌ம‌க்குள் அழைப்புக‌ள்
அர‌ங்கேறுமே
அப்ப‌டிதான‌டி
இந்த‌முறையும் செய்வாய்
என‌ இருந்தேன்.

ஆறுமாத‌ம் க‌ழித்த‌ உன்
அழைப்பில் வ‌லியோடே
நான் க‌ண்ட‌ சுக‌த்தை
அப்போதே
அடித்துநொறுக்கினாயே உன்
திரும‌ண‌சேதி சொல்லி

பிரேத‌மாக‌வே பேசிமுடித்தேன்
நாளை நாம்
வ‌ழ‌க்க‌மாக‌ ச‌ந்திக்கும் இட‌த்திலே
ச‌ந்திப்போம் என‌!!

செக்க‌செவேலென‌ நிற‌ம்
சென்னைக்கு ப‌க்க‌த்தில்
ஆறு ஏக்க‌ர் நில‌ம்
நிச்ச‌ய‌த்துக்கே இருப‌தாயிர‌ம்
ரூபாயில் ப‌ட்டுபுட‌வை என‌


நான் ந‌க‌ர்ந்துவிட்டாதாகஎண்ணி
உன்தோழியிட‌ம்நீ பித‌ற்றிய‌
பெருமைக‌ள்சொல்லிசென்ற‌து..

வ‌ர‌வ‌ழைத்த‌ க‌ண்ணீரோடு
வ‌ற்புறுத்தினார்க‌ள்
ம‌றுக்க‌முடியா சூழ்நிலை என‌
ம‌ன‌ங்கூசாம‌ல் நீ சொன்ன பொய்களை!!!


இப்போதாவ‌து சொல்வாயா
உன்னுட‌னான‌ என் காத‌லும்
ப‌ண‌ம்மீதான‌ உன் காத‌லும்
உண்மைதானென்று..

2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

கோகுலன் said...

//இப்போதாவ‌து சொல்வாயா
உன்னுட‌னான‌ என் காத‌லும்
ப‌ண‌ம்மீதான‌ உன் காத‌லும்
உண்மைதானென்று..//

அன்பு நண்பா, நல்லாருக்கு கவிதை..

என் இதயத்திற்கும் தெரியும் காதலின் வலி..

ஏன் தான் உண்மையான அன்பை உணராமல் இவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்களோ?

தணிகை said...

அன்பு நண்பா, நல்லாருக்கு கவிதை..
//

நன்றி கோகுலன்