CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, September 26, 2007

கல்லறை என் பார்வையில்

நெஞ்சம் முழுக்க

நிம்மதியுடன்

நிறைவான தூக்கம் இங்கே...

கண்கள் நிறைய

கனவுகள்

கருகிகிடக்கும் இங்கே...

சேராத காதல்கள்

சேர்ந்துவிடும் இங்கே...

சாதனையாளனும்

சதிகாரனும்

சங்கமாமிங்கே...

சாதனைகளின் முற்றுப்புள்ளி

சரித்திரங்கள் கற்கும் பள்ளி...

ஆம்

கற்றுக்கொடுக்காமல்

அனைவரும்

கற்கும்

கல்வி......இந்த

கல்லறை....

(அழியாத கவிபடைக்க ஆசைகொண்டே நினைவில் கொண்டு வந்தேன்...அழியும் மனிதவாழ்வை..அழியாத கல்லறையை)

Tuesday, September 25, 2007

என் பார்வையில் இயற்கை

மழை

மேக ஒற்றுமையில்

காற்றின் ஒற்றடம்

மழை....

காற்று

ஒட்டுமொத்த மரத்தின்

ஒட்டார சினுங்கல்

காற்று....

வானம்

அழகிய அண்டத்தின்

அழியாத

அதிசயப் போர்வை

வானம்....

சூரியன்

சுறுசுறுப்புக்கு எடுத்துகாட்டாய்

சுற்றி வரும்

நெருப்புக்கோளம்

சூரியன்....

நிலவு

நெருப்பின் நிழலாய்

நெஞ்செங்கும் அழகாய்

கனவெல்லாம்

உலாவரும்

சூரியனின் பிரதிபலிப்பு

நிலா........


(அழியாதகவி படைக்க ஆசைகொண்டு அழகான அழியாத அதிசய இயற்கை என் பார்வையில்

எடுத்துவந்தேன்...தொடரும்)

