சிவா ஒரு சிறந்த ஓட்டபந்தய வீரன்.அவன் இன்றுதான் இந்தியாவே எதிர்பார்க்கும் அளவிற்கு
ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்று பெருமை சேர்த்தான்.
அவனுக்குள் ஏகத்தும் மகிழ்ச்சி.அவனுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
ஓரெ பரப்பரப்புக்குள் அவன் மனம் அங்கில்லை.அவன் எதிர்பார்த்த பாராட்டு வரவில்லை.அவன் மனம்
ஏங்கி தவிக்க அனைவரும் பாராட்டி விட்டு சென்றனர்.தனிமை வேண்டி தன் வீட்டு தோட்டத்தில்
போய் இயற்கையை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்..
ஜல் ஜல் என கொலுசு சத்தம் அவன் காதுகளில் சங்கீதமாய் நுழைய அவன் காதலி ஜோதி
வந்து அருகில் நின்றாள்..சிவாவுக்கு ஒரே சந்தோசம்.என்ன செய்வதென்றே புரியாமல்
மேலுக்கும் கீழுக்கும் பறந்த அவன் மனதை கட்டுபடுத்தி கொண்டு ஹாய் சொல்லவே
சில நாழிகை ஆனது..
ஹாய் ஜோ உன்னை தான் நான் எதிர்பார்த்துகொண்டே இருந்தேன் தெரியுமா- சிவா
டேய் சிவா உன்னை எல்லாரும் இருக்கும் போது வந்து பார்த்தா மனம் விட்டு கூட பேசமுடியாதுடா
அதான் இப்ப வந்தேன் -ஜோ
சரி நீ எனக்கு என்ன பரிசு தரப்போற சீக்கிரம் சொல்லு- சிவா அவசரமாய்
நீ அடிக்கடி கேட்பியேடா முத்தம்.அது தாண்டா.முதல் முத்தமே உனக்கு இதழோடு சுவைக்க போறேண்டா
என்று அவள் பார்த்த பார்வையே சிவாவை ஏதோ செய்து விட்டது
சிவா எனக்கு என்னவோ பயம்.நான் கண்ணை மூடிக்கிறேண்டி என்று கண்ணை மூடிக்கொண்டான்..
ஜோதி அவன் கன்னத்தில் இரு புறமும் கையை வைத்து அவனை முன்னுக்கு இழுத்து
அருகில் வரும் போது அவ்ளின் மூச்சு காற்று பட்ட இன்பம் சிவா திக்கு முக்காடி இன்னும் ஆவலாய்
ஜோதி இன்னும் நெருக்கமாய் வந்தாள்..
டேய் தண்ட சோறு.படிச்சு நாலு வருசமா ஊர சுத்துற மணி பத்தாச்சு.எழுந்து அந்த சோறு கூட சாப்பிடமுடியாதோ துரைக்கு..இவரை எழுப்பி போடணுமோ..என்று தூக்கத்தில் இருந்த சிவாவை
புரட்டினாள்..
சிவா எழுந்திருக்கவே இல்லை.அருகில் இருந்த விஷபாட்டில் சிவாவை இரவோடு இரவாக எப்போதோ
அழைத்து சென்றிருந்தது..
அவ்வளவு தான் சிவாவின் அம்மா கதறல் ஊரையே கூட்டிவிட்டது.என்னை மட்டும் எழுப்பாமல் இருக்குமா
என்ன? நானும் எழுந்து விட்டேன் தூக்கத்தில் இருந்து
கனவு கலைந்து ஒரு நிமிட அமைதிக்கு பிறகு மீண்டும் அசந்து தூங்கிவிட்டேன்..
கனவுகள் தொடரும்
Friday, December 14, 2007
கனவுக்குள் நினைவு
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Post a Comment