சிறுபிள்ளையாய் திரிந்து
குறும்புகள் பல செய்து
ஐந்து வயது முதல்
ஆரம்பமானது பள்ளி வாழ்க்கை
அன்னைதந்தை என்னை
வெளி உலகோடு முடிச்சு
போட்டார்கள் அன்றுமுதல்.
முடிச்சுகள் தொடர்ந்தே
பள்ளி முடிந்து கல்லூரிக்குள்
கல்வியோடு சேர்த்து
காதலாய் அடுத்த முடிச்சு.
அவளுடன் பழகிகொண்டே
இன்பகனவுக்குள் கோட்டை
கட்டியே நானும் செல்ல
உயிரையும் எனக்காய் தரும்
எனக்காய் எதையும் செய்யும்
நண்பர் கூட்டம் இன்னும்
அதிகமான பிணைப்போடு
கூடிய அடுத்த முடிச்சுகளாய்
சந்தோசமான நிகழ்வுகள்
அத்தனையுமே நட்பு
காதல் என எனை மாறி மாறி
மகிழ்வித்த வேளையிலே
மனமொடிக்கும் நிகழ்வொன்று
பிரிவென்னும் வலி முடிச்சு.
அடுத்த சில வருடங்கள்
வேலைதேடி பயணித்து
பயணத்தின் முடிவில்
நல்லதொரு வேலை
வாழ்வின் ஆணித்தரமான முடிச்சு
இம்முடிச்சுகளின் அழகிய
குழந்தையாய் வசதி வாய்ப்புகள்
பெருக ஆசை கொண்டவளையே
அரசியாக்கினேன் முடிச்சுகள் போட்டு
எம் அரண்மனைக்கு..
அழகான குழந்தைகள்
அவர்களுக்காய் உழைப்பு
நடுவிலே கொஞ்சம் ஓய்வு
நானும் வாழ்ந்தேன்
நல்ல கணவனாய் மட்டுமல்ல
தந்தை என்னும் முடிச்சோடு
தன்னம்பிக்கையோடு வாழ்ந்தேன்
தன்னம்பிக்கை முடிச்சின்
தலைபிள்ளையாய் கடமைகள்
முடித்தேன் தந்தையாய்..
கட்டிலறை காதலி என்
கலியுக மனைவி அவளும்
காலன் கை பிடித்தே
சுமங்கலியாய் போன பின்னும்
இத்தனை முடிச்சுகள்
மனதில் கனமானாலும்
மறக்காத சுகமாகவே
அழிந்து போகும் மனிதனுக்குள்
அவிழாத முடிச்சுகள்..
முடிச்சுகள் தொடரும்..
Thursday, December 20, 2007
அவிழாத முடிச்சுகள்-1
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Post a Comment