CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, December 20, 2007

அவிழாத முடிச்சுகள்-2

ஓடி விளையாடி
சிட்டென பறந்து நானுமே
பட்டென பறக்கும்
பட்டாம் பூச்சியின்
வண்ணம் ரசித்து
அதை கையில் பிடித்து
என் அருகில் வைத்து
கொஞ்சிவிட ஆசை..

எல்லோரும் போல்
நானும் அனைவரையும்
கண்டே கரம் அசைத்தே
மலர்ந்த முகத்துடன் வரவேற்க
அளவில்லாத ஆசை..

அன்னை அவளின் முகம்
பார்த்து அவள் ஊட்டும்
நிலாச்சோறை நிலவை
பார்த்தே உண்ண ஆசை..

ஆசைகள் அத்தனையும்
அழகான முடிச்சுகளாய்.
ஆண்டவன் படைப்பிலே
குருடாய் பிறந்ததனால்
அறுவை சிகிச்சையாலும்
அவிழாத முடிச்சுகள்
என் ஆசை முடிச்சுகள்...

அவிழாத முடிச்சுகள்-1

சிறுபிள்ளையாய் திரிந்து
குறும்புகள் பல செய்து
ஐந்து வயது முதல்
ஆரம்பமானது பள்ளி வாழ்க்கை
அன்னைதந்தை என்னை
வெளி உலகோடு முடிச்சு
போட்டார்கள் அன்றுமுதல்.

முடிச்சுகள் தொடர்ந்தே
பள்ளி முடிந்து கல்லூரிக்குள்
கல்வியோடு சேர்த்து
காதலாய் அடுத்த முடிச்சு.

அவளுடன் பழகிகொண்டே
இன்பகனவுக்குள் கோட்டை
கட்டியே நானும் செல்ல
உயிரையும் எனக்காய் தரும்
எனக்காய் எதையும் செய்யும்
நண்பர் கூட்டம் இன்னும்
அதிகமான பிணைப்போடு
கூடிய அடுத்த முடிச்சுகளாய்

சந்தோசமான நிகழ்வுகள்
அத்தனையுமே நட்பு
காதல் என எனை மாறி மாறி
மகிழ்வித்த வேளையிலே
மனமொடிக்கும் நிகழ்வொன்று
பிரிவென்னும் வலி முடிச்சு.

அடுத்த சில வருடங்கள்
வேலைதேடி பயணித்து
பயணத்தின் முடிவில்
நல்லதொரு வேலை
வாழ்வின் ஆணித்தரமான முடிச்சு

இம்முடிச்சுகளின் அழகிய
குழந்தையாய் வசதி வாய்ப்புகள்
பெருக ஆசை கொண்டவளையே
அரசியாக்கினேன் முடிச்சுகள் போட்டு
எம் அரண்மனைக்கு..

அழகான குழந்தைகள்
அவர்களுக்காய் உழைப்பு
நடுவிலே கொஞ்சம் ஓய்வு
நானும் வாழ்ந்தேன்
நல்ல கணவனாய் மட்டுமல்ல
தந்தை என்னும் முடிச்சோடு
தன்னம்பிக்கையோடு வாழ்ந்தேன்

தன்னம்பிக்கை முடிச்சின்
தலைபிள்ளையாய் கடமைகள்
முடித்தேன் தந்தையாய்..
கட்டிலறை காதலி என்
கலியுக மனைவி அவளும்
காலன் கை பிடித்தே
சுமங்கலியாய் போன பின்னும்

இத்தனை முடிச்சுகள்
மனதில் கனமானாலும்
மறக்காத சுகமாகவே
அழிந்து போகும் மனிதனுக்குள்
அவிழாத முடிச்சுகள்..

முடிச்சுகள் தொடரும்..

Wednesday, December 19, 2007

கனவே கலையாதே-2

சலவைசெய்த வெள்ளைதுணி
அளவான கால்சட்டை
அணிந்தே பள்ளிக்கு சென்றேன்
காலை ஆரம்பம் நண்பர்களுடனே
விளையாடி மகிழ்ந்தே மணி
அடித்த கணம் வரிசையில் நின்றே
கடவுள் வாழ்த்தோடு தேசிய கீதமும்
பாடிமுடித்தே வகுப்பறைக்குள்
ஆசிரியரின் பாடம் கற்றே
பள்ளி முதல் மாணவனாய்
பரிசு பெற மேடைக்கு சென்ற
நேரம்...

எட்டி உதைத்ததே
எஜமானனின் காலுமே
வேலை நேரத்தில் என்னடா
தூக்கம் என்று..
நிலைமைக்கு வந்தே கனவையும்
வேண்டினேன்
உன்னிலாவது நான் மாணவனாய்
இருந்துவிடுகிறேன்..
கனவே கலையாதே.

