*இன்று
என்னவளுக்கும்
எவனோ ஒருவனுக்கும்
நிச்சயதார்தமாம்
*இன்னுமொரு
பெரிய திருப்பம்
என் வாழ்வில்.
*இழந்தது போதவில்லை
போலும்
பிரிந்துவிட்டாள்
அவளும்
*குமுறுகிறது மனம்
அழுகிறது மனக்கண்கள் -மூட
மறுக்கிறது நிஜக்கண்கள்
*கனவிலே நினைவாகி
நின்றவள்
நிஜத்திலே கனவாகிப்
போனாள்
*கண்களில் காதலாய்
வந்தவள்
கண்ணீரில் கரையவிட்டுப்
போனாள்
*பவுர்ணமி என்று வர்ணித்தேன்
அவளை- நிலவு தேய்ந்து விடும்
என்பதை
மறந்து - ஆம்
மறைந்துவிட்டாள்
*எத்தனை
இன்னல் வந்தாலும்
இணைவோம் என்றாள்.
இணந்துவிட்டது இன்னல்
என்னோடு
இணைந்துவிட்டாள் அவள்
இன்னொருவனோடு
*அவன் எழுதியது நடக்கும்
என்றாள் அன்றே
அவள் அறியாமல் போனால்
தவறில்லை
அவள் மனம் மாறுமென்று
அறியாளோ?
அறிந்தும் கூறாமல் போனதன்
காரணமென்னவோ.
*மாற்றான் கண்பட்டது போலும்
என் வாழ்வில்
மாறியது அவள்
மனம் சட்டென்று
*மாற்றத்தால் அவளறியாள்
என் இன்னலை
மாற்றம் கண்டுதான்
எனக்கும் புரியலை
*காலத்தை காரணம்
காட்டுகிறாள் அவள்
கடந்துவிட்ட வாய்ப்பை
தேடுகிறேன் நான்
*தாய் தந்தை கஸ்டம்
என்கிறாள் அவள்
என்னித்தனைக்கால நஸ்டம்
புரியவில்லை அவளுக்கு
*இன்னலை தேடிப்போனேன்
நானே -இனியவளே என்று
இன்னமும் ஆறலையடி மனது
வடுவாகிப்போனதடி உன் நினைவு
*கால் போனதிசை போகிறது
உடல்
மனம் போனதிசை போகிறது
உயிர்
*உயிரெங்கே தேடினால்
உனதருகே
நீ எங்கே தேடினால்
அவனருகே
*நினைக்க மறுக்குதடி மனமும்
சகிக்க முடியலையடி அதையும்
இறக்க நினைக்குதடி உயிரும்
மறக்க சொல்லுதடி நண்பர் கூட்டம்
*அவரும் அறிவார் காதல்வலி
ஆயினும் தருவார் ஆறுதல்
*இதயத்தில் உன்னை சுமந்ததால்
நானும் ஆனேன் தாயாய்
நீயும் ஆனாய் தாரமாய்
அவனுக்கு
வலிக்குதடி
எனக்கு
*நானும் சுமக்கிறேன்
குழந்தையாய் உன்னை
நீயும் சுமப்பாய்
குழந்தையாய் அவன் வித்தை
நெஞ்சம் கூசுதடி நினைத்தால்
தூக்கமும் வரலையடி படுத்தால்
*இன்பம் போல் தெரிந்து
துன்பம் மட்டும் தந்தவளே
இனியாவது இன்பம்
தருவாய் அவனுக்கு
*உன் மனம் ஒரு
குரங்கு
தயவு செய்து
இரங்கு
என்
ஆணினம் பாவம்
ஆக்கிடாதே சவம்
*தவமிருந்தேன் வரமாய்
உன்னை பெற
கடவுள்தான் இல்லையடி
வரம் தர
*வெளியே சிரிக்கிறேன்
உள்ளே அழுகிறேன்
நானும் ஆனேன் என்னவோ
*என்
பிறை நிலவே
குறை தவமே
அறை மனமே
அகல் விளக்கே
பகல் கனவே
நகல் பொருளே
மொத்தத்தில்
நிரந்தரமில்லாதவள்
நீ
நிலைகுலைந்து போனேன்
நான்.
*சிந்தும் தூரலில்
சிறகடித்து வந்தாள்
- காண கண்கோடி தேவை என்றேன்
கொட்டும் மழையில்
நொறுங்கடித்து போனாள்
- நிற்க தெருக்கோடி கிடைத்தது தான்
அழகு
கோடியை கொடுத்தவன்
கேட்டதை கொடுக்கலையே
*அழகு
ஆபத்து என்றான்
அன்றே கவின்ஞன்
அப்போது கண்டித்தேன் நான் அவனை
இப்போது துண்டித்தாள் இவள் என்னை
*அலசியதில் புரிந்தது
அழிவு தான்
அழகு என்று.....................
Monday, April 30, 2007
01-06-06
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:04 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Sunday, April 29, 2007
வரம்.
* என்னவளே
நான் இதுவரையில்
காணாத பெளர்ணமி
உன் முகம்
*நான் என்றுமே
காணாத ஈர்ப்பு
உன் விழி
*நான் உன்னிடம்
பெறாத வரம்
உன் காதல்..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:58 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வேண்டுகோள்.
ஓ! பிரம்மனே
செய்வன திருந்த செய்
என்னவளுக்கு
இதயம் இல்லை
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:57 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
காதலை வாழவைப்போம்...
*உலகமே வியக்குமினிய காதலை
நாம் வாழ்ந்து கொண்டே
வாழவைப்போம்
*உடல்களின் தேடல்கள் அல்ல- காதல்
இரு உள்ளங்களின் சேரல்
என்பதை உணர்த்துவோம்
*முத்தங்களின் பரிமாற்றமல்ல-காதல்
இரு இதயங்களின் இடமாற்றம்
என்பதை இயற்றுவோம்
*கட்டிப்பிடிப்பதில் இல்லை - காதல்
மனம் விட்டுக்கொடுப்பதில் உண்டு
என்பதை கற்பிப்போம்.
*தற்கொலை செய்வதை ஒழித்து
தன்னம்பிக்கை வளர்ப்போம்.
*எதிர்ப்புகளை
ஏணியாக்குவோம்
*ஆம் அன்பே
உலகமே வியக்கும் இனிய காதலை
நாம் வாழ்ந்து கொண்டே
வாழவைப்போம்..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:46 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
காதலை சொல்லி........ காத்திருக்கிறேன்..........
. இனியவளே
உன்னிடம் உதிர்த்த
ஓரிரு வார்த்தைகளுக்கு
என் மனம்
எத்தனை ஒத்திகை
பார்த்திருக்கும்..
.அவற்றை எல்லாம்
போற்றி
பாதுகாக்குமே
என் சிந்தை
.நீரின்றி மீன்களா?
அன்பே
உன் நினைவுகளின்றி
என் கவிதைகளா?
.வடிவமின்றி
நிழல்களா?
.ஆம் அன்பே
இந்த நிழலுக்கு
வடிவம் கொடுக்க
நீ உதிர்க்கும்
வார்த்தைகளுக்கு
காத்திருக்கிறேன்....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:37 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
Saturday, April 28, 2007
காதல் சொல்ல வந்தேன்.....
என்னவளே!
நான்
கண்களை திறந்து
வைக்கையில் -நீ
காட்சிகளாய் வந்து
போகிறாய்.........
நான்
கவிதைகளை எழுதி
வைக்கையில் -நீ
மொழிகளாய் தோன்றி
மறைகிறாய்........
நான்
நித்திரையை தழுவி
இருக்கையில் -நீ
கனவுகளாய் தோன்றி
மறைகிறாய்.......
நான்
தனிமையில் நின்று
தவிக்கையில் -நீ
நினைவுகளாய் நெஞ்சை
நிறைகிறாய்...........
- ஆனால்
நான்
காதல் சொல்ல வந்தால்
மட்டும் - ஏன் அன்பே
காட்சிகளை மறைத்து
மொழிகளை மறநந்து
கனவுகளை கலைத்து
நினைவுகளை நீக்கி
மவுனத்தை மட்டும்
எனக்கு
பரிசளிக்கிறாய்......................
தணிகை
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:39 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
நான் ரசித்தவை
நீ வாழ்வதற்கு பிறந்தவன் வீழ்வதற்கல்ல
யாரது மெளனமாய்
ஏனடா விழிகள் நீருடன்
என்ன!
தோல்வியால் தோய்ந்து போனாயா
கலங்காதே வீரனே!
விழிநீர் துடைத்து
நெஞ்சினை நிமிர்த்து
நீ வாழ்வதற்கு
பிறந்தவன்
வீழ்வதற்கல்ல
உன் அகத்தீயினை
அனைக்க வேண்டாம்
தோல்விக்கு கொல்லியிட
தேவைப்படும் நமக்கு.
உன்னை சுற்றி
புறம் சொன்னோர்நெற்றி
நிலம் காணவைப்போம் வா!
வெற்றியின் விலாசம்
வேண்டாம் இனி உனக்கு
வெற்றி உன்னை தேடட்டும்
அதுதான் என் கணக்கு
புலம்பலை விடுத்து-லட்சியத்தை
புருவத்தின் இடை நிறுத்து
தோல்வி ஓர் கோழையடா!
தோற்றுப்போகும் உன்னிடத்தில்
ஆத்திரமும் அவசரமும்
தோல்வியின் ஒற்றர்கள்
அவர்கள் இனி நமக்கெதற்கு?
கடந்ததை சிதறடித்து
கவனத்தை முன் நிறுத்து
ஆதவன் இனி உனக்கு
அஸ்தமிக்க போவதில்லை!
சாதனை புரியும் வரை-நீ
சாகவும்போவதில்லை
சுறுசுறுப்பு சுடர் ஏற்றி
சோம்பலை சாம்பலாக்கு
திட்டமிடு பக்குவமாய்
திருத்திக்கொள் தவறுகளை
உன்னை விடு என்னை விடு-உன்
உழைப்பிற்க்கு முதன்மை கொடு
உழைப்பென்னும் வாளெடுத்து
முயற்சிப்பாதையில்
நம்பிக்கை குதிரை ஏறி
உலகை வெல்வோம் வா!
வெற்றி நமதே!
--யாழ் பிரபு
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 2:39 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..