Saturday, September 22, 2007

உண்மைகள் பல விதம்

நான் அவளை பார்த்தது உண்மை

அவள் சிரித்ததும் உண்மை

நான் காதல் சொன்னது உண்மை

அவள் ஏத்துகிட்டதும் உண்மை

நான் திருமணம் செய்யநினைத்தது உண்மை

அவள் வேறொருவனை மணம் செய்தது உண்மை

என் மனம் இறந்தது உண்மை

அந்த கிளி பறந்ததும் உண்மை

தோழியவள் வந்ததும் உண்மை

தைரியமவள் தந்ததும் உண்மை

நான் அவளை மறுத்தது உண்மை

நான் இன்னும் சிறந்தது உண்மை

சமூகம் நோக்கி பார்த்ததும் உண்மை

சதி கண்டு வேர்த்ததும் உண்மை

பசிகொண்ட வாழ்க்கை உண்மை

பழம் கொண்ட உணவு உண்மை

ஆறுநாளைக்கு அரைவேளை கஞ்சி உண்மை

ஒரு வேளைக்கு நூறு டாலர் உணவு உண்மை

பார்வையாளன் பணக்காரன் ஆவது உண்மை

வேர்வைசிந்துபவன் கூலிக்காரனாய் இருப்பதுண்மை

வசதிகொண்ட வாழ்வும் உண்மை

வலிகொண்ட ஏழை உண்மை

மரணமும் உண்மை

ஜனனமும் உண்மை

காலம் இருப்பது உண்மை

கருப்பன் ஜெயிப்பது உண்மை

காக்கிற கடவுள் உண்மை

அழிக்கிற காலன் உண்மை

இதிலெல்லாம் எது உண்மை

இதில் எதுவெல்லாம் ஏற்பாடு

இதை அறிவது உங்கள் பாடு

நான் எழுதியது இந்தஏடு

உயர்வை தேட உண்மையை நாடு

உடனே உயரும் உன் நாடு

உண்மை சொல்ல வந்தேனுங்க

தண்மையான வார்த்தை கொண்டு

வெண்மையான உள்ளங்கொண்டு

வன்மை எதிர்த்து போராடு

நன்மைவரும் உன்னோடு

Thursday, September 20, 2007

ஒரு ஏழைப்பெண்ணின் அறைகூவல்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்

நல்லதே செய்வோம்-உங்கள்

ஓலைவீடுகள்

ஒளிமயமாகும் என்றீர்கள்- ஆனால் உங்கள்

ஓட்டுச்சண்டைக்கு எங்கள்

ஓட்டைவீடுகளுக்கு

அள்ளிக்கொடுப்போம் என்று

கொள்ளிவைத்து விட்டீர்களே

எங்கள் வீட்டு

அடுப்பெரிய தானே வழிகேட்டோம்

இடுப்புகுழந்தையை எரித்தீரே..

உம்முடைய சதிக்கு எமக்கு

நிவாரணநிதி எதற்கு

கட்சிக்காக

தட்சணை கூட வாங்காமல்

உழைத்த என் கணவனுக்கு

குவாட்டர் வாங்கிகொடுத்து

குடிகாரனாக்கி விட்டீர்.

ஆயினும் அவன் செய்த

குறும்பால்

குழந்தை ஒருவன் வளர்கிறான்

வளர்க்கிறேன் அவனை

வல்லவனாக.உம்

வலிமையை

வலுவிழக்கச்செய்து

வாரிசுகளை வதைத்தெடுப்பான்

Wednesday, September 19, 2007

என் தோழி.

குறிக்கோளுடன் பயணித்தவன்

குரங்குமனக் காதலியால்

கிறங்கடிக்கப் பட்ட போது

மரணத்தின் வாசல் சென்றவனை

கரம் பிடித்து

காரணம் கேட்டவள் என்னிடம்

நிவாரணமாய் பேசினவள்-நீ

சந்திக்க உறவுகள் உண்டு

சிந்திக்க உரிமைகள் உண்டு என என்

சிந்தனைக்கு உணர்த்தியவள்..

ஆரோக்கியம் பேணுபவள்

அன்னை என்றால்

அவளும் என் அன்னை.


அறிவுரை தருபவர்

அப்பா என்றால்

அவள் தான் என் அப்பா

அறிவு புகட்டுவார்

ஆசானென்றால்

அவள் என் ஆசான்

காப்பது தெய்வமென்றால்

அவளன்றோ தெய்வம்.

தோழியால் மட்டுமே

அனைத்துமாய்

தோன்ற முடியும்....

Tuesday, September 18, 2007

மரணமே உன்னை மறுதலிக்கிறேன்

மரணமே உன்னை

மறுதலிக்கிறேன்

மங்கிய என் வழ்வில்

மங்காத ஒளி போல்

மங்கையவள் நுழைந்ததும்

மகிழ்ச்சியில் நான்- அவள் என்

மணவாட்டியானாலும்

மரணமே உன்னை

மறுதலிக்கிறேன்...

என்

கண்ணகி அவளோடு

கள்ளமில்லா காதலோடு

கட்டிலின்பம் துய்த்து

கருவறைசிசு தரித்து

கண்ணன் அவன் பிறந்தாலும்

காலனே உன்னை

மறுதலிக்கிறேன்.

கைக்குழந்தை அவன்

கரம் பிடித்து

கால்நடை பழகி

கல்லூரி முடித்ததும் என்

கண்ணனுக்கோர் ராதையை

கரத்தினுள் கொடுத்தாலும்

மரணமே உன்னை

மறுதலிக்கிறேன்.

என்

பதுமையவள்

பல்லிழந்து முதுமையாய்

படுக்கையில் கிடந்தாலும்

பலமிழக்காத காதலோடு

பத்தினியவள் சுமங்கலியாய்

உன்னடி சேரும் போது

மரணமே என்னை

உனக்கு

விருந்தளிக்கிறேன்....

Friday, September 14, 2007

என் அழகிக்கு சமர்ப்பணம்