இக்கவி குழந்தைதொழிலாளருக்கு சமர்ப்பணம்

கனவே கலையாதே.

பள்ளிபருவமது முடிந்தே
கல்லூரிக்குள் காலடிவைத்த முதல்நாளே
கால்முளைத்த சிற்பமாய்
கரம்கொடுத்து பெயர்சொன்னாய்...

நட்பாய் ஆரம்பித்த பழக்கம்
புரிதலின் காரணமாய்
பேசிமுடித்தோம் நாம்
காதலர்களாய் இருப்போமென..

கல்லூரிமுடிந்தே கனவோடு
வெளியே வந்தோம்.
காலமும் வழிவிட்டது..
அதிக சம்பளம் அழகான வீடு
வசதி வாய்ப்புகள் எல்லாமே.
வந்தது .நீயுமே கரம்பிடித்தாய்
மனவியாய்..

இல்லறவாழ்க்கையில் அன்றுமுதல்
நல்லறவாழ்க்கையே வாழ்ந்தோம்
ஆசைகொன்னும் ஆஸ்திக்கொன்றுமாய்
உன்னைபோலவே செதுக்காத சிற்பங்களாய்
இரு குழந்தைகளும் நமக்கு..
இதுநாள்வரை ஒரு சின்ன ஊடலும்
இல்லாமல் சளிப்பில்லாத வாழ்க்கை.

புரிதலின் காரணமாய் நமக்குள் இருந்த
பகிர்தலும் பாசத்தோடு காதலும்
கலந்தே காலமும் கடந்ததே..
கட்டிலில் அருகில் படுத்திருந்த நீ
காலமும் வருமோ காதலோடே
இறப்பேனே என்று கவிதை சொல்லி
கொண்டிருந்த நேரம் காலன் உன்
கைபிடித்து அழைக்க மறுகையை
நாணும் பிடித்தே இருவருமாய்
சென்றோமே. இனிய சொர்கத்தினுள்.

அந்நேரம் தட்டி எழுப்பியதே
அம்மாவின் கரமொன்று.
அலுவலகத்து நேரமானதென்று..
கண்டதெல்லாம் கனவா என
என் நினைவை நொந்து கொண்டே
கனவுக்கு வேண்டுகோள் விடுத்தேன்
கனவே கலையாதே ...........

சுடும் நிலவு

இரத்தம் அதை பாலாக்கி
பசியில் எனக்கு
ஊட்டிவளர்த்த அன்னை..

நடைபழக என் விரல்பிடித்து
அழகாய் ரசித்தே
ஓட்டபந்தயத்தில்வெற்றி பெற்று
முதல்பரிசோடு வந்ததுவரை
அன்பாக தலை கோதி
அணைத்த அப்பா...

ஊர்சுற்றி திரிந்து
தாமதமாய் வந்தாலும்
ஓடிவந்து உபசரிக்கும்
செல்ல அக்கா...

இன்பமான சுகங்களும்
சோகமான வலிகளும்
என்னுள்ளே இருந்தாலும்
நான் சிரிக்கும் போது சிரித்தும்
எனக்காய் அழுதும்
எப்போதும் எனக்காய்
சிந்தித்த நண்பன்...

பார்த்த நாளிலிருந்து
பறவையாய் என் மனமெங்கும்
இன்பமாய் இருக்க‌
என்னுள்ளே எனக்காய்
வாழ்ந்த காதலி....

இத்த‌னை உற‌வுக‌ள் என‌க்காய்
இருந்த‌ போதிலும்ப‌ண‌ம்தேடி
அய‌ல்நாடு வ‌ந்த‌ போது
ப‌ண‌ம் த‌விர‌ பாச‌மும்கிட்டாத‌
பொழுதும்உட‌ல் ந‌ல‌மின்றி
கிட‌க்கும்பொழுதும்
உங்க‌ள் நினைவாலே
வாடி த‌விக்கும் நெஞ்ச‌த்தோடு
த‌னிமைக்காய் அம‌ர்ந்திருந்தேன்
நில‌வை பார்த்த‌வ‌ண்ண‌ம்...
நில‌வும் சுடுதே
என்நெஞ்ச‌மும் வாடுதே.........

