CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, February 19, 2008

டாஸ்மாக்.

கவலை கொண்ட நெஞ்சோடு
காலையிலே நடை பயணம்
ஆரம்பித்த சில நேரத்தில்

சாலையோர மாளிகையில்
சலசலக்கும் கூட்டமொன்று
சந்தினுள் நுழைந்து பார்த்தால்

வண்ண வண்ண புடவைகட்டி
வகைவகையாய் பெண்களங்கே
வரிசையாய் நிற்கின்றனர்.
விசாரித்து பார்த்தால் சுயம்வரம்
நடக்கிறது என்றார்கள்.

காசுகொடுத்துவாங்கி செல்லலாமாம்
எந்த பெண்ணையும் விலைபட்டியலோடு
பெயரும் பதிக்கபட்ட பலகையும் அருகில்

கவலைதீர சாலையோர மாளிகையில்
கல்யாணம் செய்து கொள் -கேட்டது
நண்பனின் குரலொன்று

சுயம்வர மோதலில் முட்டிமோதி
காசுகொடுத்து கட்டிகொண்டேன்
கட்டழகி ஒருத்தியை..

அங்கேயே ஒரு அறிவிப்புபலகை
அனுமதிபெற்ற அறையொன்று
முதலிரவு நடத்தவாம்..

உள்ளே சென்றேன் சென்றவுடனே
விசாரிப்புகள் ஆரம்பித்தன
இனிப்பா காரமா என???

காரத்தின் துணைகொண்டு
கற்பழித்து முடிக்கிறேன்
காசுகொடுத்து வாங்கியவளை..

கற்பழிந்த சோகத்தில் அவளும்
கற்பழித்த சோர்வில் நானும்
மயங்கியே சாய்கிறோம்..

மயக்கம் கொண்ட நெஞ்சிலே
கவலையோடு கண்ணீருமே
வெளிவருகின்றது..

போவோர் வருவோருக்கெல்லாம்
போதனை செய்ய அவர்களோ
எட்டி உதைத்து போகிறார்கள்..

சிலநேர மயக்கத்தின் தெளிவின்
பின்னால் மீண்டும் புறப்படுகிறேன்
சுயம்வர மாளிகைக்கு..

காசு கொடுத்தால் போதுமாமே
எத்தனை பேரையும் கூட்டி
கொடுக்குமாமே அரசின்

"டாஸ்மாக் விபச்சாரம்"

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: