மரணமே உன்னை
மறுதலிக்கிறேன்
மங்கிய என் வழ்வில்
மங்காத ஒளி போல்
மங்கையவள் நுழைந்ததும்
மகிழ்ச்சியில் நான்- அவள் என்
மணவாட்டியானாலும்
மரணமே உன்னை
மறுதலிக்கிறேன்...
என்
கண்ணகி அவளோடு
கள்ளமில்லா காதலோடு
கட்டிலின்பம் துய்த்து
கருவறைசிசு தரித்து
கண்ணன் அவன் பிறந்தாலும்
காலனே உன்னை
மறுதலிக்கிறேன்.
கைக்குழந்தை அவன்
கரம் பிடித்து
கால்நடை பழகி
கல்லூரி முடித்ததும் என்
கண்ணனுக்கோர் ராதையை
கரத்தினுள் கொடுத்தாலும்
மரணமே உன்னை
மறுதலிக்கிறேன்.
என்
பதுமையவள்
பல்லிழந்து முதுமையாய்
படுக்கையில் கிடந்தாலும்
பலமிழக்காத காதலோடு
பத்தினியவள் சுமங்கலியாய்
உன்னடி சேரும் போது
மரணமே என்னை
உனக்கு
விருந்தளிக்கிறேன்....
Tuesday, September 18, 2007
மரணமே உன்னை மறுதலிக்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Complete life in one single poem. It is good.
Post a Comment