Tuesday, December 18, 2007

நிலவில்லாத வானம்

அன்பாய் கைகோர்த்து நடந்த
அந்தி மாலைப்பொழுது
அவசரமாய் பணிமுடித்து
உனக்காய் காத்திருந்த
பேருந்து நிறுத்தம்

முதல்முறையாய் உன்னுடன்
சென்று வந்த மெரினாகடற்கரை
என் உடல் நனைத்து மனம் தொடும்
அதிசய அலைகள்

சின்னக்குழந்தையாய் நீ
விரும்பி தின்ற ஐஸ்கிரீம்
இயற்கையின் அழுகையாய்
வியக்கவைக்கும் மழையில்
நாமிருவரும் நனைந்தே சென்றது..

குலுங்கி குலுங்கி செல்லும்
பேருந்தின் கடைசி
ஜன்னலோர இருக்கையில் உன்னை
மடியில் கிடத்தி நான்..

பிறந்தநாள் பரிசாய் நீ
எனக்களித்த ஜோடிபுறா.
முதலாய் நான்வாங்கி தந்த
மணம்வீசும் மல்லிகை..

இவையெல்லாம்
இன்றும் நான் கடந்துகொண்டு
தான் இருக்கிறேன்..
நீ இல்லாமல் நினைவுகளை
மட்டும் சுமந்துகொண்டு
நிலவில்லாத வானமாய்.......

Friday, December 14, 2007

கனவுக்குள் நினைவு

சிவா ஒரு சிறந்த ஓட்டபந்தய வீரன்.அவன் இன்றுதான் இந்தியாவே எதிர்பார்க்கும் அளவிற்கு
ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்று பெருமை சேர்த்தான்.

அவனுக்குள் ஏகத்தும் மகிழ்ச்சி.அவனுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
ஓரெ பரப்பரப்புக்குள் அவன் மனம் அங்கில்லை.அவன் எதிர்பார்த்த பாராட்டு வரவில்லை.அவன் மனம்
ஏங்கி தவிக்க அனைவரும் பாராட்டி விட்டு சென்றனர்.தனிமை வேண்டி தன் வீட்டு தோட்டத்தில்
போய் இயற்கையை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்..

ஜல் ஜல் என கொலுசு சத்தம் அவன் காதுகளில் சங்கீதமாய் நுழைய அவன் காதலி ஜோதி
வந்து அருகில் நின்றாள்..சிவாவுக்கு ஒரே சந்தோசம்.என்ன செய்வதென்றே புரியாமல்
மேலுக்கும் கீழுக்கும் பறந்த அவன் மனதை கட்டுபடுத்தி கொண்டு ஹாய் சொல்லவே
சில நாழிகை ஆனது..

ஹாய் ஜோ உன்னை தான் நான் எதிர்பார்த்துகொண்டே இருந்தேன் தெரியுமா- சிவா

டேய் சிவா உன்னை எல்லாரும் இருக்கும் போது வந்து பார்த்தா மனம் விட்டு கூட பேசமுடியாதுடா
அதான் இப்ப வந்தேன் -ஜோ

சரி நீ எனக்கு என்ன பரிசு தரப்போற சீக்கிரம் சொல்லு- சிவா அவசரமாய்

நீ அடிக்கடி கேட்பியேடா முத்தம்.அது தாண்டா.முதல் முத்தமே உனக்கு இதழோடு சுவைக்க போறேண்டா
என்று அவள் பார்த்த பார்வையே சிவாவை ஏதோ செய்து விட்டது

சிவா எனக்கு என்னவோ பயம்.நான் கண்ணை மூடிக்கிறேண்டி என்று கண்ணை மூடிக்கொண்டான்..

ஜோதி அவன் கன்னத்தில் இரு புறமும் கையை வைத்து அவனை முன்னுக்கு இழுத்து
அருகில் வரும் போது அவ்ளின் மூச்சு காற்று பட்ட இன்பம் சிவா திக்கு முக்காடி இன்னும் ஆவலாய்

ஜோதி இன்னும் நெருக்கமாய் வந்தாள்..

டேய் தண்ட சோறு.படிச்சு நாலு வருசமா ஊர சுத்துற மணி பத்தாச்சு.எழுந்து அந்த சோறு கூட சாப்பிடமுடியாதோ துரைக்கு..இவரை எழுப்பி போடணுமோ..என்று தூக்கத்தில் இருந்த சிவாவை
புரட்டினாள்..

சிவா எழுந்திருக்கவே இல்லை.அருகில் இருந்த விஷபாட்டில் சிவாவை இரவோடு இரவாக எப்போதோ
அழைத்து சென்றிருந்தது..


அவ்வளவு தான் சிவாவின் அம்மா கதறல் ஊரையே கூட்டிவிட்டது.என்னை மட்டும் எழுப்பாமல் இருக்குமா
என்ன? நானும் எழுந்து விட்டேன் தூக்கத்தில் இருந்து

கனவு கலைந்து ஒரு நிமிட அமைதிக்கு பிறகு மீண்டும் அசந்து தூங்கிவிட்டேன்..

கனவுகள் தொடரும்

நானும் அனிதாவும்-சிறுகதை

ஒரு நாள் நைட் 12 மணிக்கு வேலை முடிச்சுட்டு பைக்கில் பறந்து வீட்டுக்கு போய் கொண்டிருந்தேன்..
வீட்டுக்கு ஒரு மூண்ரு கிலோமீட்டர் தொலைவில் தான் நான் படித்த பள்ளி.அழகான மரங்களுடன் பூங்கா போன்ற அமைப்பு அந்த பக்கம் திரும்பி பார்க்கவைக்காமல் இருக்காது..அதே மாதிரி தான் இன்னைக்கும்
திரும்பி பார்த்தேன்..

அட என் தோழி அனிதா வெளிய வருகிறாள்..ஒரே ஆச்சர்யம்.இந்த ராத்திரி நேரத்தில் இவ இங்க என்ன பண்றான்னு..

ஹாய் அனி இங்க என்ன பண்ற இந்த நைட்ல..நான்

அட சும்மாடா எப்ப பாரு உங்ககூட விளையாடின ஞாபகம்.உங்களை வந்து பார்க்க முடியலை.அதான் இங்க வந்தேன்..அனி

ஆமாம் நம்ம பார்த்து ஏழு வருசம் ஆயிடுச்சு இல்ல.எனக்கு கூட அடிக்கடி உன் ஞாபகம் வரும் தெரியுமா.
நான்

அட போடா வாழ்க்கையே வெறுப்பா இருக்கு..பிரண்ட்ஸ்,அம்மா எல்லாரையும் பிரிஞ்சி தனியா இருக்கவே முடியலை..அதான் இப்படி வந்து பார்த்துட்டு போகலாமுன்னு வந்தேன் -அனி

ஏழு வருசமாச்சு இன்னும் அப்படியே தான் இருக்க.இன்னும் மாறலை நீ.. இப்ப நல்லா இருக்கியான்னு கேக்க தான் ஆசை ..ஆனால் முடியலை.உன் கூட யாராச்சும் பேசுவாங்களா நீ இருக்கர இடத்தில் என்றேன்

அப்படியே என் தோளில் சாய்ந்து 'டேய் யாரு என்ன தான் பேசினாலும் நம்ம லாம் விளையாடிட்டு இருந்த மாதிரி இருக்குமா ..எப்படிலாம் பேசுவோம்டா நாம..ஆண் பெண் மாதிரியா டா பழகுவோம்..அப்படிலாம் இன்னும் யாரும் வரலைடா..என்றாள்..

நான் எதுவுமே பேசமுடியாமல் ம்ம் கொட்டினேன்..

சரிடா ஆமாம் நீ லவ் பண்ணிட்டிருந்தியே அவளையே மேரேஜ் பண்னிட்டியான்னு கேட்டாள்.

எங்க எல்லாம் ஊத்திகிச்சு ஏதோ நானும் வேலைக்கு போனேன். வந்தேன்னு இருக்கறேன்.என்ன பண்ண..என்று வழக்கம் போல் அவகிட்டயும் இராமயணம் பாடி முடிச்சேன்..

ஏண்டா எனக்கு தான் எதுவும் சரியா அமையலை..உனக்குமா???????- அனி

ம்க்கும்..போடி லூசு நீ மட்டும் அவசரபடாம இருந்திருந்தா எல்லாமே நல்லபடியா நடந்திருக்கும்..நீயும் இப்ப உன் பையனோட வந்து என் வீட்டில் விருந்து சாப்பிட்டிருப்ப..இப்ப பாரு எத்தனையோ வருசம் கழிச்சு சந்திக்கிறோம்..என்றேன் நான்

சரி விடுடா.நான் தான் அவசர பட்டுட்டேன்.இப்ப யோசிச்சு என்ன பண்றது..-அனி

போடி லூசு..லைப்ப அனுபவிக்க தெரியாம தப்பு பண்ணிட்டு இப்ப புலம்புற- நான்

சரி சரி விடு .இன்னும் புராணம் பாடுறத விடலையா நீ...போற வழியில் தான சுடுகாடு அங்க இறங்கிக்குறேன்.கொஞ்சம் ட்ராப் பண்ணிடுடா- அனி பேசி முடித்தாள்..

ஆமாம் அனி செத்து ஏழு வருசமாயிடுச்சில்ல..கனவு கலைஞ்சு நாணும் எழுந்து ஒரு நிமிசம் உட்கார்ந்து மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டுகிட்டு இருந்தேன்..